431 புனித அந்தோணியார் ஆலயம், செறுகோல் கரும்புத்தோட்டம் காட்டாத்துறை


புனித  அந்தோணியார் ஆலயம்

இடம் : செறுகோல், காட்டாத்துறை அஞ்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : முளகுமூடு

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், காட்டுவிளை

பங்குத்தந்தை : அருட்பணி. ஜாண் பால் (குவனெல்லியன் சபை)
இணைப் பங்குத்தந்தை: அருட்பணி. ஆன்றணி சேவியர் (குவனெல்லியன் சபை)

குடும்பங்கள் : 170
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

திங்கள் முதல் சனிக்கிழமை வரை திருப்பலி : மாலை 06.30 மணிக்கு.

செவ்வாய் மாலை 06.30 மணிக்கு நவநாள், செபமாலை, திருப்பலி,

மாதத்தின் முதல் வெள்ளி- மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆராதனை நடைபெறும்.

திருவிழா : மே மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை.

வழித்தடம் : இரவிபுதூர் கடை -ஆற்றூர் வழியாக செல்லும் சாலையில் தூய அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

பேருந்துகள் : 88A, 16D


வரலாறு :

தூய அந்தோணியார் ஆலயம் செறுகோல் கரும்புத்தோட்டம் பங்கு, பெயருக்கு ஏற்றார் போல் அங்குள்ள மக்களின் எண்ணமும் கரும்பை போல் இனிமையாக இருக்கும்.

கி.பி 1988 ஆம் ஆண்டு சுமார் 50 குடும்பங்களால் கடவுளின் உடனிருப்பை அறிந்து ஓலையால் வேயப்பட்ட ஆலயத்தை உருவாக்கினார்கள். மக்கள் மாலை நேரங்களில் ஜெபம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

பின்னர் கி.பி 1999 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி குட்டைக்காடு பங்கின் கிளைப் பங்காக உருவானது. மேலும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியும் மற்றும் செவ்வாய்க் கிழமை மாலை நவநாள் திருப்பலியும் நடைபெற்று வந்தன. பங்கின் வளர்ச்சியை அறிந்த அப்போதைய குட்டைக்காடு பங்கின் பங்குத்தந்தை அருட்பணி. அமலநாதன் அவர்களால் 2000 ஆம் ஆண்டு புதிய ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, 2006 ஆம் ஆண்டு அருட்பணி. பெஞ்சமின் அவர்களால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அப்போதைய கோட்டாறு மறைமாவட்டத்தின் பரிபாலகர் அருட்பணி. மரியதாஸ் அவர்களால் ஆலய அர்ச்சிப்பு நடைபெற்றது.

2010 ஆம் ஆண்டு செறுகோல் மக்களின் வளர்ச்சியை பார்த்து அப்போதைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு. பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் பங்காக திருநிலை படுத்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. லியோ அலெக்ஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள். 15-01-2015 அன்று ஆலயத்தின் முன்புறம் எழில் மிகு குருசடிக்கு அருட்பணி. லியோ அலெக்ஸ் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஜாண் மைக்கிள் ராஜ் அவர்களால் குருசடி மற்றும் மாதா கெபி பணிகள் நிறைவு பெற்று, குழித்துறை மறை மாவட்ட ஆயர். மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் 13.06.2016 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்ட்டது.

குறைந்த காலத்தில் அதிவேக வளர்ச்சி அடைந்த இப்பங்கு தனிச்சிறப்புடன் தூய அந்தோணியாரை பாதுகாவலராக கொண்டு விளங்கி வருகிறது.

தற்போது அன்பின் பணியாளர்கள் சபை (குவனெல்லியன் சபை) குருக்களான அருட்பணி. ஜாண் பால், அருட்பணி. ஆன்றணி சேவியர் ஆகியோரால் சிறப்பாக நடத்தப்பட்டு மென்மேலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. செறுகோல் இறை சமூகம்.

தனிச்சிறப்பு : கேட்ட வரம் தரும் தூய அந்தோணியார் இப்பகுதி மக்களின் தேவையை அறிந்து, உடனடியாக பலன் அளிக்கும் பாது காவலராக விளங்கி வருகிறார்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்கு நிர்வாகம், தூய அந்தோணியார் ஆலயம், செறுகோல் கரும்புத்தோட்டம், குமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்டம்.