தூய லூர்து அன்னை ஆலயம்
இடம்: ஆலாத்தூர், நன்னாடு, 678541
மாவட்டம்: விழுப்புரம்
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: விழுப்புரம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், விழுப்புரம்
பங்குப்பணியாளர்: அருட்பணி. ஆல்பர்ட் பெலிக்ஸ்
குடும்பங்கள்: 40
புதன்கிழமை மாலை 06:30 மணிக்கு திருப்பலி
திருவிழா: பிப்ரவரி மாதம் 11-ம் தேதி
வழித்தடம்: விழுப்புரம் -திருக்கோவிலூர் வழித்தடத்தில், விழுப்புரத்தில் இருந்து 5கி.மீ தொலைவில் ஆலாத்தூர் அமைந்துள்ளது.
Location map: லூர்து மாதா ஆலயம், ஆலாத்தூர்.
https://maps.app.goo.gl/AxFADL3xmDEpdNbq7
வரலாறு:
விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் பங்கின் ஒருபகுதியாக விளங்கிய, ஆலாத்தூர் கிராமத்தில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஆலயம் கட்டப்பட்டு, 28.04.1991 அன்று புதுவை -கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் மெதகு V. S. செல்வநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மாதவரம் புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் நன்னாடு ஆலாத்தூர் கிராமத்தை தத்தெடுத்து, இவர்களின் ஆன்மீக மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக பணிசெய்து வருகின்றனர்.
தொடர்ந்து விழுப்புரம் பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் பயணித்து வருகிறது ஆலாத்தூர் இறைசமூகம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குப்பணியாளர் அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்கள்