711 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முகையூர்

     

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம்: முகையூர், முகையூர் PO, 605755

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: திருக்கோவிலூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித சூசையப்பர் ஆலயம், ஒடுவான்குப்பம்

2. இருதய ஆண்டவர் ஆலயம், இருதயபுரம்

3. புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், செங்கமேடு -சித்தாத்தூர்

4. குழந்தை இயேசு ஆலயம், சத்தியகண்டானூர் -ஆலம்பாடி

5. புனித அந்தோனியார் ஆலயம், காடகனூர்

6. புனித லூர்து அன்னை ஆலயம், பில்ராம்பட்டு

7. மேல்வாலை

8. அடுக்கம்

9. ஒட்டம்பட்டு - அருணாபுரம்

பங்கின் திருத்தலம்: முகையூர் மகிமை மாதா திருத்தலம்

பங்குத்தந்தை: அருட்பணி. A. எட்வர்ட் பிரான்சிஸ்

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. S. ஜான்சன்

பள்ளி முதல்வர்: அருட்பணி. T. நசியான் கிரகோரி

கத்தோலிக்க குடும்பங்கள் : 1000

அன்பியங்கள்: 12

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு முதல் திருப்பலி காலை 05:00 மணி, இரண்டாவது திருப்பலி காலை 08:00

நாள்தோறும் திருப்பலி காலை 05:30

மகிமை மாதா கெபியில்: ஒவ்வொரு சனிக்கிழமை காலை 05.45 மணிக்கு  மகிமை மாதா நவநாள், திருப்பலி.

மாலை 06:00 திருப்பலி, மகிமை மாதா தேர்பவனி, மகிமை மாதா நவநாள், நற்கருணை ஆசீர்வாதம், நேர்ச்சை உணவு

பங்குத் திருவிழா:

கொடியேற்றம் - மார்ச் மாதம்  03 -ம் தேதி

திருவிழா - மார்ச் மாதம் 12-ம் தேதி

முகையூர் மகிமை மாதா திருவிழா: 

மே மாதம் 9-ம் தேதி முகையூர்  மகிமை மாதா அணையா விளக்கு ஏற்றப்பட்டு, 17-ம் தேதி திருவிழா

40 - நாட்கள் நோன்பு (விரதம்) :  ஏப்ரல் 07

09 - நாட்கள் நோன்பு (விரதம்) : மே – 08

03 - நாட்கள் நோன்பு (விரதம்) : மே – 14

அணையா விளக்கு : மே – 09

திருவிழா :  மே – 17

மகிமை மாதாவிற்கு ஆறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது:

1. பிப்ரவரி மாதம் 11 -ம் தேதி தூய லூர்து மாதா திருவிழா

2. மார்ச் 21-ம் தேதி மங்கள வார்த்தை திருவிழா

3. மே மாதம் 17-ம் தேதி மகிமை மாதா திருவிழா

4. ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி மாதாவின் விண்ணேற்பு பெருவிழா

5. செப்டம்பர் மாதம் 8-ம் தேதி அன்னை மாமரியின் பிறப்பு பெருவிழா

6. டிசம்பர் மாதம் 8-ம் தேதி தூய அமலோற்பவ அன்னை திருவிழா

முகையூர் மண்ணின் இறையழைத்தல்கள்:

1. பேராயர். Dr. A. M. சின்னப்பா, SDB (ஆயந்தூர்) 

2. Rev. Fr. M. மரிய ஜோசப் பிரகாசம், SJ

3. Rev. Fr. P. அருள்தாஸ் (கொடுங்கால்)

4. Rev. Fr. S. இயேசுதாஸ், SJ

5. Rev. Fr. V. மார்க், SDB (ஆயந்தூர்)

6. Rev. Fr. A.  ஆரோக்கியதாஸ்

7. Rev. Fr. S. அந்தோணி சகாயம்

8. Rev. Fr. S. அந்தோணி தாஸ், SJ 

9. Rev. Fr. L. ஏசு மரியான், SJ (கொடுங்கால்)

10. Rev. Fr. R. S. தோமினிக் சாவியோ, MEP (ஆற்காடு)

11. Rev. Fr. P. ஜான் போஸ்கோ, (செங்கல்பட்டு மறைமாவட்டம்)

12. Rev. Fr. A. அம்புரோஸ், Kolkata Diocese (கொடுங்கால்)

13. Rev. Fr. Dr. M. தார்சியூஸ் பிரிட்டோ, (ஜான்சி)

14. Rev. Fr. Dr. S. ஜான் போஸ்கோ, CPPS

15. Rev. Fr. D. ஜெயசிங் டேவிட், CPPS

16. Rev. Fr. M. மைக்கேல் ஆடேசர், Kolkata (கொடுங்கால்)

17. Rev. Fr. P. மார்க், Kolkata

18. Rev. Fr. Dr. A. புஷ்ப அன்பு, SVD

19. Rev. Fr. D. ஜெயசீலன், Sivagangai

29. Rev. Fr. P. சகாய தாஸ், OSM

21. Rev. Fr. G. பால் ஆரோக்கியம், SJ

22. Rev. Fr. J. அபிரகாம்

23. Rev. Fr. S. திபூரிசியூஸ் அந்தோணிராஜா, செங்கல்பட்டு மறைமாவட்டம்

24. Rev. Fr. L. அருள்தாஸ், West Bengal (கொடுங்கால்)

25. Rev. Fr. I. இருதயராஜ், CPPS (இருதயபுரம்)

26. Rev. Fr. S. எட்வின் ராஜ்குமார், Ahamadabad

27. Rev. Fr. A. அந்தோணி குரூஸ், SJ

28. Rev. Fr. R. பிராங்க்ளின், CPPS (இருதயபுரம்)

29. Rev. Fr. I. கில்பர்ட் ஜெயராஜ், SDB

30. Rev. Fr. S. அருள் பிரான்சிஸ், HGN

31. Rev. Fr. D. லியோ விஜய் புஷ்பராஜ்

32. Rev. Fr. C. இராபர்ட் பெர்னாண்டஸ், Chandigarh

33. Rev. Fr. P. A. அருள்தாஸ்

34. Rev. Fr. R. இராபர்ட், SVD

35. Rev. Fr. Dr. A. கிறிஸ்டோபர் ஜோசப் குரூஸ், HGN

36. Rev. Fr. M. ஆரோக்கிய ராஜா, CPPS

37. Rev. Fr. L. கிறிஸ்து ராஜா, OFM Cap

38. Rev. Fr. S. ஜார்ஜ் வின்சென்ட், ALCP OSS

39. Rev. Fr. P. செபஸ்டின் ராஜ், SMM

40. Rev. Fr. S. எட்வர்ட் ஆனந்த், 

41. Rev. Fr. A. அமிர்தராஜ், SJ

42. Rev. Fr. M. ஆரோக்கியதாஸ், CPPS

43. Rev. Fr. R. லூர்து ஜெரால்டு

44. Rev. Fr. A. ஜெயபால், SVD

45. Rev. Fr. M. ஜெயபிரகாஷ்

46. Rev. Fr. S.பால்ராஜ், MMI

47. Rev. Fr. P. வின்சென்ட் ராஜ், MMI

48. Rev. Fr. B. ஒளிவியர் பர்ணபாஸ், FSM

49. Rev. Fr. R. ஜான்பால், CPPS

50. Rev. Fr. ரெனால்ட் பாஸ்கல், SSP

51. Rev. Fr. A. ராஜ், ALCP OSS

52. Rev. Fr. D. ஜெகநாதன், CPPS

53. Rev. Fr. C. சவுந்தர் மகிமை நாதன், CPPS

54. Rev. Fr. A. அருண் பிரான்சிஸ், CPPS

55. Rev. Fr. A. கார்டர் தாமஸ், SJ

56. Rev. Fr. M. அருள்ராஜ், SM

57. Rev. Fr. A. ஆரோக்கிய பிரபாகர், France (ஒடுவான்குப்பம்)

58. Rev. Fr. ஜஸ்டின், MSFS (காடகனூர்)

59. Rev. Fr. R. மகிமை சரண்ராஜ், France

60. Rev. Fr. C. மகிமை ஜான் போஸ்கோ, SVD

61. Rev. Fr. M. சூசை ராஜ், BUXAR

62. Rev.Fr. D. வில்லியம் ராஜ், OFM Cap (ஒடுவான்குப்பம்)

63. Rev. Fr. A. அந்தோணி வித்தூஸ், OMI

64. Rev. Fr. ஆன்டனி லோபோ, IVD

முகையூர் பங்கின் இறையழைத்தல்களான நூற்றுக்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள் உலகத்தின் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணி புரிந்து கொண்டுருக்கிறார்கள்.

வழித்தடம்: விழுப்புரம் -திருக்கோவிலூர் வழித்தடத்தில் முகையூர் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து 24 கி.மீ தொலைவிலும், திருக்கோவிலூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் முகையூர் அமைந்துள்ளது.

Location map: https://goo.gl/maps/UnPf27dokGb3vZN57

முகையூர் பங்கு ஆலய வரலாறு:

கி.பி 1606 -ஆம் ஆண்டு இயேசு சபை மறைப்பணியாளர் இராபர்ட் தெ நொபிலி, புனித பிரான்சிஸ் சவேரியாரின் அடிச்சுவடுகளைத் தழுவி, புதிய மதுரை மிஷன் மறைப்பணி தளத்தை திருச்சிராப்பள்ளி -யை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பித்தார்.  

கி.பி. 1660 ஆம் ஆண்டுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் தண்டரை, ஆதிச்சனூர், வேட்டவலம் பகுதியில் குடியமர்த்தப்பட்டு இயேசு சபை குருக்களால் வழிநடத்தப்பட்டு வந்தனர்.

இவ்வேளையில் மதுரை மிஷனானது கொரட்டாம்பட்டு வரை பரவியிருந்தது. வீரசோழபுரத்திற்கு அருகிலும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். சித்தனாங்கூர் (இருந்தை அருகில்),  அத்திப்பாக்கம், கோட்டமங்கலம் (தெளி அருகில்), எறையூர் ஆகிய  பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

1681-82 ஆண்டுகளில் புனித அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ), அவரைத் தொடர்ந்து 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் இவர்களின் மறைப்பணியைத் தொடர்ந்து செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்தது. இக்காலத்தில் அத்திப்பாக்கம் மிஷன், மதுரை மிஷனின் அங்கமாக இருந்து வந்துள்ளது. 1700 களில் மதுரை மிஷன், கர்நாடக மிஷன் பெண்ணையாறு வரை எல்லை பரவியிருந்தது. ஆகவே முகையூர் இறைமக்கள், கர்நாடகா மிஷன் பிரெஞ்சு இயேசு சபை குருக்களால் வழிநடத்தப்பட்டு வந்தனர்.

1773 ஆம் ஆண்டு இயேசு சபை முடக்கப்பட்ட பின்னர், 1776 இல் பாரிஸ் அந்நிய வேதபோதக சபையினர் (MEP Father's) பாண்டிச்சேரி மிஷன் பொறுப்பேற்றனர். இவர்கள் 1777 ஆம் ஆண்டில் அத்திப்பாக்கம் மற்றும் சில பகுதியில் தங்கியிருந்து உறுதிபூசுதல் வழங்கினர். அத்திப்பாக்கம் பங்கின் கீழ் முகையூர் இருந்தது. 

அருட்பணி. ரோகர் மேற்பார்வையில் 1844-46 காலகட்டத்தில், அருட்பணி. சவரிநாதர் முகையூரில் 42*12* அளவில் சிலுவை வடிவ ஆலயம் கட்டியுள்ளார் என 1862 ஆம் ஆண்டு பேராலய பதிவேடு கூறுகிறது.

1854 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மறைமாவட்டத்தில் அத்திப்பாக்கம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. பியர் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

அருட்பணி. விஜியோன் (1859-1966) பணிக்காலத்தில் முகையூர், நங்காத்தூர் ஆலயங்களை தனிப்பங்காக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1866 ஆம் ஆண்டு நங்காத்தூர் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. ஆனால் முகையூர், அத்திப்பாக்கம் பங்கின் கீழ் தொடர்ந்தது.

அருட்பணி. அருள்நாதர் (1865-1867) முகையூரில் பங்குத்தந்தை இல்ல கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தார். 

1870 ஆம் ஆண்டு முகையூர் பங்கு ஏற்படுத்தப்பட்டது.

அருட்பணி. பால் சிமியோன் (சின்னப்பநாதர்) (1876-83) அவர்கள் பங்குத்தந்தை இல்லத்தை கட்டி முடித்தார்.

1897 முதல் 1899 வரையிலும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் துன்புற்றனர். இவர்களுக்கு குருக்கள் உதவி புரிந்து வந்தனர்.

901 ஆம் ஆண்டு செபக்கூடம் கட்டப்பட்டது.

1910 ஆம் ஆண்டில் பேராயர் மேதகு மோரல் அவர்கள் முகையூர் வந்த போது, கூரைஆலயம் மற்றும் பங்குத்தந்தை இல்லம் ஆகியவை பழுதடைந்து காணப்பட்டதால் புதியதாக கட்டப்பட ஆவல் கொண்டார்.

1908 ஆம் ஆண்டு கொன்சாகா கான்வென்ட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

முகையூர் ஆலய கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. முதல் உலகப் போரின் காரணமாக ஐரோப்பாவில் நிதிபற்றாக்குறை ஏற்பட்டது. அருட்பணி. பிளாநாத், அருட்பணி. கிராவரி, அருட்பணி. செல்வநாதர் ஆகியோரும் ஆலயக் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தனர். 1927 ஆம் ஆண்டில் அருட்பணி. மரிய ஜோசப் ஆலய கட்டுமானப் பணிகளை தொடர்ந்தார்.

அருட்பணி. மத்தேயு அடிகளார் (1935-44) ஆலயத்திற்கு சிமெண்ட் தளம் அமைத்து, புதிய பீடம் கட்டினார்.

அருட்பணி. திவ்யநாதர்  (1944-56) ஆலய உட்புற பூச்சு வேலைகளை நிறைவு செய்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.

அருட்பணி. ஆரோக்கியம். ஆலய வெளிப்பூச்சு வேலையை செய்தார். பெரிய ஆலய மணி அமைத்து கொடுத்தார்.

அருட்பணி. பிலிப் தொடுகா. புதிய பீடம் அமைத்தார். ஆலயத்தை சுற்றி மதிற்சுவர் கட்டினார். முகையூரில் புனித சவேரியார் பெயரில் உயர்நிலைப் பள்ளி அமைத்தார்.

அருட்பணி. A. பிச்சைமுத்து அவர்களின் பணிக்காலத்தில் மக்கள் மன்றம் கட்டப்பட்டது. ஆலய நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஆலய உட்புறத்தை மெருகூட்டி, அழகிய ஓவியங்கள் வரைந்து விழாவை சிறப்பித்தார். 1985 இல் முகையூர் மகிமை மாதா கெபியை கட்டினார்.

அருட்பணி. இராஜரத்தினம் பணிக்காலத்தில் ஏழு கிளைப்பங்குகளில் ஆலயம் கட்டப்பட்டது.

1998 இல் அருட்பணி. A. C. இருதய நாதன் அவர்கள் முகையூர் ஆலயத்தின் பழுதடைந்த இரண்டு பக்கங்களை சீர்படுத்தினார்.

அருட்பணி. A. வேளாங்கண்ணி சவரிதாஸ் அவர்களின் முயற்சி மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன், புனித சவேரியார் ஆலயம் மற்றும் மகிமை மாதா திருத்தல வளாகம் அழகுற புதுப்பிக்கப்பட்டு, 03.12.2009 அன்று முகையூர் பங்கின் 125-வது ஆண்டு ஜூபிலி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

தொடக்கப் பள்ளிக்கூடங்கள் : 2

மேல்நிலைப் பள்ளிக்கூடங்கள் : 2

ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் : 1

புனித சூசையப்பர் ஆர் சி ஆரம்ப பள்ளி

புனித சேவியர் ஆர் சி ஆரம்ப பள்ளி 

புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி

கொன்சாகா சபை அருட்சகோதரிகள் வழிநடத்துதலில்:

1. புனித சூசையப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

2. புனித சூசையப்பர் ஆங்கிலப் பள்ளி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியான் சேனை

2. பாலர் பிரசீடியம்

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. இளைஞர் இயக்கம்

5. பீடச்சிறுவர்கள்

6. ஜெபக்குழு

7. மறைக்கல்வி

8. பங்குப்பேரவை

9. பாடற்குழு

10. மகளிர் குழு

11. தொண்டு நிறுவனங்கள்

முகையூர் இறைமக்களிடையே விசுவாசத்தை வளர்த்த பங்குத்தந்தையர்கள்:

1870 வரை முகையூர், அத்திப்பாக்கம் பங்கின் கீழ் இருந்தது. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் அத்திப்பாக்கம் பிரெஞ்சு சேசு சபையினர் கீழ் (கர்நாடக மிஷன்) இருந்தது.

அத்திப்பாக்கம் பங்கில் இருந்து, முகையூரில்  விசுவாசத்தை வளர்த்தெடுத்த குருக்கள்:

Rev.Fr. திரம்லெய் (1734-1743)

Rev.Fr. செய்கன்ஸ் (1736)

Rev.Fr. தீமொன் செஸ்தின் (1740)

Rev.Fr. பெய் கொனக்ஸ் (1770-1787)

Rev.Fr. ஆஸ்ட் ரே பேரியன் (1790-1792)

ஒரு இந்திய அருட்பணியாளர் (1795)

Rev.Fr. பேரியோ (1798-1811)

 Rev.Fr. பைகாட் (1832-1833)

Rev.Fr. ஜேமி (1833-1834)  

Rev.Fr. ரோகர் (1841-1847)

Rev.Fr. சவரிநாதர் (1844-1847) (ஒரு சிறிய ஆலயம் முகையூரில் கட்டப்பட்டது)

Rev.Fr. பிரியர் (1853-1858)

Rev.Fr. போலார்டு (1859-1862)

Rev.Fr. விஜியன் (1862-1866)

Rev.Fr. அருள்நாதர்‌ (1867-1869)  

முகையூர் இறைமக்களிடையே விசுவாசத்தை வளர்த்த பங்குத்தந்தையர்கள்:

1. Rev.Fr. அருள்நாதர்‌ (1870-1875)

2. Rev.Fr. சின்னப்பநாதர்‌ (1876-1883)

3. Rev.Fr. மரிய ஜோசப்நாதர் (1883-1897)

4. Rev.Fr. அந்தோனிநாதர் (1897-1912)

5. Rev.Fr. பிளாநாத்‌ (1912-1914)

6. Rev.Fr. செல்வநாதா்‌ (1915-1919)

7. Rev.Fr. பிளாநாத்‌ (1919-1922)

8. Rev.Fr. மரியஜோசப்‌ (1922-1933)

9. Rev.Fr. ஆனந்தன்‌ (1934-1935)

10. Rev.Fr. மத்தேயுநாதர் (1935-1944)

11. Rev.Fr. திவ்வியநாதர்‌ (1944-1956)

12. Rev.Fr. ஆரோக்கியம்‌நாதர் (1956-1963)

13. Rev.Fr. சின்னப்பன்‌ (1963-1974)

14. Rev.Fr. அப்போலின்‌ (1974-1975)

15. Rev.Fr. பிலிப்தொடுகா (1975-1982)

16. Rev.Fr. A. பிச்சைமுத்து, பங்குத்தந்தை & உயர்நிலைப்பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் (1982-1988)

17. Rev.Fr. T.S. ராஜரத்தினம்‌ (1988-1995)

18. Rev.Fr. A.J. பிலோமின்தாஸ், (1994-1996)

19. Rev.Fr. A.C. இருதயநாதன்‌ (1996-2002)

20. Rev.Fr. L. ஜான் எடிசன் (2002-2007)

21. Rev.Fr. A. வேளாங்கண்ணி சவரிதாஸ் (2007-2010)

21. Rev.Fr. ராய் ஆரோக்கிய தாஸ் (2011-2017)

22. Rev.Fr. ஹென்றி எழில் மாறன் (2017-2019)

23. Rev.Fr. A. எட்வர்ட் பிரான்சிஸ் (2019- முதல்..)

முகையூரில் பணிபுரிந்த உதவிப் பங்குத்தந்தையர்கள்:

Rev.Fr. அந்தோனிநாதர் (1888-1897)

Rev.Fr. செல்வநாதர்‌ (1900-1902)

Rev.Fr. எஸ்காந்த்‌ (1905-1906)

Asst Parish Priests: From 1988-1995

Rev.Fr. பாஸ்கல்ராஜ், 

Rev.Fr. யோனாஸ்,

Rev.Fr. தனிஸ்லாஸ்

Rev.Fr. I. சகாய அருள்செல்வம் (1992-1994)

Rev.Fr. சக்கரியாஸ் (1994-1996)

Rev.Fr. T. நசியன் கிரகோரி (1997-1998)

Rev.Fr. ஆரோக்கிய தாஸ் (2011-2012)

Rev.Fr. சாமுவேல் (2012-2013)

Rev.Fr. சதிஷ் குமார் (2013-2014)

Rev.Fr. ஜேம்ஸ் விக்டர் (2014-2015)

Rev.Fr. ஆரோக்கிய ஜான் ராபர்ட்  (2015-2017)

Rev.Fr. ஜெய சீலன் (2018 -2021)

Rev. Fr. ஜான்சன் (2021 - முதல்..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குத்தந்தை அருட்பணி. A. எட்வர்ட் பிரான்சிஸ், முகையூர் மண்ணின் மைந்தர் அருட்பணி. A. கிறிஸ்டோபர் ஜோசப் குரூஸ், HGN மற்றும் பங்கின் உறுப்பினர் Fethics