548 கிறிஸ்து அரசர் ஆலயம், வீரப்புலி

    

கிறிஸ்து அரசர் ஆலயம் 

இடம் : வீரப்புலி, தடிக்காரன்கோணம் (PO)  

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட் 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித அந்தோனியார் ஆலயம், சுருளகோடு. 

பங்குத்தந்தை : அருள்பணி. தாமஸ் ஆண்ட்ரூஸ், SAC

குடும்பங்கள் : 51

அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி காலை 09.30 மணிக்கு. 

புதன் திருப்பலி : மாலை 07.00 மணிக்கு. 

திருவிழா : நவம்பர் மாதத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழா நாளில். 

மண்ணின் மைந்தர்கள் :

1.அருள்பணி. ஜஸ்டின் பிரபு, குழித்துறை மறைமாவட்டம்

2 அருள்பணி. ஜினி. CMF, Kolkatta. 

வழித்தடம் : நாகர்கோவில் -பூதப்பாண்டி -திட்டுவிளை -எட்டாமடை -தடிக்காரன்கோணம் -வீரப்புலி. 

வரலாறு :

கி.பி 1976 ஆம் ஆண்டில் வீரப்புலி ஒரு கிளைப்பங்காக ஆரம்பிக்கப் பட்டது. அன்று முதல் கார்மல் சபையை சார்ந்த அருள்சகோதரர் வீடுகளை சந்தித்து ஜெபித்து மக்களின் இறைவிசுவாசத்தை வளர்த்து, ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் ஒரு ஓலை குடிசை கட்டி மக்களை ஒருங்கிணைத்து ஜெபமாலை செய்து வந்தார்கள். 5 மாதங்களுக்குப் பிறகு மாதத்திற்கு இரண்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

பின்னர் 1986 ஆம் ஆண்டு எட்டாமடை பங்குடன் வீரப்புலி இணைக்கப் பட்டது. அப்போது பங்குத்தந்தையாக அருள்பணி. தேவசகாயம் அவர்களும், இணைப் பங்குத்தந்தையாக அருள்பணி. ஜஸ்டஸ் அவர்களும் பணியாற்றினர். 

தொடர்ந்து 1986 ல் எட்டாமடை பங்கு கிளரீசியன் சபையிடம் ஒப்படைக்கப் பட்டது. அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. அன்சல்மூஸ் அவர்கள் ஞாயிறு திருப்பலியை வீரப்புலி குடிசை ஆலயத்தில் நிறைவேற்றி வந்தார். 

தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. தேவதாஸ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அருள்பணி. தேவதாஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவு பெற்று 11.08.1992 அன்று அருள்பணி. தேவதாஸ் அவர்களின் தலைமையில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1998 ஆம் ஆண்டு  ஆலய கோபுரம் கட்டப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. அமலதாஸ் அவர்கள் தலைமையில் திருநிலைப்படுத்தப் பட்டது. 

அப்போதைய பங்குத்தந்தையின் முயற்சியால் ஆலய கல்லறைத் தோட்டம் அமைக்க 43 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, வழிபாதை சிமென்ட் தளம் அமைக்கப் பட்டது. 

2002 ஆம் ஆண்டு ஆலயத்தின் முன்புறம் குருசடி கட்டப்பட்டு அருள்பணி. ஜான்போஸ்கோ அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

ஏழை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 2003 ஆம் ஆண்டு மாலைநேர வகுப்பு கட்டிடம் கட்டப்பட்டு, அருள்பணி. ஜான்போஸ்கோ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

18.10.2003 அன்று எட்டாமடை பங்கிலிருந்து தடிக்காரன்கோணம் தனிப்பங்கான போது வீரப்புலி அதன் கிளைப் பங்காக ஆனது. அருள்பணி. தேவதாஸ் அவர்கள் பங்குத்தந்தையாக பணியாற்றினார். ஆலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டது. நற்கருணைப்பேழை திருநிலைப் படுத்தப் பட்டது. 

2004 ஆம் ஆண்டு குழந்தை இயேசு சுரூபம் திருநிலைப்படுத்தப்பட்டு, புதன்கிழமை தோறும் நவநாள் திருப்பலி மற்றும் குணமளிக்கும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 

2010 ஆம் ஆண்டு அருள்பணி. சிங்கராயன், CMF பணிக்காலத்தில் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டு, தரை கிரானைட் கற்கள் போடப்பட்டது. குருசடியில் மக்கள் ஜெபிக்க வசதியாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 

2014 ஆம் ஆண்டில் மாலைநேர டியூசன் சென்டர் மேற்கூரை மாற்றியமைத்து வர்ணம் பூசப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு சொந்தமான காலனி வீடுகள் பழுதடைந்த போது அருள்பணி. சேவியர் அவர்களின் தலைமையில் மக்களின் ஒத்துழைப்புடன் மறைமாவட்ட ஒப்புதலோடு பழுதடைந்த வீடுகளை ஒழுங்குபடுத்தி, ஒரே வரிசையில் குடியமர்த்தி, சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மேலும் ஆலயம் பழுதுபார்க்கப் பட்டு வர்ணம் பசி, அழகுபடுத்தப் பட்டது. 

2016 ஆம் ஆண்டில் சுருளகோடு தனிப்பங்கான போது வீரப்புலி அதன் கிளைப் பங்காக ஆனது. 

ஆலயத்தில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. மறைக்கல்வி 

2. மரியாயின் சேனை 

3. இளையோர் இயக்கம் 

4. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் 

5. கத்தோலிக்க சேவா சங்கம் 

6. பாலர் சபை 

7. பீடச்சிறார் 

8. பங்குப்பேரவை

9. பாடகற்குழு 

10. பங்குப்பேரவை.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் ஆண்ட்ரூஸ் SAC அவர்கள்.