34 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மைலகோடு


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்.

இடம் : மைலகோடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்குதளம்
கிளைப்பங்கு : புனித சவேரியார் ஆலயம், சேவியர்புரம்.

குடும்பங்கள்: 700
அன்பியங்கள் :21

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி மற்றும் காலை 07.00 மணி.

பங்குத்தந்தை (2018) : அருட்பணி ஐசக் ராஜ்.

திருவிழா : செப்டம்பர் 29 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

சிறு குறிப்பு :

1933 ம் ஆண்டு உருவான இப் பங்குதளமானது, கல்குறிச்சி - புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்தது. பின்னர் 1971 ம் ஆண்டில் தனிப் பங்காக உயர்ந்தது. தற்போதைய புதிய ஆலயமானது 2003 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

வரலாறு :

கி.பி 1929 ஆம் ஆண்டு பரவிய காலரா நோயிலிருந்து மக்களைக் காக்க பஜனை பாடிய போது கிடைத்த காணிக்கையாக கிடைந்த நிதியைக் கொண்டு நிலம் வாங்கப்பட்டு தூய மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டது.

பின்னர் மக்களின் முடற்சியால் ஓலைக்கூரையால் சிறு ஆலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1933 ஆம் ஆண்டு கருங்கல் சுவர் ஓட்டுக்கூரை ஆலயம் அமைக்கப்பட்டு கல்குறிச்சி பங்கின் கிளைப் பங்காக சிறப்பாக செயல்பட்டது. 

கி.பி 1971 ஆம் ஆண்டில் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 

2003 ஆம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. 

கார்மல் சபை கன்னியர் இல்லம். 

புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி. 
மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியன இங்கு உள்ளன. 

மண்ணின் மைந்தர்கள் :

அருட்பணி. ஹிலாரி
அருட்பணி. தாமஸ்
அருட்பணி. ஜெனோ
அருட்பணி. தாமஸ்
அருட்பணி. டைனிசியஸ்

அருட்சகோதரி. லியோனி ICM
அருட்சகோதரி. ஞானசெல்வம் 
அருட்சகோதரி. செலின்மேரி.