குழந்தை இயேசு ஆலயம்
இடம்: திருநகர், பொன்மலை அஞ்சல், திருவெரும்பூர் தாலுகா
மாவட்டம்: திருச்சி
மறைமாவட்டம்: திருச்சி
மறைவட்டம்: பொன்மலை
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோனியார் ஆலயம், நத்தமாடிப்பட்டி
2. புனித சவேரியார் ஆலயம், நத்தமாடிப்பட்டி
பங்குத்தந்தை: அருள்தந்தை. ஆ. ஜேம்ஸ்
குடும்பங்கள்: 700 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள்: 11
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06.00 மணி மற்றும் மாலை 06.00 மணி
வாரநாட்களில் திருப்பலி : காலை 06.00 மணி
சனிக்கிழமை திருப்பலி மாலை 06.00 மணி
வியாழன் காலை 11.00 மற்றும் மாலை 06.00 மணிக்கும் குழந்தை இயேசு நவநாள் திருப்பலி நற்கருணை ஆசீர்
திருவிழா: ஜனவரி 25-ம் தேதி முதல் பெப்ரவரி 02-ம் தேதி வரை
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்தந்தை. சகாயராஜ், SJ
2. அருள்தந்தை. லியோ பாஸ்கரன், SJ
3. அருள்தந்தை. எட்வின் பால், OFM Cap
4. அருள்தந்தை. கபிரியேல் ராஜா, SJ
மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அருள்சகோதரிகள்
வழித்தடம்: திருச்சி -பொன்மலை -திருநகர்
Location map: https://g.co/kgs/6QPaHj
வரலாறு:
பொன்மலை பங்குத்தந்தையாக அருள்தந்தை. அமலதாஸ் (திண்டுக்கல் மறைமாவட்டம்) அவர்களின் பணிபுரிந்த போது திருநகரில் 1986 ஆம் ஆண்டுவாக்கில் குழந்தை இயேசுவிற்கு ஒரு குடிசை ஆலயம் கட்டப்பட்டது.
அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு திருநகர் தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. இன்னாசிமுத்து அவர்கள் பணிப்பொறுப்பேற்றார். இந்த வேளையில் திருநகரில் பங்குத்தந்தை இல்லம் இல்லை. ஆகவே பொன்மலையிலில் தங்கியபடியே திருநகரில் திருப்பலி நிறைவேற்றிச் சென்றார்.
அருள்பணி. இன்னாசிமுத்து அவர்களின் முயற்சியால் மக்களின் ஒத்துழைப்புடன் 1995 ஆம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் கபிரியேல் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்களின் ஆன்மீக வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றது திருநகர் இறைசமூகம்.
ஆலய பங்கேற்பு அமைப்புகள்:
1. புனித வின்சென்ட் தே பவுல் சபை
2. மரியாயின் சேனை
3. பங்குப்பேரவை
4. பாடகற்குழு
5. கத்தோலிக்க சங்கம்
6. இளையோர் இயக்கம்
துறவற இல்லங்கள்:
1. Servite sisters convent
2. St Thomas sisters convent
பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:
1. Child Jesus nursery and primary school, Thirunagar
2. புனித சவேரியார் தொடக்கப்பள்ளி, நத்தமாடிப்பட்டி
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்தந்தை. இன்னாசிமுத்து
2. அருள்தந்தை. மனோகர் தாஸ்
3. அருள்தந்தை. ஜெயராஜ்
4. அருள்தந்தை. விக்டர் இம்மானுவேல்
5. அருள்தந்தை. சகாய ராஜா
6. அருள்தந்தை. தாமஸ் அற்புதராஜ்
7. அருள்தந்தை. D. தாமஸ்
8. அருள்தந்தை. மெல்கியூர் ராஜா
9. அருள்தந்தை. தாமஸ் ஜான் ஜூலியன்
10. அருள்தந்தை. ஆ. ஜேம்ஸ்
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்தந்தை. ஆ. ஜேம்ஸ்