682 புனித சவேரியார் ஆலயம், திருநெல்வேலி டவுன்

  
புனித சவேரியார் ஆலயம்

இடம்: திருநெல்வேலி டவுன்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய அடைக்கல மாதா ஆலயம், திருநெல்வேலி டவுன்

பங்குத்தந்தை: அருள்பணி. மை. பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 30 (நெல்லைடவுன், புனித செபஸ்தியார் ஆலயமும் சேர்ந்து)

அன்பியம் : 1 (நெல்லை டவுன், புனித செபஸ்தியார் ஆலய இறைமக்களும் இணைந்து)

திருப்பலி: தேவைக்கேற்ப

திருவிழா: நவம்பர் மாதம் 24-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 03-ம் தேதி வரை

வரலாறு:

புனித சவேரியார் தென் இந்தியாவில் இறைப்பணி செய்து வந்த காலங்களில் நெல்லை டவுனில் உள்ள சில குடும்பங்கள் கிறூஸ்துவை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தனர். கி.பி 1622 ஆம் ஆண்டில் புனித சவேரியார் புனிதராக அறிவிக்கப்பட்ட பின்னர் கி.பி 1660 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் ஆலயம் கட்டப்பட்டது. 

புனித சவேரியார் ஆலயத்தைச் சேர்ந்த 7 குடும்பங்கள் நவாப் படையில் பணிபுரிந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள். 

இந்த ஆலயமானது முதலில் வீரவநல்லூர் பங்கின் கீழ் இருந்தது.

1742 ஆம் ஆண்டு முதல் அருள்பணி. ஜோசப் த அப்ரியு தலைமையில் பேட்டையை  மையமாகக் கொண்டு இந்த ஆலயமும் செயல்பட்டது.

1941 ஆம் ஆண்டு மக்கள் அமரும் இடம் ஓடு வேய்ந்து கட்டப்பட்டது.

1998 ஆம் ஆண்டு ஓடு மாற்றப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்டது.

பழைய பீடம் மாற்றப்பட்டு திருச்சிலுவையை மையமாக வைத்து புதிதாக கட்டப்பட்டது.

2005 ஆம் ஆண்டு நெல்லை டவுன் தூய அடைக்கல மாதா ஆலயம் தனிப்பங்கான போது, அதன் கிளைப்பங்காக இவ்வாலயம் ஆனது.

2007 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் ஆலய முகப்பு மண்டபம் கட்டப்பட்டது.

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ்