370 புனித அந்தோணியார் ஆலயம், கோனசேரி


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : கோனசேரி, சூரியகோடு(PO).

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : வேங்கோடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய கார்மல் அன்னை ஆலயம், வாவறை.

பங்குத்தந்தை : அருட்பணி ஆன்றனி சேவியர்
இணை பங்குத்தந்தை : அருட்பணி சுனில்

குடும்பங்கள் : 45
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

செவ்வாய்க்கிழமை திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

திருவிழா : ஜூன் மாதத்தில் மூன்று நாட்கள்.

மண்ணின் மைந்தர் :
அருட்பணி லாரன்ஸ் (late)
அருட்பணி அருண் (ஸ்ரீலங்கா)

வழித்தடம் : மார்த்தாண்டம் - களியக்காவிளை - கோனசேரி.

பேருந்துகள் : மார்த்தாண்டத்திலிருந்து 83A, 82A, 82K.

கோனசேரி ஆலய வரலாறு :

வாவறை ஆலயத்தை தாய் பங்காகக் கொண்டு அங்கு வழிபாடுகளுக்கு சென்று கொண்டிருந்த வாறுதட்டு, திட்டங்கனாவிளை, கல்லங்குளம், தையாலுமூடு ஆகிய இடங்களில் உள்ள இறை மக்களுக்கு, வாவறை ஆலயம் தொலைவாக இருந்ததால் 1910 -ம் ஆண்டு பொன்னப்பநகர் பக்கம் உள்ள ஓட்டன்பாறை பொற்றையடியில் ஓலைப்புரை (ஓலையாலான கட்டடம்) அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினர். அவ்விடத்தில் கல்லங்குளத்தைச் சார்ந்த திரு. சுவாமிநாதன் என்பவர் உபதேசியாராக இருந்து ஜெபங்களை நடத்தி வந்தார்.

நாளடைவில் அந்த ஓலைக்கூரை பழுதடைந்த போது, கோனசேரி தாணிவிளையில் திரு. மரியராமன் அவர்கள், மேல் அதிகாரிகளின் அனுமதி பெற்று, தனது சொந்த நிலத்தை இலவசமாகக் கொடுத்து ஜெபம் நடத்த ஓலைக்கூரை ஆலயம் கட்டினார். காலப்போக்கில் வாவறை பங்குத்தந்தையர் இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றினர். அப்போது இவ்வாலயத்தில் இயேசுவின் பாடுபட்ட சுரூபமூம், அன்னை மரியாளின் மாசற்ற இதய சுரூபமும் இருந்தன.

1970 -ம் ஆண்டு அருட்பணி பர்ணபாஸ் அடிகளார், அவரது நண்பர்களிடமிருந்து நிதி சேகரித்து மண்சுவரில் ஓலைக்கூரை வேய்ந்து ஆலயம் கட்டினார். கோனசேரி மூவேலியில் தாசன் என்பவர் அப்போது நிதி சேகரித்து புனித அந்தோனியார் ஆலயத்தை வடிவமைத்து, மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி ஆண்டகை அர்ச்சிப்பு செய்தார்.

முதல் திருவிழாவின் போது சுமார் 120 பேர் திருமணம் சீர்படுத்தப்பட்டும் (முறைப்படுத்தப் படுதல்), முதல் திருவிருந்து பெற்றும் கிறிஸ்துவில் பயனடைந்தனர்.

செவ்வாய்க்கிழமைகளில் புனித அந்தோணியார் நவநாள் மற்றும் திருப்பலி அருட்பணி பர்ணபாஸ் அடிகளாரால் நடத்தப்பட்டு வந்தது.

காலப்போக்கில் ஆலயம் பழுதடைந்ததால் 2006 -ம் ஆண்டு அருட்பணி மனோகியம் சேவியர் அவர்களின் வழிகாட்டுதலிலும், 2007 -ம் ஆண்டு அருட்பணி வின்சென்ட் ராஜ் அவர்களின் முழு முயற்சியுடன் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது. கோனசேரி பங்கு மக்கள், வாவறை பங்கு மக்கள் மற்றும் மறை மாவட்ட நிதியுதவியுடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு அருட்பணி சேகர் மைக்கேல் அவர்களின் பணிக்காலத்தில் 12-06-2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி மரிய இராஜேந்திரன் அவர்களின் முயற்சியால் ஆலய பலிபீடம் அழகுற புதுப்பிக்கப் பட்டது.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி சேவியர் மற்றும் இணை பங்குத்தந்தை அருட்பணி சுனில் ஆகியோரின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கோனசேரி இறை சமூகம்.

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி ஆன்றனி சேவியர் அவர்களின் வழிகாட்டுதலில், இணை பங்குத்தந்தை அருட்பணி சுனில் அவர்கள் தகவல்களை திரட்டி கொடுத்துள்ளார். இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!