78 புனித லொரேட்டோ அன்னை ஆலயம், தொலையாவட்டம்


புனித லொரேட்டோ அன்னை ஆலயம்

இடம் : தொலையாவட்டம்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், கம்பிளார்.

குடும்பங்கள் : 45
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

வியாழன் மாலை 05.30 மணிக்கு திருப்பலி.

பங்குத்தந்தை : அருட்பணி வர்க்கீஸ்.

திருவிழா : மே மாதத்தின் கடைசி வாரத்தில் ஐந்து நாட்கள்.

சிறு குறிப்பு :

தொலையாவட்டம் பகுதியானது இலவுவிளை பங்கின் ஒரு அன்பியமாக செயல்பட்டு வந்தது. இங்கிருந்து இலவுவிளை செல்ல அதிக தூரம் இருந்ததால் மக்கள் எங்களுக்கு தனியாக ஆலயம் தொலையாவட்டம் பகுதியில் வேண்டும் என்று கோரி வந்தனர். கோரிக்கை நிறைவேறாமல் இருந்த வேளையில் இம்மக்கள் தொலையாவட்டம் கல்லூரியில் உள்ள சாப்பலில் திருப்பலிக்கு சென்று வந்தனர்.

இவ்வாறு நடந்து கொண்டிருந்த வேளையில் பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் மக்களின் அயராத உழைப்பு மற்றும் நன்கொடைகள் Loretto foundation USA ன் நன்கொடை இவற்றுடன் அப்போது கம்பிளார் ஆலய பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி அருள் தேவதாசன் அவர்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் புதிய ஆலயம் கட்டப்பட்டு 05-01-2009 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, கம்பிளார் பங்கின் கிளைப்பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.