974 புனித சூசையப்பர் ஆலயம், இலால்குடி

          

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: இலால்குடி

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: இலால்குடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. நன்னிமங்கலம்

2. புனித உபகார மாதா ஆலயம், திருமங்கலம்

3. புனித சகாய மாதா ஆலயம், ஆங்கரை -சிறுதையூர்

4. புனித இஞ்ஞாசியார் ஆலயம், மேலகிருஷ்ணாபுரம்

5. புனித சவேரியார் ஆலயம், கீழகிருஷ்ணாபுரம்

6. புனித செபஸ்தியார் ஆலயம், அபிஷேகபுரம்

7. சென்னி வளநாடு

பங்குதந்தை பேரருள்பணி. R. பீட்டர் ஆரோக்கிய தாஸ் (இலால்குடி மறைவட்ட முதல்வர்)

குடும்பங்கள்: 400 (கிளைப்பங்குகள் சேர்த்து 800)

அன்பியங்கள்: 4

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 06:30 மணி மற்றும் காலை 08:30 மணி திருப்பலி

திங்கள், புதன், சனி மாலை 06:30 மணி திருப்பலி

செவ்வாய், வியாழன், வெள்ளி காலை 06:30 மணி திருப்பலி

திருவிழா: மே மாதம் 1-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. Christopher Jayaraj, SDB

2. Fr. Adaikalaraj, Kumbakonam Diocese

3. Fr. Paula Jayakumar, Kumbakonam Diocese

4. Fr. C. Peter, USA

5. Fr. Arpudaraj, HGN

6. Fr. Balthasar, Balasore Orissa

வழித்தடம்: திருச்சி -அரியலூர் வழித்தடத்தில் இலால்குடி அமைந்துள்ளது.

Church location map: St. Joseph's Church

https://maps.app.goo.gl/ZhdvcLRGCsBk4aE48

வரலாறு:

இலால்குடி பங்கானது இலால்குடியைச் சார்ந்த மணக்கால் என்ற இடத்தில்தான் 25.07.1939-ல் பங்கு தளமாக்கப்பட்டு, அருள்தந்தை T. ஆரோக்கியசாமி அவர்கள் முதல் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். 1985-ம் ஆண்டுவரை மணக்கால் தான், இலால்குடி பங்குக்குத் தலைமையிடமாக இருந்து வந்தது.

இலால்குடி தாலுக்காவாக உயர்த்தப்பட்டவுடன் நகரமாக விரிவடைந்து, மக்கள் தொகையும் பெருகி, புதிய குடியிருப்புகள் தோன்றின. கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வேலையினிமித்தமும், வசதியின் காரணமாகவும் இங்கு பெருமளவில் குடியேறினர். இவர்கள் யாவரும் மணக்கால் ஆலயத்துக்கு வழிபாட்டிற்குச் செல்ல சாத்தியப்படவில்லை. ஆகவே, மணக்கால் தனிப்பங்காகவும், இலால்குடி தனிப்பங்காகவும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது.

இலால்குடி தனிப்பங்காவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இலால்குடி வட்டத்தில், கும்பகோணம் மறைமாவட்டம் நடத்தும் தொழிற்பயிற்சிப்பள்ளி எதுவும் இல்லாததால், மணக்காலில் தொழிற்பயிற்சிப் பள்ளி துவங்கி, சுற்றிலுமுள்ள மாணவர்களின் சமூக முன்னேற்றத்திற்கு வழிகாண சலேசிய சபையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் I.T.I. ஆரம்பித்து, மணக்கால் பங்கின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாலும், இலால்குடி நகர கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் ஆன்மீகப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள இயலாதென்பதாலும், இலால்குடி தனிப்பங்காக்கப்பட்டது.

முன்னாள் ஆயர் மேதகு பவுல் அருள்சாமி ஆண்டகை அவர்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 1976-ம் ஆண்டிலேயே அருள்தந்தை P. ஜோசப் வழியாக இலால்குடி, திருவள்ளுவர் நகரில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கினார். அவருக்குப் பிறகு அருள்தந்தை A. லூர்துசாமி அவர்கள் மணக்கால் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டு, இலால்குடி-யில் பங்குத்தந்தை இல்லம் எழுப்பிக் கொண்டிருந்த போது இதய நோயால் இறைவனடி சேர்ந்தார். அவருக்குப் பின் அருள்தந்தை. தங்கசாமி (1982-1993) அவர்கள் பங்கின் பொறுப்பை ஏற்றார்.  பொலிவுற்று விளங்கும் புனித வளனார் ஆலயம், பங்குத் தந்தை இல்லம். சுற்றுச் சுவர் அனைத்தையும் சிறப்புற கட்டிமுடித்தார். 09.06.1985-ல் புதிய ஆலயம் ஆயர் மேதகு பவுல் அருள்சாமி அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 

1985ஆம் ஆண்டு முதல் இலால்குடி புனித சூசையப்பர் ஆலயமானது தனிப் பங்காக உருவானது. மணக்காலில் இருந்து கொண்டு இங்கு பணிபுரிந்த அருள்தந்தை தங்கசாமி அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். புனித சூசையப்பர் மக்கள் மன்றமும் அருள்தந்தை தங்கசாமி பணிக்காலத்தில் கட்டப்பட்டு, 20.04.1992 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பங்குத்தந்தை பேரருட்பணி. R. பீட்டர் ஆரோக்கிய தாஸ் அவர்களின் வழிகாட்டலில் ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, 29.09.2023 அன்று மேதகு ஆயர் F. அந்தோணிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இலால்குடி மறைவட்டம்:

கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகை பணிபுரிந்த போது, போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு அதுவரையில் மறைவட்ட தலைமையகமாக இருந்து வந்த புறத்தாகுடி மாற்றப்பட்டு, 1990 ஆம் ஆண்டில் இலால்குடி மறைவட்டமாக அறிவிக்கப்பட்டு, இலால்குடி பங்குதந்தை அருட்பணி. தங்கசாமி அடிகளார் மறைவட்ட முதல்வராக பணியமர்த்தப்பட்டார்.

இலால்குடி மறைவட்ட பங்குகள்:

1. இலால்குடி

2. புறத்தாக்குடி

3. பெரியவர்சீலி

4. கொன்னைக்குடி

5. உத்தமனூர் புதூர்

6. கொணலை

7. கபிரியேல்புரம்

8. மணக்கால்

9. முசிறி

10. இருங்களூர்

11. இராமநாதபுரம் காட்டூர்

12. K. V. பேட்டை

13. திருக்காவலூர்

14. தொட்டியம்

15. அமல ஆசிரமம்

16. சமயபுரம்

17. டோல்கேட்

18. தாத்தையங்கார்பேட்டை

19. சத்திரம் -மேல வாளாடி

20. கல்பாளையம்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. கத்தோலிக்க சங்கம்

3. பீடச்சிறார்

4. பாடகற்குழு

5. இளைஞர் மன்றம்

6. பங்குப்பேரவை.

கன்னியர் இல்லம்:

சென்னை புனித அன்னாள் சபை கன்னியர் சிறப்புற பணிபுரிந்து வருகின்றனர்.

நிறுவனங்கள்:

புனித அன்னாள் ஆங்கிலப்பள்ளி

புனித அன்னாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி

புனித வளனார் தையல் மற்றும் தட்டச்சுப் பயிலகம்

குடந்தை மறைமாவட்ட பள்ளி

Lalgudi Christian Union

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்

1. அருட்பணி.‌ P. தங்கசாமி (1982-1993)

2. அருட்பணி.‌ R. S. அந்தோணி சாமி (1993-1999)

3. அருட்பணி. A. மைக்கேல் சாமி (1999-2001)

4. அருட்பணி. M. ஸ்தனிஸ்லாஸ் (2001-2007)

5. அருட்பணி. A. பாக்கியசாமி (2007-2013)

6. அருட்பணி. M. A. தனராஜ் (2013-2019)

7. அருட்பணி. R. பீட்டர் ஆரோக்கிய தாஸ் (2019----)

வல்லமைமிகு இலால்குடி புனித சூசையப்பர் ஆலயம் வாருங்கள்... புனித சூசையப்பரின் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை பேரருட்பணி.‌ பீட்டர் ஆரோக்கிய தாஸ் அவர்கள்.

சிறப்புத் தகவல்கள்: முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. தங்கசாமி அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர் டோமி அவர்கள்.