729 அன்னை மரியாள் அப்போஸ்தலர்களின் இராக்கினி ஆலயம், குரெய், தென் சூடான்

       

அன்னை மரியாள் அப்போஸ்தலர்களின் இராக்கினி ஆலயம்

இடம்: குரெய் (Gurei) 

நாடு: தென் சூடான்

உயர் மறைமாவட்டம்: ஜூபா (Juba)

நிலை: பங்குத்தளம்

கிளைபங்குகள்:

1. திருக்குடும்ப  ஆலயம்

2. தூய பேதுரு ஆலயம்

3. தூய தோமனிக் ஆலயம்

4. அமல அன்னை ஆலயம்

5. தூய பிலிப்பு ஆலயம்

6. திருச்சிலுவை ஆலயம்

7. தூய அகாத்தா ஆலயம்

8. தூய ஜோஸஃபின் பக்ஹிட்டா ஆலயம்

9. ஆண்டவரின் உயிர்ப்பு ஆலயம் (Resurection)

10. தூய யாக்கோப்பு ஆலயம்

11. தூய சின்னப்பர் ஆலயம்

12. தூய பத்ரிசியார் ஆலயம்

பங்குத்தந்தை: அருட்பணி. P. I. வினோத் குமார், MMI

தொடர்பு எண்: +211 928487969

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. அருள் ரீகன், MMI

குடும்பங்கள்: 1500 (கிளைப்பங்குகள் சேர்த்து)

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 07:00 மணி திருப்பலி ஆங்கிலம்,

காலை 09:00 மணி திருப்பலி, பாரி மொழி (Bari)

காலை 11:00 மணி திருப்பலி, அரபிக் மொழி மற்றும் கிளைப்பங்குகளில் காலை 9:30 மணிக்கு.

நாள்தோறும் காலை 06:30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, அரபிக் மொழியில் நடைபெறும்.

திருவிழா: ஆகஸ்ட்  22 ஆம் தேதி.

Location map: https://maps.app.goo.gl/HqjQQokWBddtdF2SA

வரலாறு:

பங்குத்தந்தை அருட்பணி. வினோத் குமார், MMI அவர்கள் பங்கின் வரலாற்றை பகிர்கின்றார்...

அமலமரி தூதுவர் சபை (MMI) சார்ந்த மறைபோதக குருக்களாகிய எங்களை, ஆப்பிரிக்காவில் உள்ள தென் சூடான் நாட்டில் பணிபுரிய மறைந்த முன்னாள் ஆயர் மேதகு ருடால்ப் டெங் மஜாக் (Rudolf Deng Majak) அவர்களால் அழைக்கப்பெற்று, 2012 மே திங்கள் 1 ஆம் தேதியன்று தென் சூடான் நாட்டில் அடி எடுத்து வைத்தோம். 

தென் சூடான் நாட்டில் மின்சார வசதி, சாலை வசதி, தொலைத்தொடர்பு வசதி ஆகியவை இல்லை என்றாலும், கடவுளின் வார்த்தையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை எங்கள் நிறுவனர் தந்தை பேரருட்திரு J.E. அருள்ராஜ் அவர்கள் முயற்சித்தார்கள். 

அப்பொழுது நாங்கள் வாவு (Wau) மறைமாவட்டத்தில் அற்புதமாக பணிபுரிவதைக் கண்டு, அப்போது இருந்த மறைந்த முன்னாள் பேராயர் பவுலினோ லுக்குடு லோரோ (Poulino Lukudu Loro) அவர்களால் நாங்கள் ஜூபா (Juba) மறைமாவடத்திற்கு அழைக்கப்பட்டோம். அந்த வேளையில் அந்த இடமானது ஒரு காடாக தோற்றம் அளித்தது. அங்கே ஆலயம் கிடையாது! மற்றும் குருக்கள் தங்கி பணிபுரிய வீடு கிடையாது. இருந்தபோதிலும் எங்கள் நிறுவனர் தந்தை பேரருட்திரு. J.E.அருள்ராஜ் அவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினார்கள். அங்கு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, மூன்று குருக்கள் அங்கே தங்கினோம். அந்த வேளையில் நாடு அமைதியற்ற நிலையில் இருந்தது..! நாட்டில் சண்டைகள், எங்கே பார்த்தாலும் துப்பாக்கி சுடும் சத்தம்..! மக்கள் உயிரிழப்பு மற்றும் திருட்டு அதிகமாக இருந்து வந்தது...! அந்த கடினமான வேளையிலும் நாங்கள், எங்கள் சபையின் (MMI) பாதுகாவலி அன்னை மரியாளின் துணையோடு எங்களுடைய பணியை ஆரம்பித்தோம்.

இந்த (குரெய் Gurei) இடமானது,

புனித கிஷிட்டோ என்ற பங்கின் கீழ், தூய பவுல் என்ற பெயரில் கிளைப் பங்காக இருந்தது.

அந்த பங்கிலிருந்து (கிஷிட்டோ) நீண்ட தொலைவில், இந்த கிளைப்பங்கு (குரெய் Gurei) செயல்பட்டு வந்ததால், பேராயர் பவுலினோ லுக்குடு லோரோ (Paulino Lukudu Loro) அவர்கள், குரெய் -ஐ தனிப்பங்காக மாற்றுவதற்கு எங்களிடம் ஒப்படைத்தார்கள். அதன் பிறகு எங்கள் சபையின் (MMI) நிறுவனர் தந்தை பேரருட்திரு J. E. அருள்ராஜ் அவர்களின் சொந்த முயற்சியால், எங்கள் சபையில் இருந்து அங்கே ஒரு பேராலயம் எழுப்பப்பட்டு, பின்னர் தூய பவுல் ஆலயம் என்ற பெயரிலிருந்து மாற்றப்பட்டு "அன்னை மரியாள் அப்போஸ்தலர்களின் இராக்கினி" (Mary Queen Of Apostles) என்ற பெயரில் 2013 ஆம் ஆண்டு பேராயர் பவுலினோ லுக்குடு லோரோ (Paulino Lukudu Loro) அவர்களால் ஆலயமானது அர்ச்சிக்கப்பெற்று, பங்காக உயர்த்தப் பட்டது.

தற்போது அமலமரி தூதுவர்கள் சபையினர் (MMI), பங்கின் பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தி வருகின்றனர்.

இப்பொழுது எங்கள் MMI குருக்கள் South Sudan நாட்டில் பல்வேறு மறைமாவட்டங்களில் பல்வேறு பங்குத்தலங்களில் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜூபா உயர்மறைமாவட்டத்தின் கீழ் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. ஜான் பிரிட்டோ (2012 - 2015)

2. அருட்பணி.‌ வளன் (2015 - 2017)

3. அருட்பணி.‌ நெப்போலியன் (2017 -2019)

4. அருட்பணி. P.I. வினோத் குமார்  (2019 -தற்போது வரை)

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை (ஆங்கிலம், பாறி, அராபிக்)

2. பீடச்சிறார் (ஆங்கிலம், பாறி, அராபிக்)

3. பாடற்குழு (ஆங்கிலம், பாறி, அராபிக்)

4. மறைக்கல்வி (பாறி மொழி) புதன், வெள்ளி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

5. இளையோர் சங்கம்

6. Basic Christian Community, (2 குழு) (மருத்துவமனை சந்திப்பு, ஜெயில் சந்திப்பு, விதவைகள், கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவிகள் என பல்வேறு பணிகளை செய்கின்றனர்)

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லம், பள்ளிக்கூடம், மருத்துவமனை:

Sisters convent: DMI sisters

School: St. Paul primary school

Hospital: Mary Queen health care center

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. P.I. வினோத் குமார், MMI.