472 சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயம், கடகத்தூர்


சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயம்

இடம் : கடகத்தூர், கடகத்தூர் அஞ்சல், தருமபுரி தாலுக்கா, 636801

மாவட்டம் : தருமபுரி
மறைமாவட்டம் : தருமபுரி
மறைவட்டம் : தருமபுரி

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித அடைக்கல அன்னை ஆலயம், KN சவுளூர்
2. புனித குழந்தை தெரசாள் ஆலயம், கொளகத்தூர்

பங்குத்தந்தை : அருட்பணி. A. B. அருள் ஜோதி

குடும்பங்கள் : 105
அன்பியங்கள் : 6

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு : காலை 08.00 மணிக்கு திருப்பலி.

திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 06.30 மணிக்கு திருப்பலி

சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை.

திருவிழா : ஆகஸ்ட் 15 ஆம் தேதி.

வழித்தடம் : தருமபுரியிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியாக 6கி.மீ தூரத்தில் கடகத்தூர் உள்ளது.

Location : https://maps.app.goo.gl/6js9mqkX45TmZCjA7

வரலாறு :

பசுமைமையும், செழுமையும் நிறைந்த ஊர் கடத்தூர். இவ்வூரில் எழில்மிகு தோற்றமும், அதிசயத்தின் விளைநிலமுமாய் அமைந்துள்ள சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்.

கி.பி.1872 ஆம் ஆண்டு காலகட்டத்தில், இவ்வூர் கடை கட்டூர் என்று அழைக்கப்பெற்றது. காலப்போக்கில் மாற்றம் பெற்று கடகத்தூர் என இன்றளவும் அழைக்கப் படுகிறது. தொடக்க காலத்தில் கிறிஸ்துவர்களால் ஆலயம் அமைக்கப்பட்டு, புனித செபஸ்தியார் ஆலயம் (சர்வேஷ்வரன் ஆலயம்) என்று போற்றப்பட்டு வந்தது.

கி.பி.1872ம் ஆண்டு காலங்களில் அருட்பணி. பினோ MEP அவர்களாலும், கி.பி.1874ம் ஆண்டு காலங்களில் அருட்பணி. டூப்பா MEP அவர்களாலும், 1919-1930ம் ஆண்டுகளில் கோவிலூர் பங்குதந்தையர்களாலும் (MEP சபை குருக்கள்) இவ்வாலயம் பராமரிக்கப்பட்டு வந்தது.

1930 ம் ஆண்டில் சேலம் மறைமாவட்டம் உதயமாகவே, கடகத்தூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, சேலம் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வந்தது. கடகத்தூர் பங்கின் முதல் பங்குதந்தை அருட்பணி. லூயிஸ் அகஸ்து செவாலியர் (MEP) ஆவார்.

1932 ம் ஆண்டில் சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஆலயம் அழகுற கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

1954 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயப் பங்குப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு, இன்று வரையிலும் ஆகஸ்ட் 15 அன்று, பங்குப் பெருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1997ம் ஆண்டில் தருமபுரி மறைமாவட்டம் உதயமாகவே, கடகத்தூர் பங்கு சேலம் மறைமாவட்டத்திலிருந்து தருமபுரி மறைமாவட்டத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து, இன்று வரையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், தற்போது பங்குதந்தை அருட்பணி. A. B. அருள் ஜோதி அவர்களின் முயற்சியால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 17.02.2020 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ் துரைராஜ் அவர்களால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.

பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. மரியாயின் சேனை
2. பீடச்சிறுவர்கள்
3. பாடகற்குழு

பங்கின் நிறுவனங்கள் :
1. St. Fathima middle School
2. St. Fathima Convent
3. St. Fathima Hospital
4. SMMI Sisters House.

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள் :
1. அருட்பணி. லூயிஸ் அகஸ்து செவாலியர் MEP (1930-1935)
2. அருட்பணி. சோவினே MEP (1935) பொறுப்பு
3. அருட்பணி. புளிக்கல் (1936-1937)
4. அருட்பணி. அலெக்ஸாண்டர் ஃசாவெளி (1937-1942)
5. அருட்பணி. டி.சி.ஜோசப் (1942-1944)
6. அருட்பணி. குரியாகோஸ் குருசங்கள் (1944-1949)
7. அருட்பணி. இராபர்ட் (1949-1950)
8. அருட்பணி. A. அந்தோணிசாமி (1950-1957)
9. அருட்பணி. கின்கெனல் MEP (1957-1958)
10. அருட்பணி. P. A. சக்கரையாஸ் (1958-1960)
11. அருட்பணி. T. C.ஜோசப் (1960-1968)
12. அருட்பணி. A. X. இருதயம் (1968-1971)
13. அருட்பணி. விக்டர் சுந்தர்ராஜ் (1974-1975)
14. அருட்பணி. M. அருள்சாமி (1975-1981)
15. அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் (1981-1982)
16. அருட்பணி. M. அந்தோணிசாமி (1982-1987)
17. அருட்பணி. K. P. சுவாக்கின் (1987-1991)
18. அருட்பணி. A. X. இருதயம் (1991-1995)
19. அருட்பணி. S. மரிய ஜோசப் (1995-1999)
20. அருட்பணி. M. தோமினிக் (1999-2001)
21. அருட்பணி. P. சேவியர் (2001-2004)
22. அருட்பணி. A. சூசைராஜ் (2004-2006)
23. அருட்பணி. S. சவரியப்பன் (2006-2008)
24. அருட்பணி. M. அந்தோணிசாமி (2009-2013)
25. அருட்பணி. M. ஜார்ஜ் (2013-2016)
26. அருட்பணி. I. இராபர்ட் (2016-2017)
27. அருட்பணி. A. B. அருள் ஜோதி (2017- முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. A. B. அருள்ஜோதி அவர்கள்.