791 தூய ஆவியார் ஆலயம், இராசசிங்க மங்களம்

          

தூய ஆவியார் ஆலயம்

இடம்: இராசசிங்க மங்களம் (ஆர்.எஸ் மங்களம்)

மாவட்டம்: இராமநாதபுரம்

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: இராசசிங்க மங்களம்

பங்குத்தந்தை: அருள்பணி. A. கிளமெண்ட் ராசா (மறைவட்ட முதல்வர்)

உதவிப் பங்குத்தந்தை: அருள்பணி. குழந்தை இயேசு பாபு

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. அன்னைநகர்

2. செட்டியமடை

3. சவேரியார் நகர்

4. தர்மபுரம்

5. பிச்சனாக்கோட்டை

6. செபஸ்தியார்புரம்

7. மணியப்பச்சேரி

8. வீரிப்பச்சேரி

9. சவேரியார் பட்டணம்

10. இராமநாதமடை

11. சித்தனேந்தல்

12. ஓடைக்கால்

13. ஆவரேந்தல்

14. இந்திரா நகர்

15. பிரிட்டோ நகர்

16. பாரனூர்

17. கலங்காப்புளி

18. சித்தூர்வாடி

19. வெட்டுக்குளம்

20. ஊரணங்குடி

21. புது ஊரணங்குடி 

குடும்பங்கள்: 450 (கிளைப் பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 13 (கிளைப் பங்குகள் சேர்த்து)

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

புதன், வெள்ளி திருப்பலி மாலை 06:00 மணிக்கு

வாரநாட்களில் கிளைப் பங்குகளில் திருப்பலி நடைபெறும்

பங்குத் திருவிழா: 

தூய ஆவியார் பெருவிழா. உயிர்ப்புப் பெருவிழாவிலிருந்து  50-வது நாள்

புனித ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா செப்டம்பர் மாதம் 08-ம் தேதி

தனிச்சிறப்பு:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நடைபயணமாக திருப்பயணம் செல்லும் இறைமக்கள், இவ்வாலயத்தில் வந்து ஓய்வெடுத்து செபித்து செல்கின்றனர்.

பங்கின் வரலாறு பங்குப் பணியாளரின் கைவண்ணத்தில் இதோ....

இராசசிங்க மங்களம் பங்கு: ஓர் பார்வை

செம்மண்ணில் இறையாட்சி வளர்க்கும் நம் சிவகங்கை மறைமாவட்டத்தில், 50-வது பங்குத் தளமாக 1990 ஆம் ஆண்டு, இப்பகுதிவாழ் மக்களின் அருள்வாழ்வில் கூடுதல் கவனம் செலுத்த, முதல் ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இராசசிங்க மங்களம் தளத்திரு அவையானது, இருதயபுரம் பங்கிலிருந்து தனிப் பங்காக உருவாக்கப்பட்டது. பெந்தக்கோஸ்து பெருவிழா இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு 50-வது நாள் நிகழ்ந்ததாலும் மறைமாவட்டத்தின் 50 -வது பங்காக இராசசிங்க மங்களம் திகழ்ந்ததாலும் தூய ஆவியார் இப்பங்கின் பாதுகாவலராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அன்றைய இருதயபுரம் பங்கின் பங்குப்பணியாளர் அருள்பணி. அம்புரோஸ் அவர்களால் தொடங்கப்பட்ட கோவில் கட்டுமானப்பணி பங்கின் முதல் பங்குப்பணியாளர் அருள்பணி. வின்சென்ட் அமல்ராஜ் அவர்களால் நிறைவு செய்யப்பட்டு, 08-08-1992 அன்று ஆயர் மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளாக இப்பங்கின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி பங்கு மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார, ஆன்மீகத் தளங்களில் நிறைவைக் காண அருள்பணியாளர்கள் வின்சென்ட் அமல்ராஜ், ஆரோக்கியசாமி, ஜெயபதி, சேசுராஜ், பாக்கியநாதன், ஜோசப் லூர்துராஜா, கிளமெண்ட் ராசா ஆகியோர் அர்ப்பண உணர்வோடும் முழு ஈடுபாட்டோடும் அவர் அவர் சக்திக்கேற்றார்போல இப்பங்கில் பன்முகப் பணிகளைச் சிறப்பாகச் செய்தார்கள்.

நம் பங்குத்தளத்தில் அமல அன்னை அருள்சகோதரிகள், திருமுழுக்கு யோவான் அருள்சகோதரிகள், திருக்குடும்ப அருள் சகோதரர்கள் பாங்குடன் இறைப்பணி, கல்விப் பணி, சமூகப் பணி மற்றும் மருத்துவப் பணியை அர்ப்பண உணர்வோடும் ஈடுபாட்டோடும் செய்வது நம் பங்கிற்கு கிடைத்த சிறப்புக் கொடைகள்.

பல்லாயிரக்கான மாணவ மாணவிகள், கல்வி அறிவு பெற, நம் பங்குத்தளத்தில் சவேரியார்பட்டணம், ஓடைக்கால், சித்தூர்வாடியில் இயங்கி வருகின்ற தொடக்கப் பள்ளிகளும், சவேரியார்பட்டணம், இராசசிங்க மங்களத்தில் அருள்சகோதர, சகோதரிகளால் நடத்தப்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் எம் பங்கிற்கு பெருமை சேர்க்கின்றன.

செம்மண் பூமியாம் சிவகங்கை மறைமாவட்டம் இறையழைத்தலின் விருட்சமாய் இருப்பதால் எம் பங்கின் பல்வேறு கிளைக்கிராமங்களில் இருந்து மறைமாவட்டம் மற்றும் பல்வேறு துறவற அவைக்கு மண்ணின் மைந்தர்கள் பலர் சென்று இறைப்பணியாற்றுவதன் வாயிலாக எம் பங்கில் இறையழைத்தல் வளத்தெடுக்கப்படுறது.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்பணி. ஆரோக்கியம், SJ

2. அருள்பணி.‌ சேவியர் திருக்குடும்பம், SVD

3. அருள்பணி. குழந்தை, SVD

4. அருள்பணி.‌ மணிமாறன், வாரணாசி மறைமாவட்டம்

5. அருள்பணி.‌‌ சேவியர், SJ

6. அருள்பணி.‌ ஜீவா, SVD

7. அருள்பணி.‌ ஜான் கென்னடி, SVD

8. அருள்பணி. அமல்ராஜ், சிவகங்கை மறைமாவட்டம்

9. அருள்பணி. ஆரோக்கிய சாமி, கும்பகோணம் மறைமாவட்டம்

10. அருள்பணி.‌ ஜான் கென்னடி, CMF

11. அருள்பணி.‌ அந்தோனி டேவிட், MMI

12. அருள்பணி.‌ பேசில் செங்கோல், USA

13. அருள்பணி.‌ ஞானசேகர், பெனடிக்ட் சபை

14. அருள்பணி. ஆரோக்கியதாஸ், CMF

15. அருள்பணி. இராபர்ட்

16. அருள்பணி. ஜார்ஜ், ISCH

17. அருள்பணி. செல்வா, SVD

18. அருள்பணி. பிரான்சிஸ் பிரசாத், சிவகங்கை மறைமாவட்டம்

19. அருள்பணி.‌ அருள் பிரகாசம், (நினைவில்) சிவகங்கை மறைமாவட்டம்.

இவர்களோடு இன்னும் பலரும் உள்ளனர். குருத்துவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.‌‌ பல்வேறு சபைகளிலும் அருட்சகோதர சகோதரிகள் பலர் இந்தப் பங்கில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணிசெய்து வருகின்றனர். 

எம் பங்குத்தளத்தில் இருந்து, நலம் தரும் ஆரோக்கிய அன்னையின் ஆசீரைப் பெற்றுச் செல்ல பல் சமய பக்தர்களும் வெகுசன மக்களும் நாடி வந்து கொண்டு இருப்பது பங்கின் விசுவாச வாழ்வுக்கு வித்திட்டுள்ளது.

எம் விசுவாச வாழ்வுப்பயணத்தில் சில இடையூறுகளையும், சவால்களையும் கடந்தும் மறந்தும் மன்னித்தும் நட்புறவில் வளர்ந்து பயணித்து வருகிறது வெள்ளிவிழா காணும் எம் தளத்திருஅவை.

தெரிவு செய்யப்பட்ட குருக்கள் துறவியர் மட்டுமின்றி பொதுநிலையினர் பலர் நற்செய்திப்பணி ஆற்றுவது எம் மறைமாவட்டத்தின் பெருமை. எம் பங்கிலிருந்து பலர் நற்செய்திப் பணியாளர்களாக மாறி நற்செய்தி அறிவிப்பு பணியில் தங்களையே ஈடுபடுத்திக் கொள்வது எம் பங்கின் தனிச்சிறப்பு.

இராசசிங்க மங்களம் பங்கில் கத்தோலிக்கக் குடும்பங்களின் எண்ணிக்கையும் கிளைக்கிராமங்களும் அதிகமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, மக்களின் அருள்வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்க A.R மங்களம் தனிப்பங்காக உதயமானது. 

பல சமய சமூக நல்லிணக்கச் செயல்பாடுகள் இத்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் மூலம் பெண்கள் சுய விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள் நடைபெறுகின்றன. 

எம் இராசசிங்க மங்களம் பங்கு இப்பகுதியில் நம்பிக்கையோடு பணியாற்றி 25 ஆண்டுகளைக் கடந்து வெள்ளிவிழா கண்டு மகிழ்கின்றது.

வெள்ளிவிழா மகிழ்வை இரட்டிப்பாக்க பங்குப்பணியாளர் அருள்பணி. கிளமெண்ட் ராசா, தூய ஆவியார் கோவிலைப் பங்கு மற்றும் பகுதிவாழ் இறைமக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்குப்பேரவையின் நல் ஆதரவோடு 2019 ஆம் ஆண்டு அனைத்துப் புனிதர்கள் பெருவிழா அன்று புதுப்பிக்கும் திருப்பணியினைத் தொடங்கினார்.

திருப்பணியின் தலையான நோக்கம் கோவில் முழுவதும் புதுப்பொழிவு பெறும்படி புதுப்பிப்பதாகும். அதற்கிணங்க கோவிலின் திருத்தூயகம் கலைநயத்துடன் இறை பிரசன்னத்தை அனைவரும் உணரும் வகையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து கோவில் மேற்கூரை, தரைத்தளம், கோபுரம், மணிக்கூண்டு, கதவு சன்னல்கள், கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகள், ஒலி ஒளி அமைப்பு என கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு உடல் மற்றும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

எம் பங்கில் உள்ள கிளைக்கிராமங்கள் 21. இந்த 21 கிளைக்கிராமங்களின் பாதுகாவலர்களாக இருக்கின்ற புனிதர்களின் திருஉருவங்கள் கோவில் மற்றும் வளாகத்தில் அனைத்து இறைமக்களின் வழிபாட்டிற்காகவும் பங்கு ஒற்றுமையை வழியுறுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டிருப்பது எம் கோவிலின் சிறப்பம்சம்.

தூய ஆவியார் கோவில் வளாகத்தில் புதிய நுழைவு வாயிலும், புதுமை வழங்கும் பூண்டி அன்னையும், நம்பிக்கையோடு நாடிவரும் அனைவருக்கும் நலம் தரும் அன்னையாய் வீற்றிருந்து அருள் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் புதுப்பிக்கப்பட்ட கெபியும், மனிதநேயப் புனிதர் அன்னை தெரேசாவின் திருஉருவமும் எம் பங்கு வளாகத்தின் அழகை மெருகூட்டி இருக்கின்றன என்றால் மிகையாகாது.

பங்குத்தந்தையர்கள் தங்கும் இல்லம்  இவ்வெள்ளி விழாக் காலங்களில் புதுப்பிக்கப்பட்டிருப்பது

சிறப்பு. 

வெள்ளி விழா நினைவாக இக்கோவிலுக்கு புதுமுகம் தர உதவிய பங்கு இறைமக்கள், நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள், நண்பர்கள், பல்சமய உறவுகள், நலம்விரும்பிகள் அனைவரும் தங்களின் செபத்தாலும், நன்கொடையாலும், உடனிருப்பாலும், உடல் உழைப்பாலும், கொரோனா பெரும் தொற்று பாதிப்புகள் பெருமளவில் இருந்த நிலையிலும் நல் மனதோடு உதவி உடனிருந்ததை நினைத்து இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம். இந்த நன்றியின் நாளில் கடந்து வந்த 25 ஆண்டுகளும் இப்பங்கை வழிநடத்திய தூய ஆவியார், உறுதுணையாக நின்ற சிவகங்கை மறைமாவட்ட ஆயர்கள், மறைமாவட்ட நிர்வாகம், இராசசிங்க மங்கள மறைவட்ட குருக்கள் இருபால் துறவிகள், பங்குப்பேரவை, அன்பியங்கள், கிளைக்கிராமங்கள், நல்மனம் படைத்தோர், பிறசமய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் செபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி..

பங்கின் வெள்ளி விழா நினைவாக பங்குத்தந்தை அருள்பணி. கிளமெண்ட் ராசா அவர்களின் வழிகாட்டலில் புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட ஆலயமானது, 01.06.2022 அன்று சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

மேலும், புனித ஆரோக்கிய அன்னை கெபி, புனித அன்னை தெரசா கெபி மற்றும் சுரூபம், புதுப்பிக்கப்பட்ட பங்குப் பணியாளர் இல்லம் ஆகியன, 04.06.2022 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதே நாளில் ஆலயத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

புனித ஆரோக்கிய அன்னை கெபி:

06.12.2008 அன்று திறந்து வைக்கப்பட்ட கெபி, பின்னர் புதுப்பிக்கப்பட்டு, 04.06.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அன்னை மகால்:

பங்கு மற்றும் இப்பகுதிவாழ் மக்களுக்கு, குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை செய்து வருகிறது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை

2. இயேசுவின் கண்மணிகள்

3. பீடப்பணி சிறுவர் சிறுமியர்

4. மரியாயின் சேனை

5. பாடகர் குழு

6. தலித் பணிக்குழு

7. மறைக்கல்வி குழு

8. இளைஞர் -இளம் பெண்கள் பணிக்குழு

9. ஞாயிறு வழிபாட்டுக் குழு

10. தொழிலாளர் பணிக் குழு 

11. ஆசிரியர் அரசுப் பணியாளர் குழு

12. நற்செய்திப் பணிக்குழு

13. பங்குப் பேரவை

SMSSS சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை மையம்:

தொழிற்கல்வி கற்றுக் கொடுப்பது, விழிப்புணர்வு பயிற்சிகள், பெண்களை ஒருங்கிணைத்து பொருளாதார பயிற்சிகள் வழங்கப் படுகின்றது.

இராசசிங்க மங்களம் பங்கின் துறவற சபை இல்லங்கள்:

1. அமலவை அருட்சகோதரிகள் (CIC)

2. திருமுழுக்கு யோவான் சபை அருட்சகோதரிகள் (John the Baptist)

3. திருக்குடும்ப சபை சகோதரர்கள் (Holy Family Brothers)

நிறுவனங்கள்:

1. Holy Angels Matriculation school, R.S Mangalam

2. Alphonsa Dispensery, Saveriarpattanam

3. St. Xavier's High school, Saveriarpattanam

4. R.C Primary school, Saveriarpattanam

5. R.C Primary school, Odaikal

6. R.C Primary school, Chithurvadi

பங்குப்பணியாளர் மற்றும் மறைவட்ட அதிபர்கள் பட்டியல்:

1. அருள்பணி. வின்சென்ட் அமல்ராஜ்

2. அருள்பணி. ஆரோக்கிய சாமி

3. அருள்பணி. சேசுராஜ் (நினைவில்)

4. அருள்பணி. ஜெயபதி

5. அருள்பணி. பாக்கியநாதன் (நினைவில்)

6. அருள்பணி. ஜோசப் லூர்து ராஜா

7. அருள்பணி. கிளமெண்ட் ராசா 

இராசசிங்க மங்களம் (ஆர்.எஸ் மங்களம்) மறைவட்டம்:

1992 ஆம் ஆண்டு தனி மறைவட்டமாக உருவாக்கப் பட்டது. இந்த மறைவட்டத்திற்குட்பட்ட பெரும்பாலான பங்குகளும், அவற்றின் கிராமங்களும் ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பின்னணியைக் கொண்டுள்ளன. தற்போது 16 பங்குகள் இந்த மறைவட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன. அவற்றின் பெயர்கள் பின்வருமாறு:

1. இராசசிங்க மங்களம்

2. செங்குடி

3. முத்துப்பட்டணம்

4. கொக்கூரணி

5. சின்னக்கீரமங்கலம்

6. இருதயபுரம்

7. காரங்காடு

8. முப்பையூர்

9. தொண்டி

10. குருமிலாங்குடி

11. சம்பை

12. திருவெற்றியூர்

13. A. R மங்களம்

14. அஞ்சுகோட்டை

15. இருதயபுரம்

16. கல்லடிதிடல்.

தோழமையுடன்

Fr. A. Clement Raja,
Vicar Forane & Parish Priest,
Mobile: 9159657647
Email: raja_clement@rediffmail.com

Church Address:

The Holy Spirit Church,
Rajasingamangalam,
Ramnad District,
623525,
Tamil Nadu, South India.

வழித்தடம்: கிழக்கு கடற்கரைச் சாலையில் தொண்டி -காரங்காடு -உப்பூர் -ஆர்.எஸ் மங்களம்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப்பணியாளர் அருள்பணி. கிளமெண்ட் ராசா அவர்கள்