242 புனித குழந்தை தெரசாள் ஆலயம், காஞ்சாம்புரம்


புனித குழந்தை தெரசாள் ஆலயம்

இடம் : காஞ்சாம்புரம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளை : புனித சூசையப்பர் ஆலயம், வாறுவிளை

பங்குத்தந்தை : அருட்பணி பெஞ்சமின் (வேங்கோடு வட்டார முதல்வர்)

குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

வியாழன் திருப்பலி : மாலை 05.30 மணிக்கு

சனிக்கிழமை திருப்பலி : காலை 07.00 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள்.

குமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்டத்தின் மேற்கு கரை ஓரமாக அமையப் பெற்றது காஞ்சாம்புரம் எனும் சிற்றூர். இது புதுக்கடை - கொல்லங்கோடு சாலையில் அமைந்துள்ளது. இங்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது புனித குழந்தை தெரசாள் ஆலயம்.

இவ்வாலயம் 1972 -ஆம் ஆண்டு வாவறை பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை அமிர்தராஜ் அடிகளார் அவர்கள் பொறுப்பேற்றார்கள். அருட்தந்தை அவர்கள் வெறுமனே காணப்பட்ட காஞ்சாம்புரத்தை சாதி, மதத்தையும் கடந்து ஒருங்கிணைத்து நல் விதைகளை விதைத்து சென்றார்கள். அவரைத் தொடர்ந்து வந்து அருட்பணியாளர்களும் இப்பங்கின் வளர்ச்சிக்கு துணை நின்றனர்.

பங்கில் பணிபுரிந்த அருட்பணியாளர்கள்:

1. Fr அமிர்தராஜ்
2. Fr ராஜாமணி
3. Fr பால்மார்க்
4. Fr வர்க்கீஸ்
5. Fr ஜஸ்டஸ்
6. Fr மத்தியாஸ்
7. Fr அகஸ்டின்
8. Fr சேவியர் பெனடிக்ட்
9. Fr ஜான் அகஸ்டின்
10. Fr ஆன்றனி
11. Fr டென்சிங்
12. Fr டேவிட் -தெ- வில்சன்
13. Fr ஹாட்வின் சுந்தர்ராஜ்
14. Fr மரிய சூசை
15. Fr பெஞ்சமின்
16. Fr அமலதாஸ்
17. Fr செல்வநாதன்
18. Fr பெஞ்சமின் (தற்போது மீண்டும் 2 -ஆம் முறையாக)

மண்ணின் இறை அழைத்தல்கள் :

அருட்பணியாளர்கள்:

1. Fr வின்சென்ட்
2. Fr ஜெகத் கஸ்பார்
3. Fr பாக்கியநாதன்
4. Fr சுஜன் குமார்
5. Fr சுரேஷ் இன்னசென்ட்
6. Fr ஜிஜிதாஸன்

அருட்சகோதரிகள்:

1. Sis சீலியா
2. Sis மேரி சரோஜம்
3. Sis மரிய செல்வி

இவ்வாறாக பல்வேறு நிலைகளில் சிறப்பு பெற்று, தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை பெஞ்சமின் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது காஞ்சாம்புரம் இறைசமூகம்.