725 புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க ஆலயம், உண்ணாமலைக்கடை

  

புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்

இடம் : உண்ணாமலைக்கடை, உண்ணாமலைக்கடை அஞ்சல்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: மார்த்தாண்டம்

மறைவட்டம்: மார்த்தாண்டம்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருள்தந்தை. P. பெனட்

Contact no: +91 97894 36516

குடும்பங்கள் : 160

அருள் வாழ்வியங்கள் : 8

வழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு காலை 07.00 மணி காலை செபம், தொடர்ந்து திருப்பலி

நாள்தோறும் காலை 06.15 மணி காலை ஜெபம், திருப்பலி

புதன் மாலை 05.30 மணி செபமாலை திருப்பலி (ஆலயத்தில்) தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா நவநாள் (குருசடியில்)

திருவிழா : மே மாதம் 01-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. ஆல்பி, DM

2. அருட்சகோதரர். ஜெகின்

வழித்தடம்:

மார்த்தாண்டம் -குலசேகரம் வழித்தடத்தில், மார்த்தாண்டத்திலிருந்து 2கி.மீ தொலைவில் உண்ணாமலைக்கடை அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/wjFtmm

வரலாறு:

உண்ணாமலைக்கடை ஊரில் உழைப்போர் நலம் காத்து வழிநடத்தும் புனித சூசையப்பர் தேவாலயம் உருவாக வேண்டும் என்ற இறை விருப்பத்திற்கிணங்க, அவரால் வழிநடத்தப்பட்ட திரு. K. பொன்னுசாமி - G. றோசம்மாள் தம்பதியர் இணைந்து, தாழ்ச்சியின் சின்னமாகிய அருள்தந்தை மோண் ஜோசப் குழிஞ்ஞாலில்  அவர்களை பாகோடு ஊரில் சென்று சந்தித்து, உண்ணாமலைக்கடையில் ஆலயம் கட்ட வேண்டும் எனவும், 50 சென்ட் நிலம் விற்பனைக்காக உள்ளது எனவும், அதனை வாங்கினால் ஆலயம் அமைக்க வசதியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். மக்களின் ஆவலையும் ஈடுபாட்டையும் கண்ட அருள்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஒரு சென்ட் ரூ.50 வீதம், ஐம்பது சென்ட் நிலத்தையும் விலைக்கு வாங்கி சுற்றிலும் மதிற்சுவரையும் கட்டினார். 

முதலில் ஒரு சிறிய ஓலைக்கூரை ஆலயம் அமைக்கப்பட்டது.‌ இந்த ஓலைக்கூடார ஆலயத்தில் திருப்பலியில் பயன்படுத்தும் புனிதப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க வசதி இல்லாமலும், மற்றும் எதிர்ப்புகளும் நிலவி வந்ததால், ஆலயத்தின் எதிரில் அமைந்துள்ள திரு. பொன்னுசாமி அவர்களின் வீட்டின் முன்பகுதியில் உள்ள ஒரு அறையில் திருப்பலி பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறையின் திறவுகோல் அப்போது பணிபுரிந்து வந்த அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய ஆலயம் கட்டும் வரையில் திருப்பலி புனிதப் பொருட்கள் இந்த அறையில் தான் வைக்கப்பட்டு வந்தது.

அந்த காலகட்டத்தில் ஆலயத்தில் பணிபுரிந்த அருட்சகோதரிகளும், உபதேசியாராக பணிபுரிந்த திரு. மாசிலாமணி என்பவரும் இணைந்து, தினமும் காலை முதல் மாலை வரை உண்ணாமலைக்கடை பகுதியில் கிறிஸ்துவை அறிந்திராத மக்களின் இல்லங்கள் சென்று, அவர்களிடம் கலந்துரையாடி, இறைவார்த்தையை விதைத்தும், ஜெபிக்க கற்றுக் கொடுத்தும், மருத்துவ உதவி, உணவு கொடுத்தும், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்தார்கள்.

அருள்தந்தை. ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்களின் அரும்பெரும் முயற்சியால் ஆலயம் கட்டப்பட்டு, 10.10.1960 அன்று மேதகு துணை ஆயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை மற்றும் அருட்சகோதரிகளும் இணைந்து ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்தனர். அன்று ஆலயத்திற்கு 50 நபர்கள் மட்டுமே வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கப்பட்டு கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக் கொண்டனர்.

நாட்கள் செல்லச்செல்ல ஆலயத்திற்கு வரும் இறைமக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. 

அருள்தந்தை. ஜோசப் குந்நத் (1961-1964): 

அருள்தந்தை. மாத்யூ வாழபிளேத் (1964-1967): இந்த காலகட்டத்தில் அருட்சகோதரி.‌ மேரி ஜூலியானா அவர்களும் பணியாற்றி வந்தார்.

அருள்தந்தை. வர்கீஸ் பெருமலை அவர்கள் 1967 ஆம் ஆண்டில் சில மாதங்கள் பணியாற்றினார்.

அதன்பின், தற்போது மாவேலிக்கர மறைமாவட்ட ஆயராக பணியாற்றி வரும் மேதகு ஆயர் ஜோஷ்வா மார் இக்னாத்தியோஸ் அவர்கள் பணிபுரிந்தார். இவ்வேளையில் பணிபுரிந்த அருட்சகோதரி. ஜெஜிற்றா அவர்களின் அயராத முயற்சியினால் இறைமக்கள் அதிகமாக ஆலயம் வர ஆரம்பித்தனர்.

அதன்பிறகு 1967 ஆம் ஆண்டு அருள்தந்தை. சாமுவேல் தெங்குவிளையில் பணி பொறுப்பேற்று, ஆலயத்தில் இடநெருக்கடியாக உள்ளது, ஆகவே புதிய ஆலயம் கட்டித்தர வேண்டும் என்று மேதகு ஆயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களிடம் கேட்டுக் கொண்டதன் விளைவாக, ஆயரின் உதவியுடன் புதிய ஆலயம் சரியாக ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டது. மேதகு ஆயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை திருவனந்தபுரம் நகரில் இருந்து வந்து ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார்.

அருள்தந்தை. ஜான் தாழையில் (1970-1971):

அருள்தந்தை.‌ மேத்யூ கடகம்பள்ளி (1974-1976):

அருள்தந்தை. தாமஸ் பூவணாயில் (1976-1978): 

அருள்தந்தை. பிலிப் செம்பகச்சேரி (1977-1980):

அருள்தந்தை. வர்கீஸ் மாவேலில் (1980-1982):

அருள்தந்தை. மேத்யூ பள்ளமுறியில் (1982-1996): சுமார் 15 ஆண்டு காலம் உண்ணாமலைக்கடையில் பணிபுரிந்தார். பங்கின் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த காலகட்டத்தில் மதர் விஜயா DM மற்றும் அருட்சகோதரி. மேரி ஜார்ஜ் அவர்களும் சிறப்பாக ஆன்மீகப் பணியாற்றி வந்தனர். 

அருள்தந்தை. ஜோசப் பருத்திவிளையில் (1996-1997):

அருள்தந்தை. ஜார்ஜ் தாவரத்தில் (1997-1998):

அருள்தந்தை. இராபின்சன் (1998-1999):

ருள் தந்தை. G. வர்கீஸ் (2000-ம் ஆண்டு சில மாதங்கள்)

அருள்தந்தை. ஜோசப் பத்ரோஸ் (2000-2004):

அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தி பங்கின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

பங்குத்தந்தை மற்றும் பல நல்லுள்ளங்களின் முயற்சியால் அழகிய குருசடி கட்டப்பட்டு, மேதகு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டோம் அவர்களால் 01.05.2002 அன்று அர்ச்சிக்கப்பட்டது.‌ இந்த காலகட்டத்தில் அருட்சகோதரி. ஆலீஸ் DM அவர்கள் சிறப்பாக ஆன்மீகப் பணியாற்றி வந்தார்.

அருள்தந்தை. பெர்னார்ட் (2004-2006): சமூக நலக்கூடம் மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டது. 

அருள்தந்தை. ஆல்பின் (2006-2007): அருள் வாழ்வியங்களுக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது. சமூக நலக்கூடத்தில் சமையலறை கட்டப்பட்டது. 

அருள்தந்தை.‌ ஜோஸ்பின் ராஜ் (2007-2010): ஆலய பொன்விழா கொண்டாட்ட தொடக்க நிகழ்வுகள் முன்னாள் ஆயர் மேதகு யூகானோன் மார் கிறிஸோஸ்டோம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.‌ கிறிஸ்துமஸ் காலத்தில் அருள்வாழ்வியங்களின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்து, பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

அருள்தந்தை. ஆன்றனி மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருள்தந்தை. வில்பிரட் (2010-2011): 

அருள்தந்தை. ஸ்டீபன் மாத்தார் (2011-2015): ஆலய மணிக்கூண்டு மற்றும் சமூக நலக்கூட மேல்த்தளம் ஆகியன கட்டப்பட்டன.

அருள்தந்தை. மரிய சோபு (2015-2017): தண்ணீர் போர்வெல் போடப்பட்டது. 

அருள்தந்தை. யூஜின் (2017-2019): குருக்கள் இல்லம் கட்டப்பட்டது. ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டது.

அருள்தந்தை. பெனட் (2019 முதல்..) ஆலயத்திற்கு அருகில் நிலம் வாங்கப்பட்டது. தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.

அருள்தந்தை. ரெதீஷ் ரிச்சர்ட் 2021 -ஆம் ஆண்டு முதல் உதவிப் பங்குத்தந்தையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பங்கில் உள்ள இல்லம், குருசடி:

1. வேளாங்கண்ணி மாதா குருசடி

2. பங்குத்தந்தை இல்லம்

3. புனித சூசையப்பர் சமூக நலக்கூடம்

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. கோல்பிங் இயக்கம்

4. மறைக்கல்வி

5. பாலர்சபை

6. தாய்மார் சங்கம்

7. MCYM (இளையோர்)

8. MCA (பெரியவர்)

9. பங்குப்பேரவை

10. பாடகற்குழு

11. பீடச்சிறார்

12. ஜெபக்குழு

13. அருள் வாழ்வியங்கள்

தொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்கும் உண்ணாமலைக்கடை புனித சூசையப்பர் ஆலயம் வாருங்கள்... புனிதரின் பரிந்துரையால் இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்தந்தை. பெனட் அவர்கள்.