இடம் : உடவிளை, காப்புக்காடு அஞ்சல்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : குழித்துறை
மறைவட்டம் : வேங்கோடு
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய இதய அன்னை ஆலயம், தும்பாலி
பங்குத்தந்தை : அருள்பணி. P. ஜான் சேவியர், ISCH
இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. அலெக்ஸ், ISCH
குடும்பங்கள் : 128
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணி
புதன் மாலை 06.00 மணி செபமாலை, 06.30 மணி நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் புதன் : மாலை 06.00 மணி செபமாலை, நவநாள் திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆசீர்
திருவிழா : நவம்பர் மாதத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழாவை உள்ளடக்கிய பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்:
அருள்பணி. சுனில்குமார், ISCH
வழித்தடம் : மார்த்தாண்டம் -தேங்காப்பட்டணம் வழித்தடத்தில், உதச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறமாக சுமார் அரை கி.மீ தூரம் சென்றதும் இவ்வாலயத்தை அடையலாம்.
Location map : Christ the King Church,Udavilai
Kappukadu, Tamil Nadu 629162
https://maps.app.goo.gl/KqHYb66ctC6pxGja7
வரலாறு :
உடவிளை கிறிஸ்து அரசர் ஆலயமானது குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் குன்னத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. உடவிளையில் 1982 ம் ஆண்டு முதல் புனித அந்தோனியார் குருசடி கட்டப்பட்டு, அதில் செபமாலை, மறைக்கல்வி மற்றும் சிறப்பு நாட்களில் திருப்பலியும் ஆண்டிற்கு ஒருமுறை ஒருமாதம் பஜனை நடத்தி அதன் முடிவில் அன்பு விருந்து (சமபந்தி), விளையாட்டுப் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வந்தன.
மக்களின் வழிபாட்டு தேவைக்காக ஆலயம் கட்டுவதற்காக 1985 ம் ஆண்டு 10 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, இறைமக்களின் ஒத்துழைப்பாலும், மறைமாவட்டத்தின் உதவியாலும் ஆலயம் கட்டப்பட்டு, வாரத்தில் ஒருநாள் திருப்பலியும், ஆண்டிற்கு ஒருமுறை திருவிழாவும் நடைபெற்று வந்தன.
சில காலங்களுக்குப் பிறகு சில சமூக விரோத சக்திகளின் பலத்த எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம், ஆலயம் எரிப்பு போன்ற சமூக விரோத செயல்களை சந்திக்க நேரிட்டது.
கி.பி 2000 ம் ஆண்டில் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி, கிறிஸ்து அரசர் ஆலயம் வேறிடத்திற்கு மாற்றப் பட்டது.
2001 ம் ஆண்டு தும்பாலி தனிப்பங்கான போது உடவிளை அதன் கிளைப் பங்காக ஆனது.
கி.பி 2002 ம் ஆண்டில் மீண்டும் சமூக விரோத செயல்பாடுகள் தொடர்ந்தன. ஆலயத்திற்கெதிராக வழக்கு தொடரப்பட்டு 3.3.2005 அன்று வழக்கு முடிவுக்கு வந்தது. அதில் மாவட்ட ஆட்சியாளரின் உத்தரவு பெற்று ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பாணை வழங்கப் பட்டது.
13.12.2005 அன்று உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று, 25.12.2005 அன்று புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டு அருள்பணி. கலிஸ்டஸ் அவர்களின் அயராத முயற்சியினால் இறை மக்களின் ஒத்துழைப்புடன் வெறும் ஐந்து நாட்களில் கட்டப்பட்டு, 01.01.2006 அன்று மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் அருள்பணி. மரியதாசன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
2016 ம் ஆண்டு ஷூவென்ஸ்டாட் தந்தையர் சபை அருள்பணியாளர்கள் பொறுப்பேற்று ஆன்மீக மற்றும் வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.
புதிதாக கிணறு வெட்டப்பட்டது. ஆலயத்தை சுற்றிலும் தரையில் இன்டர்லாக் போடப்பட்டது. ஆலயத்தின் வலப்புறம் இறைமக்களின் தேவைக்காக ஷெட் கட்டப்பட்டது.
ஆலய பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்கு அருட்பணிப் பேரவை
2. அன்பிய ஒருங்கிணையம்
3. வழிபாட்டுக்குழு
4. பாடகற்குழு
5. பாலர்சபை
6. சிறுவழி இயக்கம்
7. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
8. இளையோர் இயக்கம்
9. மறைக்கல்வி மன்றம்
10. மரியாயின் சேனை
11. புனித வின்சென்ட் தே பவுல் சபை
12. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்
13. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
14. பீடப்பூக்கள்
ஆலய வரலாறு : கோட்டார் மறைமாவட்ட பவளவிழா மலர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஜான் சேவியர், ISCH