தூய சகாய அன்னை ஆலயம்
இடம்: கண்ணன்விளை, கருங்கல், கருங்கல் அஞ்சல், 629157
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: மாத்திரவிளை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், துண்டத்துவிளை, கருங்கல்
பங்குத்தந்தை: அருட்பணி. மரிய அற்புதம்
உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. S. தாமஸ், MMI
ஆன்மீக ஆலோசகர்: அருட்பணி. சேசு மரியான்
குடும்பங்கள்: 70
அன்பியங்கள்: 3
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணிக்கு
புதன்கிழமை மாலை 06:00 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி
திருவிழா: மே 01-ம் தேதியை மையமாக கொண்ட ஐந்து நாட்கள்
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரர். I. ஜோசப், SHJ
2. அருட்சகோதரி. E. மேரி, Holy Cross
வரலாறு
துண்டத்துவிளை பங்கின் ஒரு பகுதியாக விளங்கிய கண்ணன்விளையில் 1940 ஆம் ஆண்டு அருட்பணி. பிரான்சிஸ் அவர்களால் தூய மிக்கேல் அதிதூதர் குருசடி நிறுவப்பட்டது. அந்தக் குருசடியில் நாள்தோறும் ஜெபங்களும், புதுமைகளும் நடைபெற்று வந்தன. பிற்காலத்தில் மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் இங்கு வைத்து திருமுழுக்கும் கொடுக்கப் பட்டுள்ளது.
மேதகு ஆயர் அவர்களிடம் கல்லறைத் தோட்டம் அமைக்க, கண்ணன்விளை இறைமக்கள் நிலம் வாங்கிக் கேட்ட போது, 40 சென்ட் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் இந்த 40 சென்ட் நிலத்தில், 27 குடும்பங்களைக் கொண்டு, துண்டத்துவிளை பங்குத்தந்தை அருட்பணி. G அல்போன்ஸ் அவர்களால் 1948 ஆம் ஆண்டு ஓலையால் வேயப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஓடு வேய்ந்த ஆலயமாக மாற்றம் செய்யப்பட்டது.
1966 ஆம் ஆண்டு துண்டத்துவிளை பங்கின் கிளைப் பங்காக கண்ணன்விளை உயர்த்தப்பட்டது.
2001 ஆம் ஆண்டு அருட்பணி. ஐசக், SSS பணிக்காலத்தில் ஆலய கோபுரம் புதுப்பிக்கப்பட்டது.
அருட்பணி. K. மரியதாஸ் பணிக்காலத்தில் பழைய ஆலயம் அகற்றப்பட்டு 22.06.2007 அன்று கோட்டார் மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்பணி. V. மரியதாசன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 01.05.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அன்னை அரங்கம் கட்டப்பட்டு பங்குத்தந்தை அருள்பணி. M. பீட்டர் அவர்களால் 10.03.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
புனித மிக்கேல் குருசடி:
1 ஆம் அன்பிய பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய குருசடி, கண்ணன்விளை ஆலயத்தின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி. G. அல்போன்ஸ் அவர்களால் 01.01.2012 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 01 ஆம் தேதி, புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் சமபந்தி விழா பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
குழந்தை இயேசு குருசடி:
2 ஆம் அன்பிய பகுதியில் அமைந்துள்ள இந்த குருசடியை, பங்குத்தந்தை அருட்பணி. R. மரிய அற்புதம், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஜஸ்டின் கிறிஸ்துராஜ் OMD ஆகியோரின் வழிகாட்டலில், நன்கொடையாளரின் உதவியுடன் 10.01.2021 அன்று அருட்பணி. ஜோஸ் ராபின்சன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணி. ஜெகத் கஸ்பார் அவர்களால் 04.10.2021 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
Nirmala sisters இவ்வாலய ஆன்மீக காரியங்கள், மறைக்கல்வி, பக்த சபைகளை வழிநடத்துதல் என பல்வேறு பணிகளில் சிறப்புற பணிபுரிந்து வருகின்றனர்.
வழித்தடம்: கருங்கல் -புதுக்கடை சாலையில், பாலூர் சந்திப்பில் இருந்து வலது புறமாக சென்றால் கண்ணன்விளையை அடையலாம்.
கருங்கல் -கண்ணன்விளை 2கி.மீ
Location map: SAHAYA MATHA CHURCH 66WJ+QXQ, Kanyakumari, Tamil Nadu
https://maps.app.goo.gl/9ZuFUQN3tpqybnjz8
ஆலய பங்கேற்பு அமைப்புக்கள்:
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. இளையோர் இயக்கம்
4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
5. பாலர் சபை
6. சிறுவழி இயக்கம்
7. மறைக்கல்வி
8. பீடச்சிறார்
9. பாடகற்குழு
10. பங்கு அருட்பணிப்பேரவை
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்கு அருட்பணிப் பேரவை நிர்வாகிகள்