522 தூய தோமையார் ஆலயம், சின்னமுட்டம்


தூய தோமையார் ஆலயம்
இடம் : சின்னமுட்டம்

பாதுகாவலர்: தூய தோமையார்
இணை பாதுகாவலர்: தூய செபஸ்தியார்

மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டாறு
மறைவட்டம்: கன்னியாகுமரி

நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை: அருட்பணி. H. கிளாசின்

குடும்பங்கள்: 650
மக்கள்தொகை: 3500
அன்பியங்கள்: 22

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 05.30 மணிக்கு முதல் திருப்பலி, காலை 07.00 மணிக்கு இரண்டாம் திருப்பலி,
காலை 08.30 மணிக்கு திருமுழுக்கு அருட்சாதனம்.

திங்கள் காலை 06.15 மணிக்கு :
தூய தோமையார் நவநாள் திருப்பலி.

செவ்வாய் காலை 06.15 மணிக்கு
திருப்பலி.

புதன் மாலை 06.15 மணிக்கு
சகாய மாதா நவநாள் திருப்பலி.

வியாழன் காலை 06.15 மணிக்கு
குழந்தை இயேசு நவநாள் திருப்பலி.

வெள்ளி மாலை 06.15 மணிக்கு திருப்பலி.

மாதத்தின் முதல் மாலை 06.15 மணிக்கு
திருப்பலி,
நற்கருணை ஆசீர்.

இரண்டாம் வெள்ளி மாலை 06.15 மணிக்கு திருப்பலி, நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கு நற்கருணை வழங்குதல்.

சனி
காலை 06.15 மணிக்கு
சிறார் சிறப்புத் திருப்பலி.

அருளடையாளங்கள் :

1. திருமுழுக்கு:
எல்லா ஞாயிறு காலை திருப்பலியின் போது வழங்கப்படும்.

2. முதல் திருவிருந்து:
மாதத்தின் இரண்டாவது ஞாயிறு காலை திருப்பலியின் போது மற்றும் பாதுகாவலர் விழா.

3. திருமணம்:
காலை 10.30 மணிக்குள் (ஞாயிறு நீங்கலாக)

4. உறுதி பூசுதல்:
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயரின் பங்கு சந்திப்பில்

5. நோயில் பூசுதல்:
தேவையின் அடிப்படையில்

6. ஒப்புரவு:
திருவருகை காலம், தவக்காலம், பாதுகாவலர் விழா.

திருவிழா: ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தூய தோமையாரின் பெயர் கொண்ட திருவிழாவும், மேலும் காலாண்டு விடுமுறை நாட்களில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 10 நாட்கள் பங்கின் பாதுகாவலர் குடும்பவிழா நடைபெறும்.

குருசடி திருவிழாக்கள்:

1. தூய செபஸ்தியார் குருசடி: இப் பங்கின் இணைபாதுகாவலர் தூய செயஸ்தியார் திருவிழா சனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

2. தூய ஜார்ஜியார் குருசடி: கேரளா பெரிய எடத்துவா திருவிழா முடிந்த அடுத்த வாரம் நடைபெறும்.

3. தூய அந்தோனியார் குருசடி: ஜூன் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் நடைபெறும்.

4. குழந்தையேசு குருசடி : சனவரி இரண்டாம் வாரம் நடைபெறும்.

5. தோமையார் குருசடி

மண்ணில் இறை அழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்
1. அருட்பணி. செல்வம், SDB
2. அருட்பணி. பாரத், SDB
3. அருட்பணி. பபியான்ஸ் (கோட்டாறு மறைமாவட்டம்)

அருட்சகோதரர்கள்:
1. அருட்சகோதரர். சகாய மிலன் (இறையியல் கோட்டாறு மறைமாவட்டம்)
2. அருட்சகோதரர். அர்னால்டு (இறையியல், ஜெர்மனி)

அருட்சகோதரிகள்:
1.அருட்சகோதரி. ஆக்னஸ் மேரி, SAT
2. அருட்சகோதரி. ஷைலஜா, SAT
3. அருட்சகோதரி. சரோஜினி, SAT
4. அருட்சகோதரி. சேசு பிரியங்கா, CTC
5. அருட்சகோதரி. ஆரோக்கிய சசி, CTC
6. அருட்சகோதரி. சுபிதா, DMI
7. அருட்சகோதரி. பிரதிபா, DW.

வழித்தடங்கள் :
நாகர்கோவில் - சுசீந்திரம் கொட்டாரம் விவேகானந்தபுரம் மாதவபரம் சின்னமுட்டம்

Bus route : 1, 1H, 1E, 2, 303

Location map :
https://maps.app.goo.gl/YjRshNoN16eCknWDA

பங்கில் பணியாற்றிய அருள்பணியாளர்கள்
1. அருட்பணி. ஜெரேமியாஸ் (16.10.1999 – 15.05.2002)
2. அருட்பணி. ராஜ் (15.02.2002 – 03.06.2007)
3. அருட்பணி. மரிய செல்வன் (03.06.2007 – 05.07.2012)
4. அருட்பணி. அருள் (05.07.2012 – 09.02.2013)
5. அருட்பணி. கிறிஸ்துராஜ் (09.02.2013 – 18.05.2016)
6. அருட்பணி. ரூபஸ் (18.05.2016 – 11.05.2018)
7. அருட்பணி. பென்சிகர் (11.05.2018 – 18.05.2019)
8. அருட்பணி. கிளாசின் (18.05.2019 – முதல் தற்போது வரை..)

வரலாறு வாழ்வாக…

குமரி மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ள துறைமுக கிராமமே சின்னமுட்டம். இங்குள்ள மக்கள் தூய தோமையார் (கி.பி.52) மற்றும் தூய பிரான்சிஸ் சவேரியார் (கி.பி.1543) இவர்களால் மனமாற்றம் செய்யப்பட்டவர்கள். குமரிமுட்டம் என்றும் கலைமுட்டம் என்றும் சிறப்பு பெயர்கள் பெற்ற இப்பங்கின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 3500.

கன்னியாகுமரி பங்கிலிருந்து 16-10-1999 அன்று தனிப்பங்காக உருவான சின்னமுட்டத்தில் அமைந்துள்ள முக்கோபுர சிறப்பு வாய்ந்த தூய தோமையார் ஆலயம் 03-03-1992-ல் அடிக்கல் நாட்டப்பட்டு மக்களின் தாராள நன்கொடையால் 20-04-1999-ல் நிறைவு பெற்று மறைந்த முன்னாள் ஆயர் மேதகு லியோண் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆலயம் உருவாவதற்கு முன்னரே இருந்த தூய செபஸ்தியார் சிற்றாலயம் இன்று குருசடியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் துறைமுகத்திற்கு அருகில் கடல்நடுவில் அமைந்துள்ள வெள்ளியல் பாறையில் 27-04-2003-ல் வெண்கல திருச்சிலுவை நிறுவப் பட்டுள்ளது.

இங்குள்ள தொம்மைக் குருசடி, தொம்மைக் கிணறு, செபஸ்தியார் கிணறு, எட்டுவீட்டுத் தெரு போன்றவைகள் வரலாற்றை பறைசாற்றும் பழைமைச் சான்றுகளாகும்.

வாழ்வை வரலாறாக…

22 அன்பியங்களைத் தன்னகத்தே கொண்ட இப்பங்கு 6 அன்பியங்கள் வீதம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு குருசடி மையமாக அமைந்துள்ளது. இது தவிர தூய தோமையார் விசைப்படகுகள் பழுதுபார்க்கும் கூடத்திலும் குருசடி ஒன்று உள்ளது.

1984-ல் நீலக்கடல் பள்ளி எனத்தோன்றி 16-06-1986-ல் தூய தோமா துவக்கப்பள்ளியாக மலர்ந்து இன்று வெள்ளிவிழா கடந்து பயணம் தொடரும் பள்ளிக்கூடம், சுயநிதி கல்விக்கூடமாகவே பங்குமக்களால் நடத்தப்பட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

மழலைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு 03-07-2001-ல் ஆரம்பிக்கப்பட்ட தூய தோமையார் பாலர்பள்ளி இரண்டு அரசு குழந்தைகள் மையங்களாக தற்போது செயல்படுகிறது. 02-06-2010 அன்று உருவான தூய தோமையார் ஆங்கிலப்பள்ளி --- எனத் துவங்கி ஆண்டுதோறும் ஒரு வகுப்பு வீதம் வளர்ந்து வருகிறது.

பல்சமய மக்களும் நல்லிணக்கத்தோடு தொழில் மற்றும் வியாபாரம் புரியும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தின் அருகில் 03-08-2009 அன்று கடற்கரையில் கடல்புதுமை மாதா சுரூபம் அதிசயமான முறையில் கிடைக்கப்பெற்று, ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

துறவற சபையின் பெயர்: பல்லோட்டின் சபை அருட்சகோதரிகள்.

பாதுகாவலர்: புனித வின்சென்ட் பல்லோட்டி.

சபை பங்கில் வந்த ஆண்டு: 2010

துறவிகளின் எண்ணிக்கை: 5

அருட் சகோதரிகளின் பெயர்கள்:
1. அருட்சகோதரி. நிஷா
2. அருட்சகோதரி. சிசி
3. அருட் சகோதரி. எஸ்தர்
4. அருட்சகோதரி. ஷீஜா
5. அருட்சகோதரி. ஜெரால்ட் செலினா

பங்கில் உள்ள கல்வி நிறுவனம்:
புனித தோமையார் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, சின்னமுட்டம்.

கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் பணிக்குழுக்கள் இயக்கங்கள் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்கு அருட்பணிப்பேரவை
2. அன்பிய ஒருங்கிணையம்
3. பக்தசபைகளின் ஒருங்கிணையம்
4. திருவழிபாட்டுக் குழு
5. மறைக்கல்வி மன்றம்
6. நற்செய்தி பணிக்குழு
7. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
8. கத்தோலிக்க சேவா சங்கம்
9. வின்சென்ட் தே பவுல் சங்கம்
10. மரியாயின் சேனை (ஆண்கள் & பெண்கள்)
11. இளைஞர் இயக்கம் (ஆண்கள் & பெண்கள்)
12. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
13. பாலர் சபை
14. சிறுவழி இயக்கம்
15. பீடச்சிறார்கள்
16. பாடகற்குழு
17. தோழமை சங்கங்கள்
18. கோல்பின் இயக்கம்.

கடலின் அழகையும், வானளாவிய அழகிய ஆலயத்தையும் ஒருங்கே பெற்ற சின்னமுட்டம் வாருங்கள். இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. கிளாசின் அவர்கள்.