777 அருள்மாதா ஆலயம், முப்பையூர்

    

அருள்மாதா ஆலயம்

இடம்: முப்பையூர்

மாவட்டம்: சிவகங்கை

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: R. S. மங்கலம்

பங்குத்தந்தை: அருட்பணி. பெர்னார்டின் செல்வதுரை, OSM

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. அந்தோணிசாமி, OSM

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வாயுலானேந்தல்

2. புனித அடைக்கல அன்னை ஆலயம், வெட்டிவயல்

3. புனித பதுவை அந்தோணியார் ஆலயம், அந்தோணியார்புரம்

4. புனித அருளானந்தர் ஆலயம், விளாங்காட்டூர்

5. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், ஆந்தகுடி

6. புனித அடைக்கல அன்னை ஆலயம், மேக்காரைக்குடி

7. குழந்தை இயேசு ஆலயம், காடாவயல்

8. புனித செபஸ்தியார் ஆலயம், நரிக்கன்வயல்

9. புனித அருளானந்தர் ஆலயம், கொடுங்குளம்

10. புனித பதுவை அந்தோணியார் ஆலயம், பாண்டியன்கோட்டை

11. புனித வளனார் ஆலயம், கீழ்மருதங்குளம்

12. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், பெரம்புவயல்

13. புனித அடைக்கல அன்னை ஆலயம், செவ்வாய்ப்பேட்டை

14. புனித சந்தியாகப்பர் ஆலயம், பாவாசி

15. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஏந்தல்

16. புனித அருளானந்தர் ஆலயம், பொதுவக்குடி

17. புனித பதுவை அந்தோணியார் ஆலயம், கைலாசபுரம்

18. புனித அருள்மாதா ஆலயம், வென்னியூர்

19. புனித அருள்மாதா ஆலயம், பொன்னக்கரை

20. புனித அருள்மாதா ஆலயம், அருள்மாதா நகர்

குடும்பங்கள்: 294 (கிளைப் பங்குகள் சேர்த்து)

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணிக்கு

வாரநாட்களில் கிளைப் பங்குகளில் திருப்பலி

மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 05:30 மணி புனித பெரகிரினார் நவநாள் திருப்பலி

திருவிழா: மே மாதம் மூன்றாம் வாரத்தில் மூன்று நாட்கள்

வழித்தடம்: மதுரை -தொண்டி -காளையார்கோவில் -சருகணி -முப்பையூர்.

Location map:

https://g.co/kgs/8yXLn7

வரலாறு:

1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் மரியின் ஊழியர் சபை (OSM) அருட்பணியாளர்களின் பாதுகாவலர் புனித அந்தோணி மரிய பூச்சி அவர்களின் பெருவிழா அன்று, கடையனேந்தல் ஆலயத்தில் அருட்பணி. மைக்கேல் ராஜ் OSM, அருட்பணி.‌ உவரி அந்தோணி OSM ஆகிய இருவராலும் நிறைவேற்றப்பட்ட திருப்பலியின் போது, முப்பையூர் பங்கின் வித்து ஊன்றப்பட்டது.‌ மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களின் ஆசி மற்றும் அனுமதியுடன், அன்றிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை சி.கே மங்களத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அருட்தந்தையர்கள் மைக்கேல் ராஜ், உவரி அந்தோணி இருவரும் முப்பையூர் பகுதியில் இறைப்பணி செய்தார்கள். 

ஆரம்பத்தில் ஞாயிறு திருப்பலி கடையனேந்தலிலும், செவ்வாய்பேட்டையிலும் நடைபெற்று வந்தது.‌ இறைமக்களை ஒன்று சேர்க்கும் வண்ணம் பின்னர், முப்பையூர் மையத்தில் தென்னை ஓலைக் கீற்றினால் ஒரு கொட்டகை ஆலயம் அமைத்து, 07.07.1996 முதல் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் நாள் மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால்  முப்பையூர் அருள்மாதா ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. மைக்கேல் ராஜ், OSM அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

1997ல் சிவகங்கை மறைமாவட்டத்தின் 55-வது பங்காக அறிவிக்கப்பட்ட அருள்மாதா ஆலயம், 18 கிளை கிராமங்களை உள்ளடக்கியது ஆகும். இவைகளில் பெரும்பகுதி சி.கே மங்களத்தில் (கைகாட்டி) இருந்தும், மற்றவை சருகணி, புளியால் மற்றும் கீழ உச்சாணி ஆகிய பங்குகளில் இருந்தும் எடுக்கப்பட்டவையாகும்.

தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு, 11.10.2000 அன்று மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

முப்பையூர் மையத்தில் பல்வேறு பணிகளும் நடத்தப்பட்டு வருவதால் "செனாரியோ மையம்" என்று அழைக்கப்பட்டு வருகிறது.

மரியின் ஊழியர் சபையை (OSM) தோற்றுவித்த ஏழு புனிதர்கள் வாழ்ந்த செனாரியோ மலையை, இது நமக்கு நினைவூட்டுகிறது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 2016 வரைக்கும்  மையத்தில், இடைநின்றோர் பள்ளி (Remedial School) நடத்தப்பட்டது. மேலும் தையல் மற்றும் கைவினை கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது இவைகள் இந்த மையத்தில் செயல்படவில்லை. 

2006 ஆம் ஆண்டு மௌண்ட் செனாரியோ மெட்ரிகுலேஷன் பள்ளி (Mount Sernario Matriculation School) ஆரம்பிக்கப்பட்டு சிறந்த கல்விச் சேவையை வழங்கி, 2018ஆம் ஆண்டிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது.

மரியின் ஊழியர் சபை (OSM) அருட்பணியாளர்களின் வழிகாட்டலில் சிறப்பாக ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது முப்பையூர் பங்கு இறைசமூகம்.

பங்கின் பக்தசபைகள் மற்றும் இயக்கங்கள்:

1. பங்குப் பேரவை

2. நிதிக்குழு

3. அன்பியங்கள்

4. மரியாயின் சேனை

5. புனித வின்சென்ட் தே பவுல் சபை

6. ஆலய பராமரிப்பு குழு

7. இளைஞர்

8. இளம் தம்பதியர்

9. அலங்காரம் மகளிர்

10. மறைக்கல்வி

11. விவசாய சங்கம்

12. விதவையர் சங்கம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. மைக்கில்ராஜ், OSM (1995-1997)

2. அருட்பணி. இரட்சண்யதாஸ், OSM (1997-2001)

3. அருட்பணி. இயேசுதாஸ், OSM (2001-2004)

4. அருட்பணி.‌ உவரி அந்தோணி, OSM (2004-2007)

5. அருட்பணி. யேசுராசையா, OSM (2007-2010)

6. அருட்பணி. ஜான் பிரிட்டோ, OSM (2010-2017)

7. அருட்பணி. ஞானப்பிரகாசம், OSM (2017-2018)

8. அருட்பணி. மைக்கில்ராஜ், OSM (2018-2021)

9. அருட்பணி. பெர்னார்டின் செல்வதுரை, OSM (2021 முதல்....)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப்பணியாளர் அருட்பணி. பெர்னார்டின் செல்வதுரை, OSM