முதன்மை வானதூதர் புனித மிக்கேல் ஆலயம்
இடம் : அழகாபுரம்
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. சாலமோன் ராஜ்.
குடும்பங்கள் : 350
அன்பியங்கள் : 20
திருப்பலி நேரங்கள் :
ஞாயிறு : காலை 06.15 மணிக்கு, காலை 08.00 மணிக்கு திருப்பலி
திங்கள் முதல் வியாழன் வரை : காலை 06.15 மணிக்கு திருப்பலி
வெள்ளி : மாலை 06.15 மணிக்கு இயேசுவின் திருக்காயங்களின் பக்தி செபம், திருப்பலி, நற்கருணை ஆராதனை.
சனி : மாலை 06.15 மணிக்கு தூய மரியன்னை நவநாள், திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.15 மணிக்கு திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை.
மாதத்தின் முதல் சனி : மாலை 06.15 மணிக்கு திருப்பலி, தேர்பவனி.
திருவிழா : செப்டம்பர் மாதம் 29-ம் தேதியை மையமாகக் கொண்டு 7 நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்பணி. பீட்டர் சூசைராஜ், OCD
2. அருட்பணி. J. விமல்
3. அருட்சகோதரி. அருணா, FSM
4. அருட்சகோதரி. ஜெயா பவுலின், SMMI
5. அருட்சகோதரி. அந்தோணியம்மாள், FSAG.
வழித்தடம் : சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் 2.5கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map :
https://maps.google.com/?cid=11087173400866754171
வரலாறு :
சேலம் மறைமாவட்டத்தில் வான்படைகளின் தளபதி தூய மிக்கேல் அதிதூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அழகாபுரம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய வரலாற்றைக் காண்போம்.
அழகாபுரம் பங்கு, வளர்ந்து வரும் கல்வி நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் உள்ளடக்கியுள்ளது.
இதனால் இப்பகுதியில் குடியேறும் இறைமக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்ததால் சூரமங்கலம், அரிசிப்பாளையம் மற்றும் ஜான்சன்பேட்டை ஆகிய பங்கைச் சார்ந்த பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு, புதிதாக அழகாபுரம் பங்கு 27.05.1997 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி ஆண்டகை அவர்களால் உருவாக்கப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பிலவேந்திரம் அவர்கள் பொறுப்பேற்று, சிறப்பாக வழி நடத்தினார்கள்.
இவ்வாலயக் கட்டுமான முயற்சிகளை மேதகு ஆயர் அவர்களின் உதவியுடன் பாதி அளவில் கட்டப்பட்டது. பிறகு, பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்ற அருட்பணி. பிலவேந்திரம் அவர்களின் முயற்சியாலும், மக்களின் நன்கொடைகளாலும் மீதியிருந்த கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று, 07.07.1997 அன்று ஆயர் மேதகு. மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மேலும், அருட்பணி. பிலவேந்திரம் அவர்களின் முயற்சியால் ஆலய மணிக்கோபுரமும், பங்குத்தந்தை இல்லமும் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. M. அல்போன்ஸ் அவர்கள் பங்கை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
அருட்பணி. சார்லஸ் (2007-2012) அவர்களின் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும், ஆலயத்தைச் சுற்றிலும் கல்தளம் (தரைப்பகுதி) அமைக்கப்பட்டது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் புனித அன்னை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர் ஆகிய புனிதர்களின் சுரூபங்கள் தாங்கிய அழகிய கெபிகள் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. சிறப்பாக, கல்லறைத்தோட்டம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டது.
அருட்பணி. கிறிஸ்துராஜ் (2012-2018) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டு சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் "புனித மிக்கேல் மறைக்கல்வி மன்றம்" கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. சாலமோன் ராஜ் அவர்களின் முயற்சியால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.15 மணிக்கு இயேசுவின் திருக்காயங்களின் பக்தி முயற்சி தொடங்கப்பட்டு, இன்று வரையிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், மறைமாவட்டத்தில் மூன்றாவது நற்கருணை ஆராதனை ஆலயமாக இங்கு பங்குத்தந்தை மற்றும் நன்கொடையாளர்களின் முயற்சியால் "நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம்" கட்டப்பட்டு வருகிறது.
பங்கில் உள்ள பக்தசபைகள் : 💠பங்குப்பேரவை
வின்சென்ட் தே பவுல் சபை
மரியாயின் சேனை
இளையோர் குழு
பாடகற்குழு
பீடச்சிறுவர்கள் இயக்கம்
மறைக்கல்வி மன்றம்
இயேசுவின் கண்மணிகள் இயக்கம்
பாலர்சபை
செரா மன்றம்
கல்விக் கூடங்கள்:
St. John's matriculation higher secondary school (மறைமாவட்ட நிர்வாகம்)
St. John's national academy school (CBSC) (மறைமாவட்ட நிர்வாகம்)
Holy angels matric higher secondary school for girls (பிரான்சிஸ்கன் சர்வண்ட் ஆஃப் மேரி கன்னியர்கள் நிர்வாகம்)
Holy angels public school (பிரான்சிஸ்கன் சர்வண்ட் ஆஃப் மேரி கன்னியர்கள் நிர்வாகம்)
இல்லங்கள் :
1. புனித தெரசாள் கன்னியர் இல்லம்
2. ஆசீர்வாதப்பரின் அருள் இரக்க கன்னியர்கள் இல்லம்
3. பிரான்சிஸ்கன் சர்வண்ட் ஆஃப் மேரி கன்னியர்கள் இல்லம்
4. புனித ஹென்றி முதியோர் இல்லம் (ஆசீர்வாதப்பரின் அருள் இரக்க கன்னியர்கள் நிர்வாகம்)
5. ஆதரவற்ற, மனநிலை குன்றியவர்களுக்கான முதியோர் இல்லம் (புனித தெரசாள் கன்னியர்கள் நிர்வாகம்)
பங்கில் பணியாற்றிய பங்குப்பணியாளர்கள்:
1. அருட்பணி. பிலவேந்திரம் (1997-2003)
2. அருட்பணி. M. அல்போன்ஸ் (2003-2007)
3. அருட்பணி. சார்லஸ் (2007-2012)
4. அருட்பணி. கிறிஸ்து ராஜ் (2012-2018)
5. அருட்பணி. சாலமோன் ராஜ் (2018 முதல் தற்போது வரை...)
தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சாலமோன் ராஜ் அவர்கள்.