166 புனித சவேரியார் ஆலயம், இளம்பிலாவிளை


புனித சவேரியார் ஆலயம்

இடம் : இளம்பிலாவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்

பங்குத்தந்தை : அருட்பணி லியோ அலக்ஸ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி விஜின் மரியதாஸ்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : கிறிஸ்து அரசர் ஆலயம், முளவிளை.

குடும்பங்கள் : 130
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

திருவிழா : டிசம்பர் மாதம் துவக்கத்தில் ஐந்து நாட்கள்.

வழித்தடம் :

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுவாமியார்மடம் வந்து, அங்கிருந்து வேர்கிளம்பி சந்திப்பு வர வேண்டும்.

வேர்கிளம்பியிலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் பூவன்கோடு வந்து, அங்கிருந்து மங்காட்டுக்கடை சந்திப்பு (இளம்பிலாவிளை) வந்தால் இவ்வாலயம் செல்லலாம்.

இளம்பிலாவிளை வரலாறு :

கி.பி 1545 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில், புனித பிரான்சிஸ் சவேரியார் கல்லினால் செதுக்கப்பட்ட சிலுவையை இளம்பிலாவிளை பகுதியில் நாட்டி சென்றதாக கூறப்படுகிறது. இச்சிலுவை இருந்த இடத்தில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஓலை குருசடி ஆலயம் அமைத்து, மக்கள் செபமாலை செபித்து வந்தனர்.

கி.பி 1930 ஆம் ஆண்டில் கோட்டார் மறை மாவட்டம் உருவான பின்னர் பல மக்கள் திருமுழுக்கு பெற்றனர்.

அருட்பணியாளர்கள் லூக்காஸ், பாஸ்கல் ஆகியோரின் முயற்சியால் ஓடு வேய்ந்த சிறு குருசடி ஆலயம் அமைத்து திருப்பலி நிறைவேற்றினார்கள். மணலிக்கரை பங்கின் கிளைப் பங்காக சிறப்பாக செயல்பட்டு வந்தது.

பின்னர் பெரிய ஆலயம் கட்டப்பட்டு 23.04.1963 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. அவ்வேளையில் 34 குடும்பங்கள் திருமுழுக்கு பெற்று, 49 குடும்பங்களாக உயர்வடைந்தது.

21.08.1984 முதல் மணலிக்கரை பங்கிலிருந்து, முளவிளை தனிப்பங்கான போது இளம்பிலாவிளை, முளவிளையின் கிளைப் பங்காக ஆனது.

1963 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஓட்டினால் ஆன ஆலயம் பழுதடைந்த காரணத்தால், புதிய ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி. S. K. ஜோஸ் ராபின்சன் அவர்களின் முயற்சியால் பணிகள் நிறைவு பெற்று 09.12.1998 அன்று மேதகு ஆயர் அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.