530 தூய தஸ்நேவிஸ் அன்னை ஆலயம், மேல ஆலன்விளை

      

தூய தஸ்நேவிஸ் அன்னை ஆலயம்

இடம் : மேல ஆலன்விளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : குழித்துறை
மறைவட்டம் : காரங்காடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை

பங்குத்தந்தை : அருட்பணி. A. பிரைட் சிம்ச ராஜ்

குடும்பங்கள் : 66
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 07.15 மணிக்கு

வியாழன் திருப்பலி மாலை 06.00 மணிக்கு.

திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து நாட்கள்.

வழித்தடம் : திங்கள்நகர் -ஆசாரிபள்ளம் சாலையில், குருந்தன்கோடு சந்திப்பிலிருந்து இடது புறமாக இரட்டைக்கரைசானல் சாலையில் ஒரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஆலன்விளை ஆலயத்திலிருந்து, எதிர்திசையில் 1.5 கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map :
https://maps.google.com/?cid=11294759385892294986

வரலாறு :

ஆலன்விளை பங்கிற்கு உட்பட்ட, மேல ஆலன்விளை பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவக் குடும்பங்கள் பல வாழ்ந்து வந்துள்ளன.

ஆலயத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாத காரணத்தால் இவர்கள், இப்பகுதியில் ஒரு குருசடியை அமைத்து கல்லால் ஆன சிலுவையை நிறுவி மாலை நேரத்தில் செபமாலை செய்து, வழிபட்டு வந்துள்ளனர்.

நாளடைவில் மக்களின் முழு ஒத்துழைப்புடன் இப்பகுதிக்கு சாலை வசதியும், மின்சார வசதியும் ஏற்படுத்தப் பட்டது.

2000 ஆம் ஆண்டு அப்போதைய வட்டார முதல்வர் பேரருட்பணி. K. அமிர்தராஜ் அவர்களின் ஆலோசனையின்படி, ஆலன்விளை பங்குத்தந்தை அருட்பணி. K. மரியதாஸ் அவர்களின் பெரும் முயற்சியால் குருசடியும், அதைச் சார்ந்த சொத்துக்களும் ஆயர் இல்லத்திற்கு எழுதி கொடுக்கப் பட்டது. அப்போது முதல் வருடத்திற்கு ஒருமுறை திருவிழா திருப்பலியும், அடக்க திருப்பலிகளுக்கான அனுமதியும் பெறப்பட்டது.

இந்த குருசடியானது பங்கு ஆலயமான ஆலன்விளை தூய லூர்து அன்னை ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. எனவே இப்பகுதியில் ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் எனவும், வாரத்திருப்பலி வேண்டும் எனவும் 2008 ஆம் ஆண்டு மேதகு ஆயரிடம் கோரிக்கை வைக்கப் பட்டன. இதனை ஏற்று மேதகு ஆயர் அவர்கள் இப்பகுதியில் சிற்றாலயம் அமைக்கவும், வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருப்பலி நிறைவேற்றவும் அனுமதியளித்தார்கள்.

20.01.2008 அன்று முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி. ஜார்ஜ் பொன்னையா அவர்கள் தலைமையில், முதல் வாரத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, சிற்றாலயத்திற்கான அடிக்கல்லும் நாட்டப் பட்டது.

இப்பகுதி மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பினாலும், பங்குத்தந்தை அருட்பணி. P. சுரேஷ்குமார் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. C. ஆன்றனி ஜெகன் அஸ்வின் ஆகிய இருவரின் முழு முயற்சியாலும் விரைவாக ஆலயம் கட்டப்பட்டு, 15.06.2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. தொடர்ந்து ஞாயிறு திருப்பலியும் நடைபெற்று வருகிறது.

பங்கில் உள்ள சபைகள், இயக்கங்கள் :
1. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
2. இளைஞர் இயக்கம்
3. மறைக்கல்வி மன்றம்
4. அன்பிய ஒருங்கிணையம்
5. வழிபாட்டுக் குழு
6. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
7. மரியாயின் சேனை
8. பங்கு அருட்பணிப் பேரவை.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரைட் சிம்ச ராஜ் அவர்கள்.

வரலாறு : பங்கு ஆலய பொன்விழா மலர்.

புகைப்படங்கள் : அருட்பணி. வ. பெனிட்டோ அவர்கள்.