570 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், பூவிருந்தவல்லி

      

வேளாங்கண்ணி அன்னை ஆலயம்

இடம் : மேல்மாநகர், பூவிருந்தவல்லி, சென்னை -56

மாவட்டம் : திருவள்ளூர் 

மறைமாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம் : ஆவடி

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. M. ஆரோக்கிய சார்லஸ், MMI

டீக்கன். அருள்சகோ. நவீன் குமார் 

குடும்பங்கள் : 183

அன்பியங்கள் : 8

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணி மற்றும் காலை 08.15 மணி. 

மாதத்தின் மூன்றாம் ஞாயிறு காலை 10.00 மணிக்கு திருப்பலி (ஆங்கிலம்) 

திங்கள், செவ்வாய், வியாழன், சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு. 

மாதத்தின் முதல் வார சிறப்பு வழிபாடுகள் :

முதல் செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி (புனித அந்தோனியார் கெபி, நாசரேத்பேட்டை) 

முதல் புதன் மாலை 06.30 மணிக்கு சகாய மாதா நவநாள் திருப்பலி. 

முதல் வியாழன் மாலை 06.30 மணிக்கு குழந்தை இயேசுவின் நவநாள், நோயாளிகள் முதியோர்களுக்கான திருப்பலி. 

முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு ஒரு மணி நேர நற்கருணை ஆராதனை தொடர்ந்து திருப்பலி.

முதல் சனி : மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, தேர்பவனி, திருப்பலி. 

திருவிழா : செப்டம்பர் மாதம் 8 ம் தேதி. 

வழித்தடம் :

பேருந்துகள் தடம் எண் :

தாம்பரம்: 66

தி. நகர் : 154

பிராட்வே : 54

அண்ணா சதுக்கம் : 25G

ஆவடி: 65

ஸ்ரீபெரும்புதூர் : 579

திருவான்மியூர் : 549

வள்ளலார்நகர் : 37

திருவெற்றியூர் : 101

செங்குன்றம் : 62.

நிறுத்தம் : பூவிருந்தவல்லி.

Location map : ANNAI VELANKANI CHURCH, Melma Nagar, Poonamallee, Chennai, Tamil Nadu 600056 https://goo.gl/maps/2DpwvjVs8SctvLVK9

வரலாறு :

கரையான்சாவடி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் ஒருபகுதியாக இருந்த மேல்மாநகரில் 8 குடும்பங்கள் வசித்து வந்தன. 1970 காலகட்டத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. ஜான் கொட்டாரம் அவர்களால் மேல்மாநகரில் சிறு ஆலயம் ஒன்று கட்டப் பட்டது. 

கி.பி 1988 ஆம் ஆண்டு வரை பூவிருந்தவல்லி மேல்மாநகர் பகுதியில் 8 கத்தோலிக்க குடும்பங்களே வாழ்ந்து வந்தனர். இவர்கள் வழிபாடுகளில் பங்கேற்க இப்பகுதியில் ஆலயம் இல்லாமல் இருந்தது. இவ்வேளையில் திருஇருதய சபையின் அருள்சகோதரர்கள் இவர்களுக்கு உதவி புரிந்து வந்தனர். 

தொடர்ந்து சென்னை மயிலை பேராயர். மேதகு அருள் தாஸ் ஜேம்ஸ் அவர்களின் உதவியுடன், அமல மரியின் தூதுவர் சபை (MMI) நிறுவனர் பேரருள்பணி. Dr. J. E. அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் MMI சபை குருக்கள் மேல்மாநகர் மக்களின் ஆன்மீகத் தேவையை கவனித்து வந்தனர். 

19.06.2000 அன்று மேல்மாநகர் பங்கின் பொறுப்பை MMI சபையினர் ஏற்றுக் கொண்டு, முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. டேவிட் குழந்தைநாதன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இது முதல் மேல்மாநகர் வளர்ச்சியடையத் துவங்கியது. இறை மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. 

அருள்பணி. ரோலண்ட் MMI அவர்களின் பணிக்காலத்தில் 29.06.2006 அன்று பேரருள்பணி. J. E. அருள்ராஜ் MMI (MMI & DMI Founder) அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.

மக்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் பங்குத்தந்தை அருள்பணி. J. தெரஸ் ராஜ் MMI அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் கட்டப்பட்டு, 26.01.2010 அன்று சென்னை மயிலை உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு. Dr. D. லாரன்ஸ் பயஸ் அவர்களால் புனிதப் படுத்தப்பட்டு, பேரருள்பணி. Dr. J. E. அருள்ராஜ் மற்றும் அருள்பணி. J. ரோலண்ட் MMI ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. 

பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கியநாதன் அவர்களின் முயற்சியால் 08.09.2013 அன்று ஜெபமாலை தோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அழகுற கட்டப்பட்டு 02.05.2015 அன்று அப்போதைய சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முதன்மைகுரு அருள்பணி. S. J. அந்தோனிசாமி அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. இதே ஆண்டிலே ஆலயத்திற்கு மேலும் நிலம் வாங்கப்பட்டது. 

2018 ஆம் ஆண்டில் அழகிய லூர்து மாதா கெபி மற்றும் கொடிமரம் கட்டப்பட்டது. 

தொடர்ந்து MMI சபை அருள்பணியாளர்களின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது மேல்மாநகர் இறைசமூகம்.

பங்கின் கல்விக்கூடம் :

St. Joseph's Higher secondary school :

DMI சபை அருள்சகோதரிகளால் நடத்தப் படுகிறது. 

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்குப்பேரவை

2. மரியாயின் சேனை 

3. இளைஞர்குழு 

4. பீடச்சிறார் 

5. மறைக்கல்வி 

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

7. நட்பின் கரங்கள் இயக்கம் 

8. அன்பிய ஒருங்கிணைப்பு இயக்கம். 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. டேவிட் குழந்தைநாதன் (2001)

2. அருள்பணி. டேவிட், MMI (2001-2002)

3. அருள்பணி. சகாய ஜோசப் (2002-2003)

4. அருள்பணி. அசோக் குமார் (2003-2005)

5. அருள்பணி. ரோலண்ட், MMI (2005-2009)

6. அருள்பணி. தெரஸ் ராஜ், MMI (2009-2012)

7. அருள்பணி. ஆரோக்கியநாதன், MMI (2012-2014)

8. அருள்பணி. ரெக்ஸ் பாபு, MMI (2014-2016)

9. அருள்பணி. ஆன்றனி ஜோசப், MMI (2016-2019)

10. அருள்பணி. ஆரோக்கிய சார்லஸ், MMI (2019 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கிய சார்லஸ், MMI.