இடம் : தாமனூர், இல்லோடு வழி, செஞ்சி தாலுகா, தாமனூர் அஞ்சல்
மாவட்டம்: விழுப்புரம்
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: திண்டிவனம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: தூய லூர்து அன்னை ஆலயம், மேல்சித்தாமூர்
பங்குத்தந்தை அருள்பணி. அ. ஆரோக்கியதாஸ்
குடும்பங்கள்: 80
ஞாயிறு திருப்பலி மாலை 07:00 மணி
திருவிழா: ஜூன் மாதம் 10 ம் தேதி கொடியேற்றம், 13 ம் தேதி திருவிழா, 14 ம் தேதி கொடியிறக்கம்
தாமனூர் மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்பணி. L. சுரேஷ், SDB
2. அருள்சகோதரி. S. ஜான் பெர்க்மான்ஸ், SJC
3. அருள்சகோதரி. A. பேபி தெரேசா, FSAG
4. அருள்சகோதரி. A. பெரியநாயகி, CSA
5. அருள்சகோதரி. R. வேளாங்கண்ணி, CSSH
6. அருள்சகோதரி. S. ஜெயக்குமாரி, FSJ
7. அருள்சகோதரி. I. டெல்பின், FSJ
8. அருள்சகோதரி. A. பிலோமினா, FSJ
வழித்தடம்: செஞ்சி -வந்தவாசி வழித்தடத்தில் தாமனூர் அமைந்துள்ளது.
வரலாறு:
"ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை"
திருப்பாடல்கள் 12:6
⛰️சுற்றிலும் மலைக்குன்றுகளால் சூழப்பட்ட அழகிய கிராமம் தாமனூர். ஆகவே 'தங்கமலை தாமனூர்' என்னும் சிறப்பு பெயர் பெற்ற இவ்வூரின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள, புதுமைகள் பல புரியும் புனித அந்தோணியார் ஆலய வரலாற்றைக் காண்போம்....
தாமனூர் பகுதியில் மேல்சித்தாமூர் பங்குத்தந்தை அருள்பணி. ஜான்மரி ஷவனல் அடிகளாரின் மறைப்பரப்பு பணியால் மக்கள் கத்தோலிக்கம் தழுவினர்.
அருள்பணி. ஜான்மரி ஷவனல் அவர்கள் கி.பி 1920 ஆம் ஆண்டு தாமனூரில் ஆலயம் கட்டினார். மேலும் இதே ஆண்டில் பள்ளிக்கூடத்தையும் அமைத்தார்.
இங்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத தொடக்க கால கட்டங்களில், அருட்பணியாளர்கள் வண்டிகட்டிக் கொண்டு இரவு இவ்வூரிலேயே தங்கி திருப்பலி நிறைவேற்றி விட்டு, மறுதினம் காலையில் திரும்பிச் செல்வார்கள்.
இங்கு பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் வேதியர்களாகவும், பங்குத்தந்தைக்கு பதிலாளாகவும் இருந்து மறைக்கல்வி கற்றுக் கொடுப்பதும் மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி வந்தனர்.
பழையஆலயம் பழுதடைந்ததால் அது அகற்றப்பட்டு, இரண்டாவது ஆலயம் 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக வேதியராக திரு. A. ஜான்சன் அவர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.
விசுவாசம் நிறைந்த மக்கள். ஆகவே மறைப்பரப்பு பணிக்காக 8 இறையடியவர்களை திருச்சபைக்கு தந்துள்ளனர்.
பங்கு ஆலயத்திலிருந்து 27 கி.மீ தொலைவில் தாமனூர் ஆலயம் அமைந்துள்ளது மறைப்பணிக்கு சற்று சவாலாக உள்ளது. இருந்தாலும் பங்குத்தந்தையர்களின் அர்ப்பணிப்பும், வழிகாட்டுதலும் சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ஆலய விழாக்கள்:
1. ஜூன் மாதத்தில் புனித அந்தோணியார் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜூன் 10ம் தேதி மாலையில் கொடியேற்றம், 13ம் தேதி காலையில் திருவிழா திருப்பலி மாலையில் தேர்பவனி. 14 ம் தேதி காலையில் கொடியிறக்கப்பட்டு, புனித அந்தோணியாருக்கு "வேண்டுதல் கூழ் வார்த்தல்" சிறப்பாக நடைபெறும். அதாவது இறைமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வரும் கூழ் மந்திரிக்கப்பட்டு, அனைவரும் உண்டு மகிழ்வார்கள். இந்த கூழ் வார்த்தல் நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடைபெறுகிறது.
2. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01-ம் தேதி இளையோர் குழுவினரால் நவநாள் நடத்தப்பட்டு, தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.
3. மே மாதம் 31-ம் தேதியன்று இளையோர் குழுவால், ஆலயத்தின் அருகில் உள்ள பாறையின் மேல் கட்டப்பட்ட தூய லூர்து அன்னை கெபியில் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
4. அற்புத குழந்தை இயேசு கெபி கட்டப்பட்டு, நவநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கல்வி நிறுவனம்:
ஆர்.சி தொடக்கப்பள்ளி, தாமனூர்
ஆலய பங்கேற்பு அமைப்புகள்:
1. மறைக்கல்வி
2. இளையோர் குழுக்கள்
3. பாடகற்குழு
4. ஜெபக்குழு
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:
பங்குத்தந்தை அருள்பணி. அ. ஆரோக்கியதாஸ்