இடம்: K. K புதூர், மதுராந்தகம், 603303
மாவட்டம்: செங்கல்பட்டு
மறைமாவட்டம்: செங்கல்பட்டு
மறைவட்டம்: மதுராந்தகம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித சகாய மாதா ஆலயம், கீழவலம்
2. புனித அந்தோனியார் ஆலயம், இருசாமநல்லூர்
3. பாத்திமாநகர்
4. குழந்தை இயேசு நகர்
5. பூண்டிநகர்
பங்குத்தந்தை: அருட்பணி. C. L. சில்வஸ்டர் பிரதீப்
குடும்பங்கள்: 310 (கிளைப் பங்குகள் சேர்த்து 450)
அன்பியங்கள்: 10
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி
திங்கள், செவ்வாய், வியாழன், சனி திருப்பலி காலை 06:30 மணி
புதன், வெள்ளி திருப்பலி மாலை 07:00 மணி
சனி மாலை 07:00 மணி திருப்பலி (கிளைப்பங்கு -கீழவலம்)
செவ்வாய் மாலை 07:00 மணி திருப்பலி (கிளைப்பங்கு -இருசாமநல்லூர்)
முதல் செவ்வாய் மாலை 07:00 மணி புனித அந்தோனியார் தேர்பவனி
தல் புதன் மாலை 07:00 மணி புனித சூசையப்பர் தேர்பவனி
முதல் வெள்ளி மாலை 07:00 மணி திருஇருதய ஆண்டவர் தேர்பவனி
முதல் சனி மாலை 07:00 மணி மாதா தேர்பவனி
முதல் வியாழன் மாலை 07:00 மணி (கிளைப்பங்கு பாத்திமாநகர் -கெபியில்)
திருவிழா: ஏப்ரல் 29, 30 மே 1
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்பணியாளர்கள்:
1. அருட்பணி. புஷ்பராஜ், கர்நாடகா
2. அருட்பணி. ஜான் போஸ்கோ, சென்னை -மயிலை
3. அருட்பணி. ஜான் மரிய ஜோசப், சென்னை -மயிலை
4. அருட்பணி. ஆரோக்கியசாமி, அமெரிக்கா
5. அருட்பணி. லாரன்ஸ், அமெரிக்கா
6. அருட்பணி. டோமினிக், அயல்நாடு
7. அருட்பணி. அகஸ்டின், நெல்லூர்
8. அருட்பணி. பாக்கியராஜ், செங்கல்பட்டு
9. அருட்பணி. மைக்கேல் அலெக்சாண்டர், செங்கல்பட்டு
10. அருட்பணி. ஜேம்ஸ், SDC
11. அருட்பணி. தும்மா, புதுவை -கடலூர்
12. அருட்பணி. பால்ராஜ், அமெரிக்கா
13. அருட்பணி. மைக்கேல், SJC
14. அருட்பணி. ஆன்றனிராஜ், அயல்நாடு
15. அருட்பணி. தாமஸ் லூர்து, பெல்லாரி
16. அருட்பணி. சதீஷ், செங்கல்பட்டு
17. அருட்பணி. அலெக்சாண்டர் பாலாசாமி, MMI
அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. தமிழ்செல்வி
2. அருட்சகோதரி. அமலா
3. அருட்சகோதரி. நிர்மலா மேரி
4. அருட்சகோதரி. ஸ்டெல்லா மேரி
5. அருட்சகோதரி. ஆஷா பிரின்சி
வழித்தடம்: சென்னை செங்கல்பட்டு மதுராந்தகம் வழித்தடத்தில், மதுராந்தகத்திற்கு முன்னால் கருங்குழி பேருந்து நிறுத்தம். அங்கிருந்து 6கி.மீ தொலைவில் கே.கே புதூர் அமைந்துள்ளது.
மதுராந்தகம் -கருங்குழி -கே.கே புதூர் 6கி.மீ
Location map: https://g.co/kgs/Y1guwD
வரலாறு:
கே. கே. புதூர் தலதிருச்சபை 1857 ஆம் ஆண்டில்பிரெஞ்சு மிஷனரிகளால் (MEP Father's) நிறுவப்பட்டு, ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. கே. கே புதூர் சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள மிகப் பழைமையான ஆலயங்களின் ஒன்றாகும்.
1896 முதல், MEP அருள்தந்தையர்கள் மிகச் சிறப்பாக பணிபுரிந்து கே.கே புதூர் பங்கின் வளர்ச்சிக்கு வழிவகுத்தனர்.
1899 ஆம் ஆண்டு கே.கே புதூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. பல அருள்தந்தையர்கள் கே கே புதூரில் தங்கியிருந்து கிராம மக்களை சந்தித்து மறைப்பணியாற்றி வந்தனர். ஆந்திராவில் இருந்து கிறிஸ்தவம் தழுவிய மக்கள் இங்கு வந்து, இந்த கிராமத்தில் குடியேறினர்.
தற்போதைய ஆலயமானது, அருட்பணி. சிங்கராயர் அவர்களின் பெரும்முயற்சியால் மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு, 01.05.2006 அன்று செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. A. நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பங்கில் உள்ள கெபிகள்:
புனித அந்தோனியார் கெபி
புனித லூர்து மாதா கெபி
வேளாங்கண்ணி மாதா கெபி
பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:
St. Joseph's High School
St. Joseph's Primary School (Girls)
புனித சூசையப்பர் இல்லம்
இவற்றை பாண்டிச்சேரி தூய இதய மரியன்னை சபை, அருட்சகோதரிகள் வழிநடத்தி வருகின்றனர்.
ஆர்.சி துவக்கப் பள்ளி (ஆண்கள்) பங்குத்தந்தை -யின் பராமரிப்பில் செயல்படுகிறது.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. பங்குப்பேரவை
2. மரியாயின் சேனை
3. பாடகற்குழு
4. மறைக்கல்வி
5. இளையோர் இயக்கம்
6. பீடச் சிறார்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
(புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் பொறுப்பில்)
1. Rev. Fr. C. L. Antoine (1869-1871)
2. Rev. Fr. A. Abraham (1871-1874)
3. Rev. Fr. S. Selvanathar (1874-1875)
4. Rev. Fr. C. L. Antoine (1875-1886)
5. Rev. Fr. C. M. Mignery (1886-1893)
6. Rev. Fr. Gabillet (1893-1897)
7. Rev. Fr. C. M. Mignery (1893-1897)
8. Rev. Fr. J. L. Giraud (1897-1898)
9. Rev. Fr. M. D. Royan (1898-1914)
10. Rev. Fr. T. Rajendran (1914-1930)
11. Rev. Fr. Maria Dominic (1930-1931)
12. Rev. Fr. Paul Arokiam (1931-1942)
13. Rev. Fr. S. Paul (1943-1943)
14. Rev. Fr. Issac (1943-1947)
15. Rev. Fr. R. Savarinather (1947-1956)
16. Rev. Fr. S. Vellankanni (1956-1963)
17. Rev. Fr. Vallabanather (1963-1969)
18. Rev. Fr. B. Rayappan (1969-1972)
(சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பொறுப்பில்)
19. Rev. Fr. P. Rayanna (1972-1973)
20. Rev. Fr. D. Arokiasamy (1973-1977)
21. Rev. Fr. S. Iruthayaraj (1977-1978)
22. Rev. Fr. L. C. Rayanna (1978-1987)
23. Rev. Fr. Thomas Selvaraj (1987-1993)
24. Rev. Fr. A. Gnanapragasam (1993-1995)
25. Rev. Fr. K. S. Lawrence (1995-2000)
(செங்கல்பட்டு மறைமாவட்ட பொறுப்பில்)
26. Rev. Fr. Shylock Stephen (2000-2003)
27. Rev. Fr. P. Singarayar (2003-2008)
28. Rev. Fr. Sebastian George (2008-2013)
29. Rev. Fr. M. John Kurien (2013-2014)
30. Rev. Fr. A. J. Christian (2014- 2017) (Tuticorin)
31. Rev. Fr. C. L. Sylvester Pradeep (2017 to till today..)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. சில்வஸ்டர் பிரதீப்.