331 புனித அன்னம்மாள் ஆலயம், நெசப்பாக்கம்

   

புனித அன்னம்மாள் ஆலயம்

இடம் : நெசப்பாக்கம், சென்னை

மாவட்டம் : சென்னை
மறை மாவட்டம் : சென்னை மயிலை உயர் மறை மாவட்டம்

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : Fr Eucharist

குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : 07.00 am English, காலை 08.30 மணிக்கு தமிழ், மாலை 06.30 மணிக்கு தமிழ்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை : மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜுலை மாதத்தில்.

Location :

The Church situated at the southern part of Chennai,India. The church is on the internal road of Nesapakkam.It is close to Ashok Nagar only (2.9 km) via Anna Main Road.

வரலாறு :

ஆரம்பத்தில் இவ்வாலயமானது அசோக்நகர் புனித மத்தியாஸ் ஆலயத்தின் கிளைப்பங்காக இருந்தது. பின்னர் 1999-இல் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை பிலிப் மந்தாரா அவர்கள் போறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.

அருட்தந்தை பிலிப் மந்தாரா (1998-2002) அவர்களின் பணிக்காலத்தில் 2000 -ம் ஆண்டு புதிய ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2002 -இல் பணிகள் நிறைவு பெற்று அர்ச்சிக்கப்பட்டது.

தொடர்ந்து பணிபுரிந்த அருட்தந்தை மார்ட்டின் அவர்கள் பணிக்காலத்தில் (2003-2010) St Ann's matriculation school கட்டப்பட்டு, ஏழை குழந்தைகள் படிக்க வசதி செய்யப்பட்டது.

அருட்தந்தை K. M தாமஸ் பணிக்காலத்தில் (2010-2012) தூய லூர்து மாதா கெபி கட்டப்பட்டது.

அருட்தந்தை B. K பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் (2012-201) மக்களின் ஆன்மீகத் தேவைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப் பட்டது. ஜெனரேட்டர் வசதி செய்யப் பட்டது.

அருட்தந்தை P. J லாரன்ஸ் பணிக்காலத்தில் (2014-2017) ஆலயமானது புனரமைப்பு பணிகள் (2014-2015) செய்யப்பட்டு புதுப்பொலிவு அடைந்தது. புனித அன்னம்மாள் மற்றும் புனித ஆரோக்கிய அன்னையின் புதிய சுரூபங்களை அமைத்து மக்களின் இறை விசுவாசத்தை ஆழப்படுத்தினார். புதிய கொடிமரம் வைக்கப் பட்டு ஆலயத்தை சுற்றிலும் இன்டர்லாக் வசதிகள் செய்து ஆலயத்தை புதுப் பொலிவு அடையச் செய்தார்.

தற்போது அருட்தந்தை F. J. X Eucharist அவர்கள் (2017 முதல் தற்போது வரை) இப்பங்கை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.

Altar Servers
Legion of Mary
St Vincent de Paul
Youth Group – Tamil
Franciscan III Order
Women SHSs- 4
என பல்வேறு சபைகள் இயக்கங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.