747 புனித யூதா ததேயு ஆலயம், எல்க்ஹில், ஊட்டி

             

புனித யூதா ததேயு ஆலயம்

இடம்: எல்க்ஹில், ஊட்டி

மாவட்டம்: நீலகிரி

மறைமாவட்டம்: உதகமண்டலம்

மறைவட்டம்: உதகமண்டலம் 

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் மிக்கேல் திரவியம்

குடும்பங்கள்: 350

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி மற்றும் காலை 09:00 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 07:00 மணி

வியாழன் காலை 09:00 மணி மற்றும் மாலை 05:30 மணி நற்கருணை ஆராதனை, புனித யூதா ததேயு நவநாள் திருப்பலி

வெள்ளி காலை 07:00 மணி நற்கருணை ஆராதனை திருப்பலி

திருவிழா: மே மாதம் முதல் வாரத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. மைக்கில் லியோ சார்லஸ் (Late)

2. அருட்பணி. மைக்கேல் ஜெஃப்ரி

3. அருட்சகோதரி. ஜெயசீலி

4. அருட்சகோதரி. நிர்மலா

வழித்தடம்: ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து, எல்க்ஹில் 2கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 

Location map: https://g.co/kgs/xkLZoR

வரலாறு:

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ள எல்க்ஹில் பகுதியானது, புனித மரியன்னை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. எல்க்ஹில் புனித யூதா ததேயு ஆலயமானது 1984 ஆம் ஆண்டு அருட்பணி. கிரசாக் குன்நத் அவர்களால் கட்டப்பட்டது. 

1985 ஆம் ஆண்டு உதகமண்டலம் புனித மரியன்னை பங்கிலிருந்து பிரிந்து, எல்க்ஹில் புனித யூதா ததேயு ஆலயம் தனிப் பங்கானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தனர்.

அருட்பணி.‌ வின்சென்ட் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பலிபீடம் அழகுற (2019-2020 காலகட்டத்தில்) புதுப்பிக்கப்பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் மைக்கில் திரவியம் அவர்களால் 2022 மார்ச் மாதத்தில், ஆலயத்தின் பழையகூரை மாற்றப்பட்டு, புதிய மேற்கூரை போடப்பட்டது.

ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் மக்கள், ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 2கி.மீ தொலைவில் உள்ள இவ்வாலயம் வந்து ஜெபித்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.

நீங்களும் வாருங்கள்... புனித யூதா ததேயுவின் வழியாக இறைவனின் அற்புதத்தை பெற்றுச் செல்லுங்கள்.

பங்கில் உள்ள கெபி& குருசடி:

1. வேளாங்கண்ணி அன்னை கெபி, பிருந்தா மருத்துவமனை பகுதி

2. புனித ஆரோக்கிய மாதா குருசடி, ஜல்லிக்குழி

3. மாதா கெபி, புனித ஜூடு காலனி

4. ஆரோக்கிய அன்னை குருசடி, 

ஆனந்தகிரி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை

2. புனித யூதா ததேயு இளையோர் இயக்கம்

3. மறைக்கல்வி

4. பாடகற்குழு

நிறுவனம்:

Arul Nilayam Day Care Centre

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. J. பிரான்சிஸ் சேவியர் (July1985 -June1992)

2. அருட்பணி. A. அருள்சாமி (June1992 -July1995)

3. அருட்பணி.‌ ஜான் வியான்னி (July 1995-June1998)

4. அருட்பணி.‌ J. பெனடிக்ட் (June1998 -June2001)

5. அருட்பணி.‌ சிரில் லாசரஸ் (June2001-June2007)

6. அருட்பணி. ஆண்டனி மனுவேல் (June2007-June2009)

7. அருட்பணி.‌ ஆண்டனி செபாஸ்டின் (June2009-June2011)

8. அருட்பணி. பால் கஸ்பர் (June2011-June2012)

9. அருட்பணி. மரிய லூயிஸ் (June2012-June2017)

10. அருட்பணி. C. வின்சென்ட் (June2017-June2020)

11. அருட்பணி.‌ பிரான்சிஸ் மைக்கில் திரவியம் (July 4th 2020 முதல்..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் மைக்கில் திரவியம் அவர்கள்.