636 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோட்டை

   

புனித சூசையப்பர் ஆலயம் 

இடம் : புதுக்கோட்டை, இளையான்குடி தாலுகா

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : பரமக்குடி, 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம் 

பங்குத்தந்தை : அருள்பணி. M. ரமேஷ் 

குடும்பங்கள் : 22

மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள், திருப்பலி 

திருவிழா : மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள். 

வழித்தடம் : சாலைக்கிராமம் -RS மங்கலம் வழித்தடத்தில் வாதவனேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் 6கி.மீ நடந்தால் புதுக்கோட்டை ஊரை வந்தடையலாம்.

Location map : https://g.co/kgs/CWoczC

வரலாறு :

கி.பி 1760 ம் ஆண்டு புதுக்கோட்டை ஊர் தோன்றியதாக கூறப்படுகிறது. 

இவ்வூரில் 1919 ம் ஆண்டு குடிசை ஆலயம் கட்டப்பட்டது. 

சாலைக்கிராமம் பங்குத்தந்தை அருள்பணி. அகுஸ்தின் அவர்களின் முயற்சியாலும், இறைமக்களின் உதவியாலும் கி.பி 2000 ம் ஆண்டில் குடிசை ஆலயமானது சுண்ணாம்புக் கலவை, சிமென்ட் கலவையால் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு S. எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

கி.பி 2002 ம் ஆண்டு மே மாதத்தில் அருள்பணி. அகுஸ்தின் அடிகளாரின் முயற்சியால் முதன் முதலாக புனித சூசையப்பர் திருவிழா கோடியேற்றப்பட்டு, ஆடம்பர திருப்பலி, தேர்பவனியுடன் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இது முதல் ஒவ்வொரு ஆண்டும் இறைமக்களின் ஈடுபாட்டால் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அருள்பணி. அமலன் அவர்களின் பணிக்காலத்தில் புனித சூசையப்பர் நவநாள் புத்தகம் வெளியிட்டு, நவநாள் திருப்பலி சிறப்பிக்கப் படுகிறது. 

ஒவ்வொரு நாளும் காலை 05.30 மணிக்கு காலை ஜெபம் ஜெபமாலையும், மாலை 07.00 மணிக்கு மாலை ஜெபம் ஜெபமாலையும் நிறைவேற்றப் படுகின்றது. 

வளன் இளைஞர் மன்றம் துவக்கப்பட்டு, ஆலய வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகின்றது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மா. ரமேஷ்