233 தூய சவேரியார் ஆலயம், தூத்துக்குடி


தூய சவேரியார் ஆலயம்

இடம் : T சவேரியார்புரம் (சின்னகோவா)

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

பங்குத்தந்தை : அருட்தந்தை சேசு நசரேன்

குடும்பங்கள் : 650
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மற்றும் மாலை 05.30 மணிக்கு

தினமும் காலை 06.00 மணிக்கு திருப்பலி

வியாழன் மாலை 06.30 மணிக்கு தூய சவேரியார் நவநாள், திருப்பலி

திருவிழா : நவம்பர் மாதம் 24 ஆம் தேதி ஆரம்பித்து டிசம்பர் மாதம் 03 ஆம் தேதி நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.

சிறப்புகள் :

கி.பி 1888 ஆம் ஆண்டு உருவானது இவ்வாலயம்.

துவக்க காலத்தில் இன்னாசியார்புரம் தூய இஞ்ஞாசியார் ஆலயத்தின் கிளைப் பங்காகவும், தொடர்ந்து தாளமுத்துநகர் புனித ஜெபமாலை மடுமாதா ஆலயத்தின் கிளையாகவும் இருந்து, பின்னர் தனிப்பங்காக உயர்ந்தது.

அருட்தந்தை C. ஜார்ஜ் ஆலிபன் அவர்கள் பணிக்காலத்தில் இவ்வாலயத்தின் 125 வது ஆண்டு விழா 2013 ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப் பட்டது.

125 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் எட்டு அம்ச செயல் திட்டமானது பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் ஆலிபன் அவர்களால் உருவாக்கப்பட்டு பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டது.

முக்கிய செயல் திட்டங்கள்

தூய பிரான்சிஸ் சவேரியாரின் புனிதப் பண்டம் இங்கு வைக்கப்பட்டு சிவகங்கை ஆயர் மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

ரோமிலும் கோவாவிலும் உள்ள பலிபீடங்களின் மாதிரியை இணைத்து அற்புத பீடம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

சீனாவில் உள்ளது போன்ற 8 அடி உயர தூய பிரான்சிஸ் சவேரியார் திருசொரூபம் வைக்கப்பட்டது.

சின்னகோவா கல்யாண மண்டபம், சின்னகோவா புனிதப் பொருட்கள் விற்பனை நிலையம், சின்னகோவா கலையரங்கம் ஆகியன கட்டப்பட்டன.

வைடூரிய விழா மலர் வெளியிடப்பட்டது.

"இந்தக் கோவிலை என் மாட்சியால் நிரப்புவேன் - ஆகாய் 2:7" என்ற இறைவார்த்த்தை மனதில் கொண்டு, அருட்தந்தை ஜார்ஜ் ஆலிபன் அவர்கள் தனது பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, இப்பங்கின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார்.

ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் உள்ளன.

மேலும் தூய அந்தோணியார் கெபி, தூய தோமையார் கெபி, தூய குழந்தை தெரசாள் கெபி, வேளாங்கண்ணி மாதா கெபி, மிக்கேல் அதிதூதர் கெபி ஆகியனவும் இவ்வாலயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலயத்திற்கு சின்னகோவா என்கிற சிறப்புப் பெயரும் உண்டு.

வழித்தடம் :

தூத்துக்குடி பேருந்துநிலையம் - திரு இருதய மருத்துவமனை (American hospital) - கிழக்கு கடற்கரை சாலை (ECR road ) - T. சவேரியார்புரம்.