புனித திருமுழுக்கு யோவான் ஆலயம்
இடம் : ஆற்காடு குப்பம்
மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : அல்போன்சாபுரம்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : ஜெகன்மாதா ஆலயம், கனகம்மாசத்திரம்
பங்குத்தந்தை : அருட்பணி. M. அந்தோணி தாஸ் (கப்புசின்)
குடும்பங்கள் : 20
அன்பியம் : 1
சனிக்கிழமை மாலை 07.00 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஜூன் மாதம் 30 ஆம் தேதி.
வரலாறு :
மிகவும் பின்தங்கிய ஆற்காடு குப்பம் கிராமப் பகுதியில் வாழ்ந்த மக்கள் ஏழைகளாக, கல்வி கற்க வசதியற்று, பசி பட்டினியுடன் வாழ்ந்து வந்தனர்.
இவ்வேளையில் சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்தின் பணிபுரிந்த, கேரளாவைச் சேர்ந்த அருட்பணி. தாமஸ் வளவந்தாரா அவர்கள், ஆற்காடு குப்பம் பகுதிக்கு வந்து இம் மக்களின் நிலை கண்டு கலங்கியவராக, பணி பெற அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன் என்ற இறை திட்டத்துடன் வீதிகளில் இறங்கி பசித்தோரை பசியாறச் செய்தார், கலக்கமுற்ற மக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து வழி காட்டினார். கல்வியின் மகத்துவத்தை எடுத்துரைத்து கல்வியறிவு பெற வழிவகை செய்தார்.
"தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்". எசாயா 66:13
இவ்வாறாக மக்கள் கிறிஸ்துவில் இணைய, இவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு அருட்பணி. தாமஸ் வளவந்தாரா அவர்கள் சிறு ஆலயம் ஒன்றைக் கட்டினார்.
தற்போது பங்குத்தந்தை அருட்பணி. M. அந்தோணி தாஸ் (கப்புசின்) அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பு பெற்று விளங்குகிறது ஆற்காடு குப்பம் இறை சமூகம்.
"புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!" 1 சாமுவேல் 2:8
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. M. அந்தோணி தாஸ் அவர்கள்.