690 புனித சூசையப்பர் திருத்தலம், சித்தாளந்தூர்

   
புனித சூசையப்பர் திருப்பயண திருத்தலம்

இடம் : சித்தாளந்தூர், சித்தாளந்தூர் அஞ்சல், பரமத்தி வேலூர் தாலுகா

மாவட்டம் : நாமக்கல்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித லூர்து அன்னை ஆலயம், பெருங்குறிச்சி

பங்குத்தந்தை : அருட்பணி. L. டேவிட்

குடும்பங்கள் : 84

அன்பியங்கள் : 2

திருவழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு : காலை 09.00 மணிக்கு திருப்பலி

புதன் : மாலை 06.30 மணிக்கு செபமாலை மற்றும் புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி

திருவிழா : மே மாதத்தில் முதல் சனிக்கிழமை

வழித்தடம் : திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் சித்தாளந்தூரில் புனித சூசையப்பர் திருப்பயண திருத்தலம் அமைந்துள்ளது.

Location map: St. Joseph Church

Chittalandur, Tamil Nadu 637201

https://maps.app.goo.gl/uC8NsH2mQswu5AKL9

புனித சூசையப்பர் திருப்பயண திருத்தல வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அழகுமிகு ஆலயமாம் சித்தாளந்தூர் புனித சூசையப்பர் ஆலயம். 

தொடக்கத்தில் நாமக்கல் பங்கின் கீழ் செயல்பட்டு வந்த இவ்வூர், 1946ம் ஆண்டு பெருங்குறிச்சி புனித லூர்து அன்னை ஆலயம் பங்குத்தளமாக உயர்த்தப்படவே, இப்பங்கின் கீழ் இன்றுவரையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பெருங்குறிச்சி பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தை அருட்பணி. மரியோ ரொடேசினி (1995-2004) அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வூரில் அழகிய தோற்றம் கொண்ட புதிய ஆலயம் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் பெயரில் கட்டப்பட்டு 04.03.2001 அன்று அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

தொடர்ந்து பணிபுரிந்த பங்குத்தந்தையர்களால் இவ்வாலயம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

உலகளாவிய திருஅவையின் பாதுகாவலர் தொழிலாளர் புனித சூசையப்பர் யூபிலி ஆண்டை (டிசம்பர் 2020 - டிசம்பர் 2021) முன்னிட்டு தருமபுரி மறைமாவட்ட ஆயரும், சேலம் மறைமாவட்ட பரிபாலகருமான மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் 03.02.2021 அன்று இவ்வாலயமானது, சேலம் மறைமாவட்ட அளவில், திருச்செங்கோடு மறைவட்டத்தில்

புனித சூசையப்பர் திருப்பயண திருத்தலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

17.03.2021 அன்று இவ்வாலயத்தில் புனித சூசையப்பர் யூபிலி ஆண்டு சேலம் மறைமாவட்ட பரிபாலகர் மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களாலும், மறைவட்ட குருக்களாலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு புனித சூசையப்பர் யூபிலி ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திருநிகழ்வில் நூற்றுக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருட்பணி. L. டேவிட் அவர்களும் சித்தாளந்தூர் இறைமக்களும் இணைந்து சிறப்பித்தனர்.

புனித சூசையப்பர் திருப்பயண திருத்தலத்தில் எண்ணற்ற அதிசயங்களும் அற்புதங்களும் நடைபெறுவதால் நீங்களும் குடும்பத்தோடு வாருங்கள்!! இல்லத்திற்கு இறையாசீரை பெற்றுச் செல்லுங்கள்!!!

இவ்வாலயத்திற்கு வந்து நல்ல ஒப்பரவு அருட்சாதனம் செய்து திருப்பலியில் பங்குபெற்றால் பரிபூரண பலன் கிடைக்கும்.

இத்திருத்தலத்தில் செயல்படும் பக்தசபைகள் : 

1. புனித சூசையப்பர் பணிக்குழு 

2. இளைஞர் இளம்பெண்கள் குழு

3. பாடகற்குழு 

4. பீடச்சிறுவர்கள் குழு

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. L. டேவிட்

புகைப்படங்கள்: ஆலய இளையோர்