இயேசுவின் திருஇருதய ஆலயம்
இடம்: சிவந்தியாபுரம், திசையன்விளை தாலுகா, தெற்கு விஜயபாராயணம் (PO), 627118
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ஜெபமாலை மாதா ஆலயம், மன்னார்புரம்
பங்குத்தந்தை அருட்பணி. J. எட்வர்ட்
குடும்பங்கள்: 40
மாதத்திற்கு இரண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 07:30 மணிக்கு திருப்பலி
திருவிழா: ஜூன் மாதத்தில் இயேசுவின் திருஇருதய பெருவிழாவை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. சூசை மாணிக்கம், கல்கத்தா
2. அருட்சகோதரி. அமிர்தா
3. அருட்சகோதரி. சேசு பிரதீபா
வழித்தடம்: திருநெல்வேலி -நாங்குநேரி வழி திசையன்விளை செல்லும் பேருந்துகள். இறங்குமிடம் சிவந்தியாபுரம்.
Location map: https://maps.google.com/?cid=6999832730774644527&entry=gps
வரலாறு:
கி.பி. 1939-ம் ஆண்டில் அணைக்கரை பங்குத்தந்தை அருட்பணி. கபிரியேல் நாதர் அவர்களின் நற்செய்தி அறிவிப்பின் பயனாக, சிவந்தியாபுரத்தில் 60 குடும்பங்கள் கத்தோலிக்கம் தழுவினர்.
அணைக்கரை பங்குத்தந்தை அருட்பணி. செட்ரிக் பீரிஸ் அவர்களால் 1975 -ம் ஆண்டில் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனிடையே 1982 -ம் ஆண்டில் அணைக்கரை பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு மன்னார்புரம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. அதுமுதல் சிவந்தியாபுரம் ஆலயமானது, மன்னார்புரத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்னார்புரம் பங்குத்தந்தை அருட்பணி. ராஜா போஸ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 1985ம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. ஜேசு வில்லியம் பணிக்காலத்தில் 1995-ம் ஆண்டில் ஆலய முன்மண்டபம் கட்டப்பட்டது.
ஆர்.சி. அகஸ்தியர் தொடக்கப்பள்ளியானது அருட்பணி. செபாஸ்டின் பெர்னாண்டோ அவர்களால் 31.05.1953 அன்று முதல் தொடங்கப்பட்டது. தற்போது வரை பழைய கட்டிடத்திலேயே, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இயேசுவின் திருஇருதய அன்பிலும் அரவணைப்பிலும் பொன்விழாவை நோக்கி பயணிக்கும் சிவந்தியாபுரம் ஆலயத்திற்கு வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...
ஆலய வரலாறு: தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு மலர்.
தகவல்கள்: ஆலய உறுப்பினர் திரு. சகாய அருள் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: அருட்பணி. அருள்மணி அவர்கள்.