435 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், நடு ஆறு புளி


புனித ஆரோக்கியநாதர் ஆலயம்

இடம் : நடு ஆறு புளி, வள்ளியூர் (via), அச்சம்பாடு அஞ்சல்.

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : வடக்கன்குளம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி

பங்குத்தந்தை : அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன்

குடும்பங்கள் : 50
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வியாழன் மாலை 05.30 மணிக்கு நவநாள், திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

வழித்தடம் : வள்ளியூர் -திருச்செந்தூர் சாலையில், மடப்புரம் வந்து இங்கிருந்து அரை கி.மீ தூரம் உள்ளே சென்றால் நடு ஆறு புளி உள்ளது.

Location map : https://goo.gl/maps/L5msiUwRx69dHHGt5

வரலாறு :

புளிய மரங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்றான நடு ஆறு புளி பகுதியில், சுமார் 1880 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கொள்ளை நோயால் பலரும் மடிந்தனர். ஆகவே இப்பகுதியில் வாழ்ந்த பிற சமய மக்கள் சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்று வசித்தனர்.

கிறிஸ்தவ மக்கள் எங்கேயும் செல்லாமல் இங்கேயே வசித்து வந்த வேளையில், வெளிநாட்டைச் சேர்ந்த அருட்பணியாளர் புனித ஆரோக்கியநாதரின் புகைப்படத்தைக் கொண்டு வந்து, தமது கைகளிலேந்தி இப்பகுதி முழுவதும் சுற்றி வந்து ஜெபித்தார். புனித ஆரோக்கியநாதரின் பரிந்துரையால் கொள்ளை நோய் நீங்கி மக்கள் நலமுடன் வாழத் தொடங்கினர்.

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
திருப்பாடல்கள் 46:1

சுமார் 1910 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஓலை கொட்டகை ஆலயம் அமைத்து புனித ஆரோக்கியநாதரை பாதுகாவலாகக் கொண்டு மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

1937 ஆம் ஆண்டில் சுண்ணாம்பு கலவையாலான சுவர் எழுப்பி, ஓடு வேய்ந்த பெரிய ஆலயம் கட்டப்பட்டது.

அருட்பணி. நெல்சன் பால்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு 21.08.2001 அன்று அருட்பணி. பன்னீர் செல்வம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன் பணிக்காலத்தில் 2017 ஆம் ஆண்டு அசனகூடம் கட்டப்படது.

பல ஆண்டுகளாக இவ்வாலயத்தில் விளக்கேற்றி, தொண்டு செய்த கோயிலாயி என்ற தாயின் சேவை என்றும் போற்றுதலுக்குரியது.