453 தூய லூர்து அன்னை ஆலயம், இராசிபுரம்


தூய லூர்து அன்னை ஆலயம்

இடம் : இராசிபுரம், இராசிபுரம் அஞ்சல், 637408

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித பார்பரம்மாள் ஆலயம், மின்னாம்பள்ளி
2. உலக மீட்பர் ஆலயம், பாச்சல்
3. புனித வியாகுல மாதா ஆலயம், நாட்டமங்கலம்

பங்குத்தந்தை : அருட்பணி. இரா. ஜெயசீலன்

குடும்பங்கள் : 250
அன்பியங்கள் : 9

வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு : காலை 07.30 மணிக்கு திருப்பலி

திங்கள், புதன், சனி : காலை 06.30 மணிக்கு திருப்பலி

செவ்வாய், வியாழன், வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

திருவிழா : பிப்ரவரி 11 ஆம் தேதி.

வழித்தடம் : ஈரோடு- திருச்செங்கோடு (நாமக்கல் பிரிவு ரோடு வழி)- இராசிபுரம்.

Location map : Lourdes Church Rasipuram Ramamoorthy Nagar, Rasipuram, Tamil Nadu 637408

இராசிபுரத்தில் வீற்றிருக்கும் லூர்து நகரில் காட்சித் தந்த தூய லூர்து அன்னை ஆலய வரலாறு:

கி.பி.16 -ஆம் நூற்றாண்டு முதல் காக்காவேரி, மதியம்பட்டி போன்ற பங்குகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள், 1848 -ஆம் ஆண்டில் MEP குருக்கள் ஆற்றிய நற்செய்தி பணிகள் மூலம் இறை நம்பிக்கையில் வளர்ந்து இராசிபுரம் பகுதியில் குடியேறினர். படிப்படியாக, 1971 இல் ஆலயம் ஒன்று கட்டப்பட்டு, தூய லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1991 இல் காக்காவேரி புனித கார்மேல் மாதா ஆலயப்பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, இராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலயமானது புதிய தனிப்பங்காக உயர்த்தப் பட்டது.

பங்குதந்தையர்களின் பல்வேறு முயற்சிகளால் பல வளர்ச்சியை கண்ட இராசிபுரம் பங்கு, இன்றைய பங்குதந்தை அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்களின் முயற்சியால் தற்போது ஆலய 50 -ஆம் ஆண்டை (ஆலய பொன்விழா) முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கும் பணியை 2020, பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்து, 22.02.2020 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் ஆண்டகை அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை திட்டமிட்டு, மக்களின் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சிக்காக காத்திருக்கின்றது இராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலய இறைசமூகம். இவ்வாறு அருட்பணி. இரா. ஜெயசீலன் அவர்களின் பணிக்காலம் இராசிபுரம் பங்கின் பொற்காலம் என மக்களால் போற்றப் படுகிறது.

ஆலய பொன்விழா ஆண்டு நினைவாக தயாரிப்பு திருப்பணிகள்:

1) 25.09.2016 அன்று புனித அந்தோணியார் மற்றும் அற்புத குழந்தை இயேசு திருப்பீட அர்ச்சிப்பு செய்யப்பட்டது.

2) 07.05.2017 அன்று இயேசு கிறிஸ்துவின் 14 சிலுவைப்பாதை நிலைகளும் அர்ச்சிப்பு செய்யப்பட்டது.

3) 04.02.2018 அன்று புதிய கொடிமரம் அர்ச்சிப்பு செய்யப்பட்டது.

4) 10.02.2018 அன்று தூய லூர்து அன்னை கெபி அர்ச்சிப்பு செய்யப்பட்டது.

5) 23.03.2018 அன்று உயிர்த்த ஆண்டவர் கெபி அர்ச்சிப்பு செய்யப்பட்டது.

6) ஜூன் 2019 முதல் பிப்ரவரி 2020 வரை ஆலய புதுப்பித்தல் பணி நிறைவு பெற்று, 22.02.2020 அன்று அர்ச்சிப்பு செய்யப்பட்டது.

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
1. அருட்பணி. S. N. இருதயம் (12.02.1989- 06.02.1991)
2. அருட்பணி. A. இரட்சகர் ராஜா (07.02.1991- 21.01.1995)
3. அருட்பணி. A. இருதயநாதன் (22.01.1995-09.06.2001)
4. அருட்பணி. M. அல்போன்ஸ் (10.06.2001-01.06.2002)
5. அருட்பணி. C.மைக்கேல் (02.06.2002-23.06.2006)
6. அருட்பணி. A. பீட்டர் பிரான்சிஸ் (24.06.2006- 20.08.2011)
7. அருட்பணி. S. தியோடர் செல்வராஜ் (21.08.2011- 03.06.2016)
8. அருட்பணி. இரா. ஜெயசீலன் (04.06.2016- தற்போது வரை...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. இரா ஜெயசீலன் அவர்கள்.