703 புனித சகாய அன்னை ஆலயம், இருங்கல்

  

புனித சகாய அன்னை ஆலயம்

இடம்: இருங்கல், செய்யாறு தாலுகா

மாவட்டம்: திருவண்ணாமலை

மறைமாவட்டம்: வேலூர்

மறைவட்டம்: வந்தவாசி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பாராசூர்

பங்குத்தந்தை: அருட்பணி. M. ஜான்சன்

Contact no: +91 90478 09806

குடும்பங்கள்: 40

ஞாயிறு திருப்பலி காலை 07.30 மணி

ஒவ்வொரு மாதத்தின் 24-ம் தேதி மாலையில் சகாய மாதா நவநாள், தேர்பவனி, திருப்பலி, அன்பின் விருந்து

திருவிழா: மே மாதத்தில்

வழித்தடம்: செய்யாறு -சேத்துப்பட்டு வழித்தடத்தில், செய்யாறிலிருந்து 8கி.மீ தொலைவில் இருங்கல் அமைந்துள்ளது.

செய்யாறு -ஆரணி வழித்தடம் வழியாகவும் இருங்கல் வரலாம்.

Location map: 

Sagaya madha church

irungal colony

https://maps.app.goo.gl/Hoe9PNMFM6yG1mBu8

வரலாறு:

திருவத்திபுரம் பங்கின் ஒருபகுதயாக இருங்கல் ஊர் இருந்து வந்தது.

1952 ஆம் ஆண்டு பாராசூர் தனிப் பங்காக ஆனபோது இருங்கல் ஊரானது, பாராசூர் பங்கின் கீழ் வந்தது.

பாராசூர் பங்குத்தந்தை அருட்பணி. A. தாமஸ் பணிக்காலத்தில் 1961 ஆம் ஆண்டு இருங்கல் புனித சகாய அன்னை ஆலயம் கட்டப்பட்டது.

பின்னர் அருட்பணி. A. ஜோசப் பணிக்காலத்தில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது.

அருட்பணி. M. ஜான்சன் பணிக்காலத்தில் ஆலயமானது 15.05.2018 அன்று வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சௌந்தரராஜூ அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப் பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. M. ஜான்சன்