780 அன்னை மரியாள் இறைவனின் தாய் ஆலயம், லொய்னேக்கர்

    

அன்னை மரியாள் இறைவனின் தாய் ஆலயம் (Mary Mother of God Church)

இடம்: லொய்னேக்கர் (Luonyaker)

நாடு: தென் சூடான்

மறைமாவட்டம்: வோவ் (Catholic Diocese of Wau)

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 48

முகவரி:

Mary Mother of God church- Catholic Diocese of Wau Luonyaker Parish.

Gogrial East Country,

Warrap State, 

Post box, 29 Wau

South Sudan.

பங்குப்பணியாளர்: அருட்பணி. பனியடிமை ஜான் போஸ்கோ, MMI

உதவிப் பங்குப்பணியாளர்: அருட்பணி. ஸ்டாலின் மார்ட்டின், MMI 

கத்தோலிக்க மக்கள்: 12,000+

ஞாயிறு காலை 09:00 மணி ஜெபமாலை, நற்கருணை ஆசீர் தொடர்ந்து திருப்பலி. மொழி: Dinka tribe

(Thong mochgang)

வாரநாட்களில் காலை 06:45 மணி ஜெபமாலை, 07:00 மணி திருப்பலி

திருவிழா: டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 01

வழித்தடம்: ஜூபா -வோவ். வோவ்-லிருந்து சுமார் இரண்டரை மணிநேரம் மகிழுந்து பயணம் செய்தால், லொய்னேக்கர் வந்து சேரலாம்.

வரலாறு:

அன்னை மரியாள் இறைவனின் தாய் ஆலயத்தைக் குறித்து பங்குத்தந்தை அருட்பணி. பனியடிமை ஜான் போஸ்கோ அவர்களின் பகிர்வு....

இந்த அன்னை மரியாள் இறைவனின் தாய் (MMG) மிஷனைப் பற்றிய வரலாறு மிக நீண்டது..! ஆனாலும் இந்த மிஷன் பற்றிய உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லை. 

மிஷனரிகள் இந்த தேவாலயத்தை 03.05.1923 அன்று லயோனேக்கரில், உள்ளூர் முறையில் சேறு மற்றும் புல் (டக்கிள்) கொண்டு கட்டுவதற்கு முன்னோடியாக இருந்தனர்.  

ஆனால் வானிலை மற்றும் கனமழை காரணமாக இந்த தேவாலயம் இடிந்து விழுந்தது. ஆகவே இறைவிசுவாசிகள் தற்போதைய தேவாலய கட்டிடத்தின் பின்புறம் உள்ள புளிய மரத்தின் கீழ் அமர்ந்து வழிபாடுகளில் பங்கேற்றனர். 

இந்த பணித்தளத்தின் ஆன்மீகத்தேவை மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில், மத்திய அரசுடன், மறைமாவட்டங்கள் இணைந்து 2014-ம் ஆண்டு லொய்னேகரில் பிரமாண்டமான தேவாலயத்தைக் கட்டத் தொடங்கினர். ஆனால் இப்போதுவரை இந்த தேவாலயம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. ஆனாலும் மக்கள் அதே புளியமரத்தடியில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். 

அதன் பிறகு சில MMI சபை அருட்தந்தைகளின் ஆதரவுடன், உள்ளூர் அமர்வுகள், ஆயத்த பலிபீடம் மற்றும் தேவாலயத்தின் ஒரு பக்கத்தை சமன் செய்து, திருப்பலி மற்றும் பிற ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த மேரி மதர் ஆஃப் காட் தேவாலயம், கோக்ரியல் கிழக்கில் அபுக் சமூகத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் அரசாங்கத்தால் சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த பதுவான் மேற்கு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை (இந்த மாவட்டம் இரண்டு போமாக்கள் கொண்டது) 40,446 ஆகும். குறிப்பாக Luonyaker இல் மட்டும் 21,646 மக்கள் வசிக்கின்றனர். 

மேரி மதர் ஆஃப் காட் மிஷனின் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் உள்ளன. மேரி மதர் ஆஃப் காட் மிஷன் கோக்ரியல் பங்கின் கீழ் உள்ள மையங்களில் ஒன்றாக இருந்ததால், அதிக மக்கள் தொகை மற்றும் பணியின் தொலைவு காரணமாக, பிரதான பங்கிலிருந்து துணை-பங்காக உருவாக்கப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த மையத்தில் 5 துணை மையங்கள் மற்றும் 47 சிற்றாலயங்கள் உள்ளன. 

கடவுளின் பாதுகாப்பாலும், அன்னை மரியின் பரிந்துரையாலும் நாங்கள் மூவரும் நவம்பர் 14, 2020 அன்று லயோனேக்கரை அடைந்தோம். மறுநாள் 15/11/2020 அன்று தொடக்கப் பெருவிழா கொண்டாடப்பட்டது. அது முழுமையடையாத போதிலும், தந்தையர்களின் குடியிருப்பும் ஆசீர்வதிக்கப்பட்டது. கடவுளின் ஆசீர்வாத்தால், நாங்கள் MMI தந்தையர் பனியடிமை ஜான் போஸ்கோ, சுனில் குமார் மற்றும் சவரியப்பன் ஆகிய மூவரும் மேரி மதர் ஆஃப் காட் தேவாலயத்தில், லயோனேகரில் எங்கள் பணியைத் தொடங்கினோம். தற்போது இரண்டு குருக்கள் மட்டுமே துணை பங்கான லயோனேகரில் எப்போதும் தங்கியுள்ளனர்.

MMG-MISION இன் தனித்துவம்:

எங்கள் MMG- மிஷனின் தனித்துவம் அல்லேலூயா நடனக் கலைஞர்கள். நற்கருணை கொண்டாட்டம் முழுவதும் மக்கள் பாடி ஆட வேண்டும் என்பது ஆப்பிரிக்க பாரம்பரியம். இந்த நடனக் கலைஞர்கள் 6 முதல் 8 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அல்லேலூயா நடனக் கலைஞர்கள் திருப்பலி நுழைவு பவனியிலிருந்து குருவானவருடன் சேர்ந்து, பலிபீடத்தின் முன் நின்று நற்கருணை கொண்டாட்டம் முழுவதும் அனைத்து விசுவாசிகளுடன் நடனமாடவும் பாடவும் செய்ய வேண்டும்.

நற்செய்தியை அறிவித்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து பணிசெய்து வருகின்றோம் என்று பங்குத்தந்தை அருட்பணி. பனியடிமை ஜான் போஸ்கோ அவர்கள் கூறினார்.

இந்த ஆலயம் விரைவில் கட்டிமுடிக்கப்படவும், மக்களின் ஆன்மீக வாழ்வு ஆழப்படவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் இறைவனிடம் ஜெபிப்போம்...

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:

1. Legion of Mary's

2. Altar Servers

3. Alleluia Dancer

4. St. Daniel Comboni Youth group

5. Church Pastoral council (CPC)

பங்கின் பள்ளிக்கூடம்:

Mary Immaculate Pre -Primary School

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குத்தந்தை அருட்பணி. பனியடிமை ஜான் போஸ்கோ, MMI