971 புனித செபமாலை அன்னை ஆலயம், B. குமாரபாளையம்

     

புனித செபமாலை அன்னை ஆலயம்

இடம் : B. குமாரபாளையம் - 638183

மாவட்டம் : நாமக்கல்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : பங்குத்தளம்

மறைமாவட்ட ஆயர் : மேதகு அருள்செல்வம் இராயப்பன், D.D., D.C.L.

பங்குத்தந்தை : அருள்பணி. A. பெலவேந்திரம்

குடும்பங்கள்: 200

அன்பியங்கள்: 9

திருவழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு : காலை 06.45 மணி மற்றும் காலை 08.45 மணி திருப்பலி

வாரநாட்கள்: மாலை 06.15 மணிக்கு செபமாலை மற்றும் 06.30 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை

மாதத்தின் முதல் சனி : மாலை 06.30 மணிக்கு செபமாலை, சிறுதேர்பவனி மற்றும் திருப்பலி

பங்குத்திருவிழா: அக்டோபர் மாதம் இரண்டாம் ஞாயிறு

வழித்தடம்: சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக 60 கி.மீ தொலைவில் B. குமாரபாளையம் JKK நடராஜா நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

திருச்செங்கோடு - பள்ளிபாளையம் - B. குமாரபாளையம்.

Church Location : https://g.co/kgs/tc4yJbF

ஆலய வரலாறு :

சேலம் மறைமாவட்டம் சடையம்பாளையம் பங்கின் ஒரு பகுதியாக B. குமாரபாளையம் இருந்தது (B என்பது பவானியைக் குறிக்கும்). நெசவுத்தொழில் அதிகம் இருப்பதால், அநேக கிறிஸ்துவ குடும்பங்கள் இவ்வூரில் குடியேறி வாழத்தொடங்கினர். பூர்வீக குடும்பங்களும், வெளியூரிலிருந்து வந்து குடியேறிய குடும்பங்களும் என குடும்பங்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. ஆகவே இணைந்து இம்மக்கள் இறைவனை வழிபடுவதற்காக ஒரு சிற்றாலயம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1978 ஆம் ஆண்டு திரு. JKK. நடராஜா செட்டியார் ரூ.6000 -க்கு 14 1/2 சென்ட் நிலத்தை தாராள உள்ளத்தோடு வழங்கினார்.

அன்றைய சடையம்பாளையம் பங்கின் பங்குத்தந்தையர்கள் அருள்பணி. S. சவரிமுத்து மற்றும் அருள்பணி. I. கிரகோரி ராஜன் ஆகியோரின் முயற்சியால், B. குமாரபாளையம் JKK நடராஜா நகரில் ஒரு புதிய ஆலயம் கட்டப்பட்டு, புனித செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டு, 08.11.1996 அன்று சேலம் மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அன்றுமுதல் சடையம்பாளையம் பங்குத்தந்தையர்களால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

நாளடைவில் இங்கு வாழும் கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. எனவே, B. குமாரபாளையம் தனிப்பங்காக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இறைமக்கள் அனைவரும் ஆயர்முன் சமர்ப்பித்தனர். எனவே, அதை ஏற்றுக்கொண்ட சேலம் மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்கள் 19.08.2011 அன்று அருள்பணி. R. சேவியர் அவர்களை ஆலய பொறுப்பு தந்தையாக நியமித்தார். பின்னர் சடையம்பாளையம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு B. குமாரபாளையம் புனித செபமாலை அன்னை ஆலயம் என்ற தனிப்பங்கு 26.08.2012 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. R. சேவியர் அவர்களை நியமிக்கப்பட்டதுடன், புதிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு அன்றைய தினமே மேதகு ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பிறகு, பங்குத்தந்தை இல்லத்திற்கு அருகில் உள்ள நிலம் வாங்கப்பட்டது.

ஆலயம் கட்டப்பட்டதன் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா நினைவாக, பங்குத்தந்தை அருள்பணி. M. இராஜமாணிக்கம் அவர்களின் முயற்சியால் செபமாலை அன்னைக்கு ஒரு புதிய கெபி கட்டப்பட்டு, 16.10.2022 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு அருள்செல்வம் இராயப்பன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ஆலயத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதாலும் இன்றைய பங்குத்தந்தை அருள்பணி. A. பெலவேந்திரம் அவர்களும், பங்குமக்களும் இணைந்து புதிய ஆலயம் கட்டுவதற்காக ஆயரின் அனுமதி பெற்றுள்ளனர். புதிய ஆலயமானது கீழ்த்தளம் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், மேல்தளம் அன்னைக்கு அர்ப்பணிக்கின்ற ஆலயமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஆலயம் கட்ட நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

பங்கில் செயல்படும் பக்தசபைகள்:

1. பங்குப்பேரவை 

2. புனித வின்சென்ட் தே பால் சபை

3. மரியாயின் சேனை 

4. இளையோர் குழு

5. பீடப்பூக்கள்

6. மறைக்கல்வி மன்றம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

1. அருள்பணி. R. சேவியர் (19.08.2011 -31.05.2016)

2. அருள்பணி. S. புஷ்பநாதன் (31.05.2016 -04.06.2017)

3. அருள்பணி. A. துரைராஜ் (04.06.2017 -31.05.2022)

4. அருள்பணி. M. இராஜமாணிக்கம் (31.05.2022 -31.05.2023)

5. அருள்பணி. A. பெலவேந்திரம் (31.05.2023 முதல் தற்போது வரை...)

B. குமாரபாளையம் மக்கள் மேற்கொண்டு வரும் புதிய ஆலய கட்டுமானப் பணிக்குத் தேவையான நிதியுதவிகள், பொருளுதவிகள் தாராளமாகக் கிடைத்திடவும், விரைவில் இந்த ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்படவும் இறைவனிடம் ஜெபிப்போம்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. A. பெலவேந்திரம் அவர்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு: சகோதரர் ஜான் பீட்டர், SPB காலனி பங்கு, சேலம் மறைமாவட்டம்.