45 லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி


லூர்து அன்னை ஆலயம்.

இடம் : லூர்துகிரி.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்குதளம்

கிளைகள்:
1. தூய ஜெபமாலை அன்னை ஆலயம், பிலாவிளை (அண்டுகோடு)
2. புனித யோசேப்பு ஆலயம், மலமாரி
3. புனித அந்தோணியார் ஆலயம், மஞ்சாலுமூடு.

குடும்பங்கள் : 500
அன்பியங்கள் : 14

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.

பங்குத்தந்தை (2018): அருட்பணி சுஜின்.

திருவிழா : பெப்ரவரி மாதத்தில் நடைபெறும்.

வரலாறு :

1930 ஆம் ஆண்டு கோவில்விளை என்னும் பகுதியில் திருமுழுக்கு பெற்ற ஒரே ஒரு நபர் மற்றும் அருட்பணி. குருசுமிக்கேல் ஆகியோரின் அயராத உழைப்பினால், கோவில்விளையில் தூய லூர்தன்னை ஆலயம் ஓலைக் கொட்டகையில் துவக்கப் பட்டது.

ஒருசில ஆண்டுகளுக்கு பின்னர் நல்லுள்ளம் கொண்ட பலரின் முயற்சியினாலும், அருட்பணி. மிக்கேல் குருசு அவர்களின் வழிகாட்டுதலாலும், அசிசி சகோதரிகளின் உதவியாலும் கோவில்விளையில் துவக்கப்பட்ட ஆலயம் சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள லூர்துகிரியில் தென்னை ஓலையால் வேயப்பட்ட ஆலயமாக எழுப்பப்பட்டு மேதகு ஆயர் லாரன்ஸ் பெரைரா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

1936 ஆம் ஆண்டு திரிதுவபுரம் பங்கிலிருந்து அருமனை பங்கு பிரிந்ததால், அருமனையின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

1975 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 

அருட்பணி. அருளப்பன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.