319 புனித சூசையப்பர் ஆலயம், கீழ்வேளூர்

  

புனித வளனார் (சூசையப்பர்) ஆலயம்.

இடம் : கீழ்வேளூர்

மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்
மறை வட்டம் : நாகப்பட்டினம்

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. கடம்பங்குடி
2. கோகூர்
3. என்மேநிலம்
4. தென் ஓடச்சேரி
5. வடக்காலத்தூர்
6. கூளாங்குடி
7. மேலவங்காரமாவடி

குடும்பங்கள் : 3
அன்பியங்கள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி ஜான் பீட்டர்

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

திருவிழா : மே மாதம் முதல் வாரத்தில்.

வழித்தடம் :
நாகப்பட்டினம் -> திருவாரூர் -> கீழ்வேளூர். இங்கிருந்து வடகரை Mini bus.

திருச்சி -> தஞ்சாவூர் -> நாகப்பட்டினம் -> கீழ்வேளூர். இங்கிருந்து வடகரை Mini Bus.

வரலாறு :

கீழ்வேளூர் அழகிய கிராமம் ஆகும். இங்கு விவசாயிகள், தினக்கூலி வேலை செய்கின்ற மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப் பகுதியில்
சில நூறாண்டுகள் பழமையான புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் இவ்வாலயம் நாகப்பட்டினம் பங்கின் கிளைப் பங்காக இருந்தது. 1996 -1997 காலகட்டத்தில் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

இந்த பங்கு ஆலயத்தில் புகழ்பெற்ற புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர் உள்பட ஏழு கிளைப்பங்குகள் அடங்கியுள்ளன. இவையாவும் இவ்வாலயத்தில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ளன.

கிளைப் பங்குகளையும் சேர்த்து மொத்தம் இருநூறு குடும்பங்கள் உள்ளன..

இவ்வாலயத்தில் வெறும் மூன்று குடும்பங்களே இருந்தாலும் வேளாங்கண்ணிக்கு திருப்பயணம் செல்லும் திருயாத்திரீகர்களுக்கு முக்கிய தங்குமிடமாகும்.

வேளாங்கண்ணிக்கு திருயாத்திரையாக நடந்து வருகிற இறை மக்கள் இரவில் தங்கி இளைப்பாறுவற்காக, மக்கள் மன்றம் என்னும் அரங்கம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அருட்பணி S. டேவிட் செல்வகுமார் அவர்களின் பணிக்காலத்தில் (2013-2019) பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன.

குறிப்பாக 2015 -ல் ஆலய பீடம் புதுப்பிக்கப் பட்டது. மேலும் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டது. ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது.

மேலும் அருட்பணி S. டேவிட் செல்வகுமார் அவர்களின் பணிக்காலத்தில் தான் முதன்முதலாக இவ்வாலயத்தில் திருவிழா கொண்டாடப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த கிராமமானது நகரப் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் உட்புறமாக இருப்பதால், இவ்வாலயம் வெளியில் அதிகமாக அறியப் படாமல் இருந்து வருகிறது.