706 புனித இலாரன்ஸ் ஆலயம், கஸ்தம்பாடி

       

புனித இலாரன்சியார் ஆலயம்

இடம்: கஸ்தம்பாடி, கஸ்தம்பாடி அஞ்சல், போளூர் தாலுகா

மாவட்டம்: திருவண்ணாமலை

மறைமாவட்டம்: வேலூர்

மறைவட்டம்: போளூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், களம்பூர்

2. புனித யோவான் ஆலயம், முனிவந்தாங்கல்

3. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், கட்டுப்பூண்டி

4. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், இலங்கை அகதிகள் முகாம், கண்ணிகாபுரம்

பங்குத்தந்தை: அருட்பணி. L. ஜோசப்

தொடர்புக்கு: 7639571200

குடும்பங்கள்: 105 (கிளைப்பங்குகள் சேர்த்து 296)

அன்பியங்கள்: 5

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:15 மணி

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி: காலை 06:00 மணி

வியாழன் மாலை 06:30 மணி அற்புத குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலி, ஜெபமாலை

சனி மாலை 06:00 மணி ஜெபமாலை, திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணி: ஜெபமாலை, ஆராதனை, திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி. 01-ம் தேதி முதல் 09-ம் தேதி வரை நவநாள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ மரிய செல்வம், SDB (முனிவந்தாங்கள்)

2. அருட்பணி. F. பெலிக்ஸ் கமல், (கஸ்தம்பாடி) வேலூர் மறைமாவட்டம்

3. அருட்பணி. D. பிரான்சிஸ், MSC (கட்டுப்பூண்டி)

4. அருட்சகோதரி. ராக்கினி, சலேசிய சபை

5. அருட்சகோதரி. ஷகிலா, FSV

வழித்தடம்: திருவண்ணாமலை - ஆரணி வழித்தடத்தில் களம்பூருக்கு முன்னர் கஸ்தம்பாடி அமைந்துள்ளது. 

ஆரணி -கஸ்தம்பாடி 12கி.மீ

Location map: https://g.co/kgs/ATz2Tg

வரலாறு:

கஸ்தம்பாடி புனித இலாரன்சியார் ஆலயமானது, 1964 ஆம் ஆண்டில் அப்போதைய சந்தவாசல் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி. P. கப்பியாகி, SDB அவர்களால் கட்டப்பட்டது. தொடர்ந்து சந்தவாசல் பங்கின் கிளைப்பங்காக சிறப்பாக செயல்பட்டு வந்தது.

1978 ஆம் ஆண்டில் கஸ்தம்பாடி தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஜோசப் செருவில் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அந்த காலகட்டத்தில் இப்பகுதியில் மிகுந்த பங்சம் நிலவி வந்த போது மக்கள் உணவு இல்லாமல் மிகுந்த கஷ்டப் பட்டார்கள். திருச்சபையின் வழியாக கிடைக்கப்பெற்ற கோதுமை, எண்ணெய் போன்றவற்றை அப்போது இங்கு பணியாற்றி வந்த அருட்பணியாளர்கள் மக்களுக்கு கொடுத்து பாதுகாத்து வந்தனர்.

இறைவனின் அன்பிலும், பாதுகாப்பையும் உணர்ந்த இம்மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவம் தழுவினர்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் இங்கு பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள், இப்பங்கின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டு, வளர்த்து வந்தனர்.

2014 ஆம் ஆண்டு அருட்பணி. லூவா தாமஸ் பணிக்காலத்தில் பங்கின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

தொடர்ந்து கஸ்தம்பாடி பங்கு பல்வேறு ஆன்மீக பரிமாணங்களைப் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

பங்கில் உள்ள இயக்கங்கள்:

1. புனித லாரன்சியார் இளையோர் குழு

2. குழந்தை இயேசு பீடச்சிறார்

3. கோல்பிங்

கஸ்தம்பாடி பங்கில் இறைப்பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. வனத்தையன் (1977-1978)

2. அருட்பணி.‌ ஜோசப் செருவில் (1977-1984)

3. அருட்பணி. செபாஸ்டின் கொய்காரா (1984-1985)

4. அருட்பணி.‌ அல்போன்ஸ் தாஸ் (1986-1987)

5. அருட்பணி.‌ வில்பிரட் டானியல் (1987-1990)

6. அருட்பணி.‌ I.  ஆரோக்கியசாமி (1990-1991)

7. அருட்பணி.‌ P. J. தாமஸ் (1991-1995)

8. அருட்பணி. ரட்சகநாதன் (1996-1997)

9. அருட்பணி.‌ பால் ராஜரீகம் (1997-1999)

10. அருட்பணி.‌ L. ஜோசப் ஜூலியன் (1999-2005)

11. அருட்பணி. S. எட்வர்ட் ராஜ் (2005-2006)

12. அருட்பணி. Y. ஆரோக்கியசாமி (2005 நவம்பர்27 to 2006 ஜூன்6)

13. அருட்பணி.‌ G. ஆரோக்கியசாமி (2006-2007)

14. அருட்பணி. S. ஆரோக்கிய ராஜ் (2007-2010)

15. அருட்பணி. P. சின்னப்பன் (2010-2012)

16. அருட்பணி.‌ லூவா தாமஸ் (2012-2017)

17. அருட்பணி.‌ P. அலெக்சாண்டர் (2017-2019 டிசம்பர்)

18. அருட்பணி. L. ஜோசப் (2019 டிசம்பர் முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. L. ஜோசப்