இடம் : புனித வனத்து சின்னப்பர் நகர், காட்டுவட்டம்
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : மேட்டூர்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலம், RC செட்டிப்பட்டி
பங்குத்தந்தை : அருட்பணி. A. எட்வர்ட் ராஜன்
குடும்பங்கள் : 145
அன்பியங்கள் : 4
சனி : மாலை 06.00 மணிக்கு திருப்பலி
திருவிழா : ஜனவரி 15ம் தேதி.
வழித்தடம் : RC செட்டிப்பட்டியிலிருந்து நாரணம்பாளையம் புதூர் செல்லும் சாலையில் 1கி.மீ தொலைவில் காட்டுவட்டம் புனித வனத்து சின்னப்பர் நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
வரலாறு :
ஓமலூர் தாலுக்காவில், சரபங்கா நதிக்கரையில், இயற்கை எழில் கொஞ்சும் சின்னப்பர் நகரில் அமைந்துள்ளது புனித வனத்து சின்னப்பர் ஆலயம். பழைமையான இந்த ஆலயமானது 2008 ஆம் ஆண்டு வரை சிற்றாலயமாக இருந்து வந்தது.
RC செட்டிப்பட்டி பங்கின் பங்குத்தந்தை அருள்பணி. D. A. பிரான்சிஸ் அவர்களின் முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்புடன் ஒரு புதிய ஆலயமானது எழுப்பப்பட்டு அருள்பணி. இக்னேஷியஸ் பிதேலிஸ் பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று, 15.01.2009 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
RC செட்டிப்பட்டி பங்கில் விவசாயம் செய்து வாழும் மக்கள், தங்கள் விளைபொருட்களை முதலில் இவ்வாலயத்தில் கொண்டு வந்து அர்ப்பணம் செய்வது குறிப்பிடத் தக்கது.
தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. A. எட்வர்ட் ராஜன்.