தூய ஆவி ஆலயம்
இடம் : வேம்பார்
மாவட்டம் : தூத்துக்குடி
மறைமாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : குறுக்குச்சாலை
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்தந்தை. லெ. ராஜா ரொட்ரிகோ
குடும்பங்கள் : 150
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு
வாரநாட்களில் திருப்பலி : காலை 06.15 மணிக்கு.
பங்குத் திருவிழா : பெந்தேகோஸ்து திருவிழா (ஈஸ்டர் முடிந்த ஐம்பதாவது நாள்)
சிறப்பு பாதுகாவலர் புனித செபஸ்தியார் திருவிழா : ஜனவரி 20 ம் தேதி.
செபஸ்தியார் மணிமண்டப திருவிழா : ஜனவரி 21 ம் தேதி.
புனித அந்தோணியார் சிற்றாலய திருவிழா செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் வார செவ்வாய்.
பங்கில் உள்ள சிற்றாலயம், கெபி:
1. புனித அந்தோணியார் சிற்றாலயம்
2. புனித செபஸ்தியார் மணிமண்டப கெபி
3. புனித பாத்திமா மாதா கெபி
4. புனித சூசையப்பர் கெபி.
5. பஸ்ஸ்டாண்ட் புனித செபஸ்தியார் கெபி.
மண்ணின் இறையழைத்தல்கள் :
மேதகு டாக்டர் இம்மானுவேல் பர்னாந்து, மன்னார் மறைமாவட்டம், இலங்கை
1. அருட்தந்தை. வேதநாயகம் தல்மெய்தா
2. அருட்தந்தை. பெனடிக்ட் பர்னாந்து
3. அருட்தந்தை. சிலுவைமுத்து தல்மெய்தா
4. அருட்தந்தை. திருக்குடும்ப தாசன் தல்மெய்தா
5. அருட்தந்தை. அமலதாஸ் விக்டோரியா
6. அருட்சகோதரர். இஞ்ஞாசி பர்னாந்து
7. அருட்தந்தை. ஜோசப் பர்னாந்து
8. அருட்தந்தை. இம்மானுவேல் பர்னாந்து
9. அருட்தந்தை. பெஸ்கி தல்மெய்தா
10. அருட்தந்தை. பீட்டர் சுபராஜ் முறாய்ஸ்
11. அருட்தந்தை. பிரகாஷ் பர்னாந்து
12. அருட்தந்தை. ராஜ்குமார் பர்னாந்து
13. அருட்தந்தை. ஆரோக்கியதாஸ் கர்வாலோ
14. அருட்தந்தை. ஜெயந்தன் கர்வாலோ
15. அருட்தந்தை. அந்தோணிதாஸ் கர்வாலோ
16. அருட்தந்தை. லாரன்ஸ் பர்னாந்து
1. அருட்சகோதரி. ஜான்தார்க் மேரி
2. அருட்சகோதரி. பிபியானா மேரி
3. அருட்சகோதரி. லா. பிபியானா மேரி
4. அருட்சகோதரி. பெற்ரோனிலா மேரி
5. அருட்சகோதரி. தொமித்திலா மேரி
6. அருட்சகோதரி. ரூபினா மேரி
7. அருட்சகோதரி. கபிரினி மேரி
(1 முதல் 7 வரை மரியின் ஊழியர் சபை)
8. அருட்சகோதரி. சிசல் மேரி
9. அருட்சகோதரி. சலேத் மேரி
10. அருட்சகோதரி. நேவிஸ் மேரி
11. அருட்சகோதரி. நெல்லிமேரி
(8 முதல் 11 வரை அமலோற்பவ அன்னை சபை)
12. அருட்சகோதரி. ஹில்டா மேரி
13. அருட்சகோதரி. ஜோஸ்லின் மேரி
14. அருட்சகோதரி. நொலஸ்கோ மேரி
15. அருட்சகோதரி. சீலியா மேரி
16. அருட்சகோதரி. லெல்லியா மேரி
17. அருட்சகோதரி. வியான்னி மேரி
18. அருட்சகோதரி. லில்லி மேரி
19. அருட்சகோதரி. பிரென்டா மேரி
20. அருட்சகோதரி. லுஜெரா மேரி
21. அருட்சகோதரி. யுஸ்டேஷியா மேரி
22. அருட்சகோதரி. பவுலிற்றா மேரி
23. அருட்சகோதரி. லோரா மேரி
24. அருட்சகோதரி. இன்பஜோதி மேரி
25. அருட்சகோதரி. சந்திரமதி மேரி
(12 முதல் 25 வரை மரியின் ஊழியர் சபை)
26. அருட்சகோதரி. வெனன்சியா மேரி
27. அருட்சகோதரி. ஆரோக்கியமேரி, SAT
28. அருட்சகோதரி. ஜான்மேரி
29. அருட்சகோதரி. வனஜா மேரி, FBS
30. அருட்சகோதரி. டிலெக்டா மேரி, OCD
31. அருட்சகோதரி. ஜோயல்லா மேரி, OCD
32. அருட்சகோதரி. மோனிக்கா மேரி, நல்லாயன் சபை
33. அருட்சகோதரி. கிறிஸ்டினா மேரி, நல்லாயன் சபை
34. அருட்சகோதரி. அல்போன்ஸ் அருள்மேரி, ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை
35. அருட்சகோதரி. ஜோவிற்றா மேரி, பத்திநாதர் சபை
36. அருட்சகோதரி. வினோதா மேரி, மரியின் ஊழியர் சபை
37. அருட்சகோதரி. அகத்தா பிரின்ஸி மேரி
38. அருட்சகோதரி. மரிய அகஸ்டினா, OCD
வழித்தடம் :
மதுரை -அருப்புக்கோட்டை -சாயல்குடி -வேம்பார்.
மதுரை -அருப்புக்கோட்டை -விளாத்திகுளம் -வேம்பார்.
கோவில்பட்டி -விளாத்திகுளம் -வேம்பார்.
இராமநாதபுரம் -சாயல்குடி -வேம்பார்.
திருநெல்வேலி -தூத்துக்குடி -வேம்பார்.
Location map :
https://maps.app.goo.gl/BPnFBo58zdZ2y37u9
வரலாறு :
தென்தமிழ்நாட்டில் முத்துக்குளித்துறை என்றும் ‘பெஸ்காரியா’ என்று போர்ச்சுகீசியர்களாலும் அழைக்கப்பட்ட கடலோரக் கிராமங்களான வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், மணப்பாடு, திருச்செந்தூர் மற்றும் அதனைச்சார்ந்த சிற்றூர்களில் வாழ்ந்து வந்த பரதவ மக்கள் 1536- 37ம் ஆண்டு போர்ச்சுகீசியர்களின் ஆதரவோடு கிறிஸ்தவ மறையை தழுவினர்.
1542ம் ஆண்டு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆன்மீகப் பணியாற்றிட முத்துக்குளித்துறைக்கு வந்தார். பலமுறை வேம்பாருக்கு வந்து மறைபணியாற்றியதையும், இவ்வூர் மக்களிடம் மிகுந்து அன்பு கொண்டிருந்ததையும் அவர் எழுதிய கடிதங்கள் வாயிலாகவும், வரலாற்று ஆவணங்கள் மூலமும் அறிய முடிகிறது. கிறிஸ்தவர் வழிபாட்டிற்காக ஒவ்வொரு ஊரிலும் புனித சவேரியாரின் விருப்பப்படி கூரைக்கோவில் கட்டப்பட்டது.
‘தம்பிரான் வணக்கம்’ என்ற முதல் தமிழ் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டவரும், வேம்பாரின் ஆன்மீக குருவானவராக இருந்தவருமான அருட்தந்தை. ஹென்றிக்ஸ் அடிகளார் 1548ம் ஆண்டு உரோமையிலிருந்த இயேசு சபைத்தலைவர் புனித இஞ்ஞாசியாருக்கு எழுதிய கடிதத்தில் வேம்பார் ஆலயத்தில் ஞாயிறுதோறும் கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கி வருவதாகவும், மக்கள் ஆர்வமுடன் கேட்பதாகவும், மேலும் அவர் வேம்பாரில் தங்கியிருந்து தமிழ் படித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1571ம் ஆண்டு முதன்முதலாக கற்கோவில் கட்டப்பட்டது. 1600 ஆண்டு பெரிய ஆலயம் கட்டப்பட்டது. 1600ம் ஆண்டு வெளியான இயேசு சபையினர் அறிக்கையில் கடற்கரை கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஆலயங்களில் வேம்பார் ஆலயம் தான் பெரியதாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேம்பாரின் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. ஆன்ட்ரூ லோபஸ் அடிகளார் 1644ம் ஆண்டு எழுதியுள்ள மடலில் இந்த ஆலயம் இஸ்பிரித்து சாந்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், 1300 கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.
பதினாறாம் நூற்றாண்டின் கடைசியில் இயேசு சபையினரின் தலைமை இல்லம் தூத்துக்குடியிலும், துணை இல்லங்கள் வேம்பார், புன்னைக்காயல், மணப்பாடு ஆகிய ஊர்களிலும் செயல்பட்டு வந்தது.
1658ம் ஆண்டு டச்சுக்காரர்கள் முத்து குளித்துறையை கைப்பற்றினர். இவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கு எதிரான பிரிவினை சபையை சார்ந்தவர்கள். வேம்பார் ஆலயத்தின் முகப்பு மற்றும் பீடத்தை இடித்து விட்டு அவர்களது தளவாட கிடங்காக மாற்றி விட்டனர். காலப்போக்கில் இம்மக்களின் மீதான தாக்கம் குறைந்து , முத்துக்குளித்தல் மற்றும் அதன் தொடர்பான வியாபாரங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
ஐம்பது ஆண்டுகள் கழித்து அதாவது 1708ம் ஆண்டு அருட்தந்தை. மனுவேல் கர்னியாரோ வேம்பாரின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1713ம் ஆண்டு வேம்பாரின் பங்குத்தந்தையான அருட்தந்தை. ஜோசப் காலினி தனது மடலில் பெரிய கோவில் மிகவும் சிதிலமடைந்து அழிந்து வருவதாக எழுதியுள்ளார். இதன் பிறகு அதாவது 1720 ம் ஆண்டுவாக்கில் இரண்டாவது கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 1739 ல் இவ்வாலயம் முழுவதுமாக அழிந்தது.
1709ம் ஆண்டு கொடிய பிளேக் நோய் வேம்பாரைத் தாக்கியது. பங்குத்தந்தை அருட்தந்தை. மனுவேல் கர்னியாரோ உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த வருடம், 1710 ம் ஆண்டு அருகே இருந்த குறுநில மன்னர்களால் படையெடுப்பு நடந்தது. கடும் பஞ்சம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பஞ்சம், படை, கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட இவ்வூர் மக்கள் புனித செபஸ்தியாரை தங்கள் பாதுகாவலராக தேர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கு பல ஆண்டுகளுக்கு முன் வேம்பாரில் பங்கு குருவாக பணியாற்றிய அருட்தந்தை. ஹென்றிக்ஸ் அடிகளார் தான் எழுதிய ‘அடியார் வரலாறு’ என்ற புத்தகத்தில் புனித செபஸ்தியாரிடம் வேண்டிக்கொண்டால் அவைகள் நீங்கிப் போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நோக்கும்போது ஏறத்தாழ 1711- 1712ம் ஆண்டிலேயே இவ்வூர் மக்கள் தங்களை புனித செபஸ்தியாரின் பாதுகாவலில் ஒப்படைத்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. நாளடைவில் அவர் மீதிருந்த பக்தி முயற்சிகள் விரிவடைந்திருக்கிறது.
1876 ஆம் ஆண்டிலிருந்து அருட்தந்தை. பங்காரு சே. ச அடிகளாரின் காலத்திலிருந்து தெற்கே புதுக்கோட்டை, தருவைக்குளம்; மேற்கே மணியாச்சி, கொம்பாடி; வடக்கே புதூர், நாகலாபுரம் என 25 ஊர்கள் இணைந்த பெரிய மறைபரப்புத் தளமாக (VEMBAR MISSION) வேம்பார் விளங்கியது.
1908 ஆம் ஆண்டிலிருந்து வேம்பாரின் இணை ஊர்கள் தூத்துக்குடியோடு ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப் பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேம்பாரில் இருந்த ஆலயம் சேதமடைய ஆரம்பித்தது. புதிய ஆலயம் கட்டுவதற்கான அஸ்திவாரம் 1903ம் ஆண்டு இடப்பட்டது. 1915ம் வருடம் பெப்ருவரி மாதம் முதல் தேதியன்று பங்குத்தந்தை சுவாமிநாதர் முன்னிலையில், திருச்சி ஆயர் மேதகு அகுஸ்தின் பெசாந்தியார் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவிக்கு அர்ப்பணிக்கப் பட்டது.
1914ம் ஆண்டு வேம்பாரில் 4,744 கிறிஸ்தவர்கள் வசித்து வந்ததாக இயேசு சபை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஆலயம் கட்டப்பட்டதன் நூற்றாண்டு விழா நினைவாக ஆலய முன்மண்டபம் அருட்தந்தை. ஜான் பென்சன் பணிக்காலத்தில் கட்டப்பட்டு 20.01.2015 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
புனித செபஸ்தியாரின் திரு தலைமுடியானது இவ்வாலயத்தில் புனித திருப்பண்டமாக வைக்கப் பட்டுள்ளது தனிச்சிறப்பு.
பங்கின் கல்வி நிறுவனம் :
புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளி.
1923 ஆம் ஆண்டு மரியின் ஊழியர் சபை கன்னியர் இல்லம் துவக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு சூசையப்பர் கருணை இல்லம் உருவாக்கப்பட்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. மறைக்கல்வி
2. பாலர்சபை
3. அமலோற்பவ மாதா இளம் பெண்கள் சபை
4. திருக்குடும்ப சபை
5. புனித வின்சென்ட் தே பவுல் சபை
6. மரியாயின் சேனை
7. பொம்மை மாதா சபை
8. உதயதாரகை இளைஞர் இயக்கம்
9. நற்கருணை வீரர் சபை.
பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
St. Francis Xavier
1. Fr. Henry Hendricks
2. Fr. Franciaco Durao (1574)
3. Fr. Bernard De Almeida (1604)
4. Fr. Gaspar de Abrew (1607)
5. Fr. Fernand Gomez (1608)
6. Fr. Nicolas Paludanus (1608)
7. Fr. Louis Mathew Pelingotti (1608)
8. Fr. Andrew Lopez (1623)
9. Fr. Antoine Velosc (1626)
10. Fr. Balthazar de Costa (1636)
11. Fr. Manuel Carneire (Vembar & Vaipar) (1708)
12. Fr. Alexander Joseph calini (1709)
13. Fr. Manuel Dos Reys (Vembar, Vaipar, Mookoor) (1733)
14. Fr. Salvador de Costa (1738)
15. Fr. Francis Xavier Stocker (1742)
Fr. Joseph Constantine Beschi (1742)
16. Fr. Joseph Khrening (1743)
17. Fr. Anthony Maria Carisola (1743)
18. Fr. Charles Fortini (1745)
19. Fr. Matthew Lopez (1752--)
20. Fr. Xavier Bangarou (1875)
Fr. Constant Dayirias(Ass. PP)
21. Fr. Michael (1876)
Fr. Pouget (Ass. PP) (1878)
22. Fr. Pouget (1879)
Frs. Berthiew, Giuge (Ass. PP)
23. Fr. P. X. Rayapar (1882)
24. Fr. Regis Calien (1887)
Fr. Dayiriam (Ass PP)
25. Fr. Adaikalanathar (1889)
Frs. Rayapar, Causanal, Cortes (As PP)
26. Fr. Adrian Boyisset (1894)
Frs. Berthiew, Visuvasam, Rayapar, Talon (Ass PP)
27. Fr. Paranchothi (1897)
Fr. Saminather (Ass PP)
28. Fr. Saminather (1901)
Frs. Gnsnasamy, Mariadas (Ass PP) (1903)
Fr. Soosai Manikam (Ass PP) (1904)
Fr. Gnanapragasam (Ass PP) (1906)
Fr. Siluvai Michael (Ass PP) (1907)
Fr. Lourdes (Ass PP) (1911)
29. Fr. Mariadas (1919)
30. Fr. S. Mariadas (1923)
31. Fr. Religius Missier (1928)
32. Fr. G. Michael (1933)
33. Fr. Edward Christian Fernandez (1938)
34. Fr. A. Michael (1946)
35. Fr. Rosary Corera (1947)
36. Fr. Periyanayagam (1950 six months)
37. Fr. X. Fernando (1950)
38. Fr. Venantius Fernando (1951)
39. Fr. Maria Viyagulam (1955 six months)
40. Fr. Anthony Arakal (1955)
41. Fr. T. Paul Alangaram (1957)
42. Fr. G. Soosainather (1960)
43. Fr. Liguori Fernando (1971)
44. Fr. Rubert Arulvalan (1972)
45. Fr. Bensigar (1973)
46. Fr. Paul Alangaram (1976)
47. Fr. Viyagula Marian (1977)
48. Fr. Vladmir Rayen (1979)
49. Fr. Devasagayam (1982)
50. Fr. Louis (1984)
51. Fr. Xavier Ignatius Amirtham (1985)
52. Fr. Jesu Arulappan (1988)
53. Fr. Arulmani (1991)
54. Fr. Alexander Fernando (1993)
55. Fr. Job De Rose (1998)
56. Fr. Venantius Fernando (2003)
57. Fr. Antony Ranjith Kumar Cardoza (2004)
58. Fr. Jesu Nazarene (2009)
59. Fr. A. Joseph Rathinaraj (2010)
60. Fr. L. Antony Jegathesan (2010)
61. Fr. John Benson (2012)
62. Fr. Sahayaraj Valdharis (2015)
63. Fr. Prathiban Liphonse (2017)
64. Fr. L. Raja Rodrigo (2018)
65. Fr. Antony Titus Roshan (2021 till today)
மிகவும் பழைமையானதும், புகழ் பெற்றதும் பரிசுத்த ஆவியின் வல்லமை நிறைந்ததுமான வேம்பார் ஆலயம் வாருங்கள்.. ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. லெ. ராஜா ரொட்ரிகோ அவர்கள் மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்.