புனித அந்தோணியார் ஆலயம்.
🌺இடம் : தளபதி சமுத்திரம் (பெருமளஞ்சி)
🦋மாவட்டம் : திருநெல்வேலி
🦋மறை மாவட்டம் : தூத்துக்குடி
🦋மறை வட்டம் : வடக்கன்குளம்
🍀நிலை : கிளைப்பங்கு
🌳பங்கு : புனித பாத்திமா அன்னை திருத்தலம், வள்ளியூர்
💎பங்குத்தந்தை : அருட்பணி மிக்கேல் லாரன்ஸ்
💎இணை பங்குத்தந்தை : அருட்பணி சகாய ஜஸ்டின்
🌳குடும்பங்கள் : 15
🔥ஞாயிறு திருப்பலி : மாலை 05.30 மணிக்கு
🔥மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06.00 மணிக்கு திருப்பலி.
🎉திருவிழா : ஜூன் மாதம் 01 -ம் தேதி முதல் 13 - ம் தேதி வரையிலான 13 நாட்கள்.
👉Google map : https://maps.app.goo.gl/2Kdkuqq5X2SpZeYn7
வரலாறு :
**********
🦋வள்ளியூர் ஆலயத்தின் கிளைப் பங்கான தளபதி சமுத்திரம் (பெருமளஞ்சி) மிகவும் பாரம்பரியம் மிக்க ஊராக இருந்ததாக கூறப்படுகிறது. முற்காலத்தில் போர் வீரர்களுடைய பயிற்சி தளமாக இருந்ததன் காரணமாக தளபதி சமுத்திரம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
🍇சீரோ மலங்கரா (Syro Malankara) ஏடுகளை பார்க்கும் போது புனித தோமையார் இப்பகுதி வழியாக சென்னைக்கு செல்லும் வழியில், அவருடன் சென்ற நபர் இறந்த போது, அவரை ஆலயத்தின் எதிரே உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
🏵மேலும் தற்போது ஆலயத்திற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லறைக் கல்வெட்டில் கி.பி 1485 ம் ஆண்டு அடக்கம் செய்யப் பட்ட பாக்கியநாதன் ஆசாரி, மரிய நாயகி என்றும் பொறிக்கப் பட்டுள்ளது.
🌺எனவே மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் 16 ம் நூற்றாண்டில் 80 வீடுகளுக்கு மேல் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
🌹இவ்வாலயமானது முதலில் பணகுடி பங்கின் கிளைப்பங்காகவும், பின்னர் நாங்குநேரி பங்கின் கிளைப்பங்காகவும், பின்னர் அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து அவர்கள் வள்ளியூரில் பொறுப்பேற்ற பிறகு 1981 ம் ஆண்டு முதல் வள்ளியூர் -ன் கிளைப் பங்காகவும் மாற்றம் பெற்றது.
🌷ஆரம்ப காலத்தில் இருந்த சிறிய ஆலயம் மாற்றப்பட்டு, புதிய ஆலயமானது அருட்தந்தை அந்தோணி ச. பர்னாந்து அவர்களின் குருத்துவ பொன்விழா நினைவாக கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.
🌺வேலை தேடி மக்கள் வெளியூர் சென்று அங்கேயே தங்கி வாழ்வதால் தளபதி சமுத்திரத்தில் தற்போது 15 கத்தோலிக்க குடும்பங்களே வசித்து வருகின்றன.
🏵ஆலயத் திருவிழா 13 நாட்கள் மிகச் சிறப்பாக கோண்டாடப் படுகிறது. எல்லா நாட்களும் இரவில் அன்பு விருந்து (அசன விருந்து) வழங்கப்படும். இத் திருவிழாவில் பங்கு மக்கள் மற்றும் அருகில் வாழும் அனைத்து மக்களும் சாதி சமய பேதமின்றி கலந்து கொள்வது தனிச் சிறப்பு.
🌹இவ்வூருக்கு மேலூர், பெருமளஞ்சி, தளபதி சமுத்திரம் என மூன்று பெயர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.