240 புனித அந்தோணியார் ஆலயம், சத்தியமங்கலம்


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அஞ்சல், செஞ்சி தாலுகா

மாவட்டம் : விழுப்புரம்

மறை மாவட்டம் : புதுவை - கடலூர் உயர் மறை மாவட்டம்

பங்குத்தந்தை : அருட்தந்தை M. கஸ்பார்

நிலை : பங்குதளம்
கிளைகள் : 18

குடும்பங்கள் : 650 (கிளைகளையும் சேர்த்தால் 1500)

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு

வார நாட்களில் : காலை 06.30 மணிக்கு

திருவிழா : ஜூன் 05 ம் தேதி கொடியேற்றம், 13 -ம் தேதி ஆடம்பர திருவிழா சிறப்பு பாடற்பலி, இரவு 09.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி ஜூன் 14- ம் தேதி கொடியிறக்கம்

வரலாறு :

1922 ம் ஆண்டு கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

1954 ம் ஆண்டு பங்காக உயர்த்தப்பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை கஸ்பார் அவர்கள் இப்பங்கின் 17 வது பங்குத்தந்தை என்பது குறிப்பிடத் தக்கது.

மண்ணின் இறை அழைத்தல்கள் 19 அருட்பணியாளர்கள், 13 அருட்சகோதரிகள் மறை பரப்புப் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பங்கின் பக்த சபைகள் :

பாலர் சபை
இளையோர் பிரசீடியம்
மரியாயின் சேனை (ஆண்கள் /பெண்கள்)
மரியாயின் சேனை கியூரியா
நற்செய்தி பணிக்குழு

பங்கின் குழுக்கள் :

கல்வி வளர்ச்சிக் குழு
மகளிர் குழுக்கள்.

வழித்தடம் :

விழுப்புரம் -செஞ்சி பேருந்து - திருவண்ணாமலை வந்து அங்கிருந்து சத்தியமங்கலம்.

திண்டிவனம் -திருவண்ணாமலை பேருந்து, இறங்குமிடம் சத்தியமங்கலம். சுமார் ஒரு மணி நேர பயணம்.