283 வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்


வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : அதிசயபுரம்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய இராஜகன்னி மாதா ஆலயம், கடகுளம்

பங்குத்தந்தை : அருட்பணி பிராக்ரஸ்

குடும்பங்கள் : 120
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் 29 -ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள். செப்டம்பர் 30 -ஆம் தேதி ஊர் பொது அசனம்.

சிறப்புகள் :

1883 - ஆண்டில் ஓலைக்குடில் ஆலயம் கட்டி தூய மிக்கேல் அதிதூதர் -ஐ பாதுகாவலராகக் கொண்டு இப்பகுதி மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

அப்போது முதல் சொக்கன்குடியிருப்பு பங்கின் கிளையாக இருந்து செயல்பட்டு வந்தது.

1993 - ல் கடகுளம் தனிப்பங்காகியது முதல் அதன் கிளைப் பங்காகியது. தனிப்பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்தந்தை பர்ணபாஸ் அவர்கள் ஆவார்.

தற்போதைய ஆலயமானது அருட்பணி சூசைராஜா (A. S ராஜா) அவர்களின் பணிக்காலத்தில், அவரது சொந்த முயற்சியில், வெளிநாட்டு நிதியுதவி பெற்று கட்டிமுடிக்கப்பட்டு 1994 -ஆம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது. அருட்தந்தை சூசை ராஜா அவர்களின் பணிக்காலம் அதிசயபுரம் தலத்திருச்சபையின் பொற்காலம் ஆகும்.

அருட்பணி மார்ட்டின் மனுவேல் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் லூர்து மாதா கெபி கட்டப்பட்டது.

மாதத்தின் கடைசி சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு புனிதரின் தேர்பவனி, நண்பகல் 12.00 மணிக்கு ஆடம்பர திருப்பலி, நோயாளர் மந்திரிப்பு, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இறுதியாக அசன விருந்து சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் சுற்றுப் பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி அந்தோணி கலைச்செல்வன்

புனிதரின் மீது அதிசயபுரம் பங்கு மக்கள் மிகுந்த பற்றுதல் கொண்டு "வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் "என்று அழைப்பது தனிச்சிறப்பு.

வழித்தடம் :

திசையன்விளை - பெரியதாழை செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் அதிசயபுரம் உள்ளது.

திசையன்விளை மற்றும் பெரியதாழை-யிலிருந்து எப்போதும் சிற்றுந்து (Mini bus) இவ்வூருக்கு இயக்கப்படுகிறது.