622 பரிசுத்த பரிபூரண அன்னை ஆலயம், பழையகாயல்

                  

பரிசுத்த பரிபூரண அன்னை ஆலயம் 

இடம் : பழையகாயல், 628152

மாவட்டம் : தூத்துக்குடி 

மறை மாவட்டம் : தூத்துக்குடி 

மறை வட்டம் : தூத்துக்குடி. 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அம்புரோஸ் நகர். 

2. புனித அந்தோனியார் ஆலயம், முக்காணி 

3. புனித அடைக்கல அன்னை ஆலயம், குருவிதுறை

4. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மாரமங்கலம். 

பங்குத்தந்தை : அருட்பணி. அமலன் தமியான் 

குடும்பங்கள் : 613

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு 

வார நாட்களில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு 

முதல் செவ்வாய் மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி (புனித அந்தோனியார் சிற்றாலயம்) 

முதல் வெள்ளி காலை 10.00 மணிக்கு ஜெபமாலை, நற்செய்திக்கூட்டம், நற்கருணை ஆசீர், திருப்பலி, தொடர்ந்து மதிய உணவு வழங்கப்படும். (திருச்சிலுவை திருத்தலம்) 

வாரத்தின் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி (திருச்சிலுவை திருத்தலம்) 

திருவிழா : டிசம்பர் 08 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை. (திருவிழா திருப்பலி முடிவில் தாய்மைப்பேறு அடைந்தவர்களுக்கு சிறப்பு ஆசீர் வழங்கப்படும்) 

மண்ணின் இறையழைத்தல்கள் :

அருட்பணியாளர்கள்

1. அருட்பணி. ஜோசப் பெர்னாண்டோ 

2. அருட்பணி. பங்கிராஸ் பெர்னாண்டோ 

3. அருட்பணி. அலாய்சியுஸ் பெர்னாண்டோ 

4. அருட்பணி. சூசை பிரான்சிஸ் பெர்னாண்டோ 

5. அருட்பணி. ரொசாரியோ கொரைரா 

6. அருட்பணி. எம். எக்ஸ். பூரணம் டிமெல்

7. அருட்பணி. டி. ஆர். ஸ்டார்வின் 

8. அருட்பணி. ஆர். சேசு அந்தோணி அமல்ராஜ். 

அருட்சகோதரிகள்

1. அருட்சகோதரி. பிரான்சிஸ் இசபெல்லா மேரி

2. அருட்சகோதரி. லூயிஸ் பெஞ்சமின் மேரி

3. அருட்சகோதரி. பெனடிக்ட் ரொசாரியோ மேரி

4. அருட்சகோதரி. ஜோசப் ஹென்ரிக் மேரி

5. அருட்சகோதரி. பெர்தினாந்து மேரி

6. அருட்சகோதரி. ஆஸ்லின் மேரி

7. அருட்சகோதரி. பிலிப்புநேரி மேரி

8. அருட்சகோதரி. ஜோசபின் மார்க்ரெட் மேரி

9. அருட்சகோதரி. பெர்க்மான்ஸ் மேரி

10. அருட்சகோதரி. எதல்பெர்ட் மேரி

11. அருட்சகோதரி. அக்யினாஸ்

12. அருட்சகோதரி. சிம்ரோசிற்றா மேரி

13. அருட்சகோதரி. சாந்தா கிறிஸ்டி

14. அருட்சகோதரி. கெவின் 

15. அருட்சகோதரி. நெபோரா 

16. அருட்சகோதரி. கொன்சேகா 

17. அருட்சகோதரி. டயானா

18. அருட்சகோதரி. லூயிஸ் ஜெஸிந்தா மேரி

19. அருட்சகோதரி. லூசி கிரேட்டா 

20. அருட்சகோதரி. ஜெனட் 

21. அருட்சகோதரி. பிலோமின் 

22. அருட்சகோதரி. சகாய விசேந்தி 

23. அருட்சகோதரி. மேரி ஷீலா

24. அருட்சகோதரி. ஜான்சி

25. அருட்சகோதரி. ஜூனா 

26. அருட்சகோதரி. லில்லி பிரபா.

வழித்தடம் : தூத்துக்குடியிலிருந்து 17கி.மீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 23கி.மீ தொலைவிலும் பழையகாயல் அமைந்துள்ளது.

Location map : https://g.co/kgs/n9PWmq

வரலாறு :

முற்காலத்தில் சீரும் சிறப்புடன், பாண்டிய அரசர்களின் பழம்பெரும் துறைமுகப் பட்டிணமாய் விளங்கி, வெனிஸ் நகர கடற்பயணி மார்க்கோபோலோ கி.பி 1288 ம் ஆண்டு, கி.பி 1293 ம் ஆண்டு என இருமுறை வருகை தந்து "பண்புசால் காயல் நகர்" (The Noble City of Kayal) என்று புகழப்பட்ட காயல் துறை (Part of Kayal)   இன்று பரிசுத்த பரிபூரண அன்னை அரசாளும் பழைய காயல் எனப் பெயர் பெற்று அன்னையின் திருத்தலமாகத் திகழ்கிறது. 

மார்க்கோபோலோவின் காலத்திற்கு முன்பிருந்தே காயல் என்றழைக்கப்பட்ட ஊர், புனித சவேரியார் காலத்திற்குப் பின்னர் பழைய காயல் என ஆனது. 

கத்தோலிக்க திருமறை முத்துக் குளித்துறையில் வேரூன்ற காரணமாயிருந்த புனித பிரான்சிஸ் சவேரியார் இந்தியாவிற்கு வந்து, மணப்பாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு கால்நடையாக வருகையில் (கி.பி 1542 அக்டோபர்) பழைய காயலில் தங்கியிருந்த போது, 3 நாட்கள் பிரசவ வேதனையில் துடிதுடித்த பெண்ணுக்கு நற்செய்தி அறிவித்து, திருமுழுக்கு கொடுத்து, அப்பெண் சுகப் பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆகவே முதல் புதுமையை புனித சவேரியார் செய்த புண்ணிய பூமி தான் இந்த பழைய காயல். 

இந்த புதுமையைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் சத்திய மறையைத் தழுவினர். இதனைத் தொடர்ந்து புனித சவேரியார் மரிஅன்னைக்கு குடிசைக் கோயில் கட்டி (பின்னாளில் அதுவே பரிசுத்த பரிபூரண அன்னை ஆலயமாக உருவானது) திருமறை சத்தியங்களைப் போதித்து வந்தார். 

இப்புதுமை நடந்த இடத்தில் பழைய காயல் பங்குத்தந்தை அருட்பணி. J. X பூபாலராயர் அவர்களால் சவேரி நவஸ்தான் என்ற கெபி கட்டப்பட்டு, தூத்துக்குடி மறை மாவட்ட முதல் ஆயர் மேதகு கபேரியேல் பிரான்சிஸ் திபுர்சியுஸ் ரோச் ஆண்டகை அவர்களால், 03.12.1938 அன்று புனிதப் படுத்தப் பட்டது.

1644 ல் இயேசு சபையின் அருட்தந்தை. ஆண்ட்ரூ லோபஸ் அவர்கள் உரோமைக்கு எழுதிய கடிதத்தில் இங்கு, Mother of God ஆலயம் இருப்பதாகவும், 800 கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும், 150 குழந்தைகள் மறைக்கல்வி பயின்று வருவதாகவும் குறிப்பிடப் படுகிறது. 

கி.பி 1700 ல் அருட்தந்தை. டிரம்மர் தொடங்கி 1742 வரை இயேசு சபையை சேர்ந்த பத்ருவாதோ குருக்கள் பணி செய்து வந்தனர். 

வாணிபம் செய்ய வந்த போர்ச்சுக்கீசியர்களால் 1708 ஆம் ஆண்டு புதியதாக பரிசுத்த பரிபூரண அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் புனித அந்தோனியார் ஆலயம், புனித சவேரியார் ஆலயம், சற்று தொலைவில் சிலுவையில் தொங்கும் இயேசு ஆலயம் உள்ளதாக குறிப்புகள் உள்ளன.

1892 ம் ஆண்டு வரை மயிலாப்பூர் மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டு,  கோவா குருக்களின் கண்காணிப்பில் பழையகாயல் இருந்துள்ளது. பின்னர் 1893 ஆம் ஆண்டு திருச்சி மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 1920 -ம் ஆண்டு வரை புன்னைக்காயல் பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது. 

புன்னைக்காயல் பங்கின் 16 இணை ஊர்களில் ஒன்றாக விளங்கிய பழையகாயல் 21.09.1920 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. கஸ்பார் ரோச் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இது முதல் சுதேச (இந்திய) குருக்களின் இறைப்பணி தொடர்கின்றது. 

சேசு சபை குருக்களால் ஊருக்கு கிழக்கே காட்டின் நடுவில் இயேசு குருசடி கட்டப்பட்டது. பின்னர் 12.05.1924 அருட்பணி. பெஞ்சமின் சூசைநாதர் அவர்களின் பெருமுயற்சியில் தற்போது காணப்படும் அழகிய ஆலயம் கட்டப்பட்டது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இறை மக்கள் வந்து ஜெபித்து இறை ஆசீர் பெற்றுச் செல்கின்றனர்.

குழந்தை இல்லாத தம்பதிகள் இவ்வாலயம் வந்து ஜெபித்து, குழந்தை வரம் கிடைத்து சாட்சியம் பகிர்கின்றனர். 

பங்கின் நூற்றாண்டு விழா 21.09.2020 அன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. 

மரியின் ஊழியர் சபை இல்லம், 8 அருட்சகோதரிகளுடன் 19.03.1919 ல் தொடங்கப்பட்டது. 

23.12.1919 அன்று மேதகு ஆயர் கபிரியேல் பிரான்சிஸ் திபூர்சியஸ் ரோச் ஆண்டகை அருட்பணி. சூசைநாதர் அவர்களை தாளாளராகக் கொண்டு, பெண்களுக்கான புனித மரியன்னை பள்ளி துவக்கப் பட்டது. 

07.01.1972 ல் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது.

1906 ஆம் ஆண்டு ஆண்களுக்கான புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 07.06.1982 ல் அருட்பணி. தனிஸ்லாஸ் அவர்களால் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 

1984 ல் உயர் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றது. அருட்பணி. விஜயன் அவர்களின் முயற்சியால் 

28.06.1995 அன்று மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 

1975 ல் புனித இனிகோ பாலர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 

அருட்பணி. ஆன்றனி குரூஸ் அவர்களின் முயற்சியால் 29.07.1940 அன்று முக்காணியில் புனித அந்தோனியார் துவக்கப் பள்ளி உருவானது. அருட்பணி. ஞானபிரகாசம் அவர்களால் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. 

பங்கின் சிற்றாலயங்கள், கெபிகள்:

திருச்சிலுவை நாதர் திருத்தலம் (சேசு கோவில்)

புனித சவேரியார் கெபி 

புனித அந்தோனியார் சிற்றாலயம் 

புனித செபஸ்தியார் சிற்றாலயம் 

புனித லூர்து அன்னை கெபி 

புனித வனத்து அந்தோனியார் சிற்றாலயம் 

புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம்.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. பாலர் சபை 

2. நற்கருணை வீரர் சபை 

3. புனித அமலோற்பவ மாதா சபை 

4. தொண் போஸ்கோ இளைஞர் இயக்கம் 

5. திருக்குடும்ப சபை 

6. மரியாயின் சேனை 

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. பீடச்சிறுவர்கள்

9. பாடகற்குழு 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Rev.Fr. கஸ்பார் ரோச்  - 1920 – 

2. Rev.Fr. ஞானபிரகாசம் - 1920 – 1921

3. Rev.Fr. சிலுவை - 1921 

4. Rev.Fr. பெஞ்சமின் சூசைநாதர்  - 1921 – 1925

5. Rev.Fr. பெனடிக்ட் பெர்னாண்டோ - 1925 – 1932

6. Rev.Fr. J.X. பூபாளராயர் - 1932 – 1944

7. Rev.Fr. மரிய ஜோசப் - 1944 – 1950

8. Rev.Fr. F.M. பாக்கியநாதர் - 1950 

9. Rev.Fr. A. மிக்கேல் - 1950 –1952

10. Rev.Fr. G. சூசைநாதர் - 1952 – 1960

11. Rev.Fr. J. வில்வராயர் - 1960 – 

12. Rev.Fr. தேவசகாயம்  - 1960 – 1962

13. Rev.Fr. வெனான்சியுஸ் பெர்னாண்டோ - 1962 –1965

14. Rev.Fr. அமலதாஸ் விக்டோரியா - 1965 –1969

15. Rev.Fr. கபிரியேல் - 1969 –1970

16. Rev.Fr. ஞானபிரகாசம் -1970 – 1974

17. Rev.Fr. பங்கிராஸ் ராஜா - 1974 – 1975

18. Rev.Fr. ஜோசப் பென்சிகர்  -1975 – 1979

19. Rev.Fr. ஜோப் டிரோஸ்  - 1979 – 1981

20. Rev.Fr. ஸ்தனிஸ்லாஸ் - 1981 – 1984

21. Rev.Fr. கபிரியேல்- 1984 – 1987

22. Rev.Fr. ஜெயஜோதி - 1987 – 1988

23. Rev.Fr. லயோலா டிரோஸ் - 1988 – 1990

24. Rev.Fr. J. விஜயன் - 1990 – 1996

25. Rev.Fr. ஜான் போஸ்கோ- 1996 – 1998

26. Rev.Fr. சேவியர் சூசை மரியான் - 1998 – 2001

27. Rev.Fr. மகிழன்  - 2001 – 2006

28. Rev.Fr. ஜோஸ் புரூனோ  - 2006 – 2009

29. Rev.Fr. பவுல் ராபின்சன் - 2009 -2013

30. Rev.Fr. மரிய ஜான் கோஸ்தா - 2013 – 2014

31. Rev.Fr. ஜான் பால் லோபோ - 2014 - 2016

32. Rev.Fr. சகாயராஜ் ராயன்  2016 - 2020

33. Rev.Fr. அமலன் தமியான் (2020 - முதல்..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. அமலன் தமியான் அவர்களின் வழிகாட்டுதலில் பங்கின் உறுப்பினர்.