437 புனித லூர்து அன்னை ஆலயம், செம்பாடு


புனித லூர்து அன்னை ஆலயம்

இடம் : செம்பாடு, வள்ளியம்மாள் புரம் (PO), வள்ளியூர் (Via), 627117.

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : வடக்கன்குளம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி

பங்குத்தந்தை : அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன்.

குடும்பங்கள் : 25
அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : மாலை 07.00 மணிக்கு.

திருவிழா : பெப்ரவரி மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்பணி. ஆன்றனி ரூபர்ட்
2. அருட்பணி. ஜேசு சுரேஷ்

3. அருட்சகோதரி. பாப்பா
4. அருட்சகோதரி. ஜோதி.

வழித்தடம் : வள்ளியூர் -ஆ. திருமலாபுரம் மினி பேருந்து.

Location map : https://maps.app.goo.gl/LtoKifnSpad7ER778

வரலாறு :

செம்பாடு கிராமத்தில் வாழ்ந்த மக்கள் பனை மரத்தை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

கள்ளிகுளம் பங்கில் பணியாற்றிய ஐரோப்பாவைச் சேர்ந்த அருட்பணி. கௌசானல் அவர்கள் இப்பகுதி மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். அதன் பயனாக பத்து குடும்பங்கள் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவம் தழுவினர். இவர்களது ஆன்மீகத் தேவைக்காக ஏற்கனவே இருந்த செம்மண் கொண்டு கட்டப்பட்ட சிறு கட்டிடத்தில், புனித லூர்து அன்னையின் சுரூபத்தை வைத்து ஜெபித்து வந்தார்கள். வருடத்திற்கு எப்போதாவது திருப்பலிகள் நடந்தன.

கிழவனேரி தனிப்பங்காக ஆனபோது அதன் கிளைப்பங்காக செம்பாடு ஆனது.

அருட்பணி. அமிர்தம் பணிக்காலத்தில் (1976) புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, அருட்பணி. செங்கோல் மணி அவர்களின் பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று 1977 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது. இவ்வாலயமானது ஓடு வேயப்பட்ட சுண்ணாம்பு சுவர்களாலும் ஆனதாகும்.

1977 ஆம் ஆண்டு முதல் மாதத்திற்கு இரண்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இவ்வாண்டு முதல் ஆலயத் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் தொடர்கின்றது.

மக்களின் ஆன்மீகத் தேவையை கருத்தில் கொண்டு பின்னர் மாதத்தில் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நடைபெறத் துவங்கியது.

அழகிய புனித செபஸ்தியார் கெபி ஒன்று கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் வசந்தன் மற்றும் அவரது வழிகாட்டுதலில் ஆலய பொறுப்பாளர்.