274 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாத்தூர்


புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : மாத்தூர், சென்னை - 68

மாவட்டம் : சென்னை

சென்னை - மயிலை உயர் மறை மாவட்டம்.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி கிளமென்ட் பாலா

குடும்பங்கள் : 400
அன்பியங்கள் : 14

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும்.

திங்கள், செவ்வாய், புதன் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வியாழன், வெள்ளி, சனி திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

ஒவ்வொரு மாதமும் 08 -ஆம் தேதி மாலையில் ஆரோக்கிய அன்னையின் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், நோயிற்பூசுதல், தேர்பவனி தொடர்ந்து நேர்ச்சை உணவு.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29 -ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி நிறைவடையும்.

வரலாறு :

மாத்தூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயமானது, 2002 -ஆம் ஆண்டு 7800 சதுர அடி நிலம் வாங்கப்பட்டு இப்பகுதியில் இறை பணிக்கு வித்திடப்பட்டது. இதனை ஆதாரமாக வைத்து 11-02-2003 ல் மூன்று கிரவுண்ட் நிலமாக விசாலமாகியது. இதே ஆண்டில் இவ்விடத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு சிற்றாலயம் அமைத்திடும் பணிகள் துவக்கப்பட்டது.

03-09-2003 ல் சிற்றாலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டதுடன் திருவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

அருட்பணியாளர்களின் இறைபணியாலும் இறை மக்களின் ஒத்துழைப்பாலும் சிற்றாலயம் 2007 -ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டது.

அன்னையின் அன்பையும் அருளையும் அனைவரும் பெற்றிட 29-08-2007 ல் அன்னையின் கெபி கட்டப்பட்டது.

இறைமக்களின் ஒத்துழைப்பால் மேலும் நிலங்கள் 2008 -ஆம் ஆண்டு வாங்கப்பட்டது.

அருட்பணியாளர் இல்லம் 2011 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

05-08-2011 அன்று மாத்தூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கிளைப்பங்கு நிலையிலிருந்து தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

26-01-2013 ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

இறை இரக்கம், அயராத உழைப்பு நன்கொடைகளால் அழகிய புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 08-12-2015 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய பீடத்தின் கீழே தியான இல்லம் அமைக்கப்பட்டு மக்கள் செபிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மாத்தூர் ஆலயமானது பங்குமக்களின் ஆன்மீக ஈடுபாட்டினாலும், ஒத்துழைப்பாலும் இறைபணி செய்த அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலினாலும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.

மேலும் தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை கிளமென்ட் பாலா அவர்களின் வழிகாட்டுதலில் இன்னும் பல வளர்ச்சிப் பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் வாழ்வின் மாற்றத்தைக் காண மாத்தூர் ஆலயம் வாருங்கள் மாற்றத்தை தருவார்கள் புனித ஆரோக்கிய அன்னை..!

வழித்தடம் :

பெரம்பூர் - மூலக்கடை - மாதவரம் பால்பண்ணை - மாத்தூர் MMDA.

பேருந்துகள் :

பெரம்பூரிலிருந்து 164,
கிண்டி - 170 C
V இல்லம் 29 D
பிராட்வே(பாரிஸ்) 64 C & 38 H
திருவான்மியூர் 29 C
கோயம்பேடு 121 C

இறங்குமிடம் : மாத்தூர் MMDA