422 புனித சூசையப்பர் ஆலயம், கோடாரேந்தல்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : கோடாரேந்தல், உலையூர் அஞ்சல், திருவரங்கம் வழி, 623712.

மாவட்டம் : இராமநாதபுரம்
மறை மாவட்டம் : சிவகங்கை
மறை வட்டம் : பரமக்குடி.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : திருஇருதய ஆண்டவர் ஆலயம், திருவரங்கம்.

பங்குத்தந்தை : அருட்பணி. செபஸ்தியான்

குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 09.15 மணிக்கு.

மாதத்தில் ஒரு வியாழக்கிழமை நற்கருணை ஆராதனை மாலை 06.30 மணி முதல் இரவு 08.15 மணி வரை.

நாள்தோறும் காலை 04.30 மணி முதல் காலை 05.30 மணி வரை ஜெபம். மாலையில் 07.00 மணி முதல் 08.00 மணி வரை ஜெபமாலை.

திருவிழா : ஈஸ்டர் பண்டிகை பிறகு பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
Rev. Fathers :
1. Fr. John Peter
2. Fr. Arokia Manokaran MSFS
3. Fr. Christopher OMI

Rev. Sisters :
1. Sr. Jebamalai Bon Secours
2. Sr. Josephine ICM
3. Sr. Suneeti SSH
4. Sr. Susila OSM
5. Sr. Daisy IC
6. Sr. Gnanam sccg
7. Sr. Rosary
8. Sr. Jothi

Rev. Brothers :
1. Bro. Vincent FSC
2. Bro. Michael Reegan OMI
3. Bro. Pio Edison MIC
4. Bro. Joe Holy cross

வழித்தடம் : பரமக்குடி to தேரிருவேலி மற்றும் பரமக்குடி to சிக்கல். பரமக்குடி, மஞ்சூர், கொளுந்துரை, மீசல் வழியாக கோடாரேந்தல் வரலாம்.

பரமக்குடி, செல்லூர், திருவரங்கம், பழங்குலம், முத்துவிஜயபுரம் வழியாகவும் கோடாரேந்தல் வரலாம்.

தூத்துக்குடி, கன்னியாகுமரியிலிருந்து வருபவர்கள் தூத்துக்குடி, குறுக்குச்சாலை, சாயல்குடி, முதுகுளத்தூர், தேரிருவேலி அணிகுருந்தன் வழியாக கோடாரேந்தல் வரலாம்.

Church email address : stjosephchurchkodarenthal@gmail.com

Location map :

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த விவசாய நிலங்கள் நிறைந்த கோடாரேந்தல் ஊரில், கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சுமார் 36 குடும்பங்கள் குடியேறி வசித்து வந்தனர்.

கடின உழைப்பாளர்களான இம் மக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்தனர். குறிப்பாக நெல், காய்கறி, பருத்தி, மிளகாய் ஆகியனவற்றை முக்கியமாக விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.

கேட்ட வரம் தரும் புனித சூசையப்பரின் அருளால் இம் மக்களின் வாழ்க்கைத் தரம் மெல்ல மெல்ல உயர்வடைந்து, இன்று பலதுறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். குறிப்பாக ஆசிரியர், பொறியியல் வல்லுநர்கள், இராணுவ வீரர்கள், மருத்துவம், ஆன்மீகம் என்று அனைத்து துறைகளிலும் சிறப்பு பெற்று வாழ்கின்றனர்.

கி.பி 1819 ஆம் ஆண்டில் இம் மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக கூரை வேய்ந்த சிறு ஆலயம் ஒன்று கட்டப்பட்டு, புனித சூசையப்பரை பாதுகாவலராகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர்.

தொடர்ந்து திருவரங்கம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.
பழைய ஆலயம் பழுதடைந்ததால் கி.பி 1973 ஆம் ஆண்டில் ஆலயம் இடிக்கப்பட்டு, 1974 ல் அருட்தந்தை செங்கோல் அவர்கள் பணிக்காலத்தில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது. போதிய நிதி கிடைக்காததால் பணிகளைத் தொடர இயலவில்லை.

அதன் பின் பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நிதியுதவியுடன் 09.05.1987 ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டு மதுரை உயர் மறை மாவட்ட பரிபாலகர் அருட்தந்தை சூசை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் புனித மரியன்னை லேயுகா புதல்வியர் சபை அருட்சகோதரிகள் இங்கு வந்து ஒரு மருத்துவமனை கட்டினர். தொடர்ந்து பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவி சிறப்பாக கல்விப்பணி செய்து வருகின்றனர்.

புனித யோவான் அன்பியம்
புனித பேதுரு அன்பியம்
புனித மத்தேயு அன்பியம்
புனித தோமா அன்பியம்
புனித பிலிப் அன்பியம்
புனித யாக்கோபு அன்பியம் -என 6 அன்பியங்கள் செயல்பட்டு வருகின்றன.

சிறப்புகள் :

மிகவும் பழைமையான புனித சூசையப்பர், அன்னை மரியாள், புனித மிக்கேல் அதிதூதர் ஆகிய மூன்று சுரூபங்களும், அந்த காலத்திலேயே இவ்வூரில் தச்சர்களை வரவழைத்து நேர்த்தியாக செய்யப்பட்டவையாகும்.

தற்போது கிராமத்தை பசுமையாக்கும் நோக்கில் 1500 மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, அன்பிய வாரியாக தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர் என்பது சிறப்பு.

புனித சூசா இளைஞர் நற்பணி மன்றத்தினர் பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

திருவிழாவின் போது 5 தேர்களை மக்கள் தங்கள் தோள்களிலேற்றி இறை பக்தியுடன் பஜனை பாடல்கள் பாடி வருவது சிறப்பு வாய்ந்தது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டியன் அவர்கள் இளையோர், பெரியோர், சிறுவர் என அனைவரையும் ஒருங்கிணைத்து தக்க வழிகாட்டுதலையும் கொடுத்து கோடாரேந்தல் இறைசமூகத்தை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் மண்ணின் மைந்தர் அருட்சகோதரர் மிக்கேல் ரீகன் OMI அவர்கள்.