753 புனித அந்தோணியார் ஆலயம், விப்பேடு

  

புனித அந்தோணியார் ஆலயம்

இடம்: விப்பேடு

மாவட்டம்: காஞ்சிபுரம்

மறைமாவட்டம்: செங்கல்பட்டு

மறைவட்டம்: காஞ்சிபுரம்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. அருள் வசந்தராஜ், HGN

குடும்பங்கள்: 75

அன்பியங்கள்: 5

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணிக்கு

திங்கள் காலை 06:30 மணிக்கு

செவ்வாய் மாலை 06:30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர் 

திருவிழா: ஜூன் 13-ம் தேதி நிறைவு பெறும் வகையில் மூன்று நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஜெயசீலன், OMI

2. அருட்சகோதரி. மேரி இராயப்பன், FMM

3. அருட்சகோதரி. அருள் மெசியா, FBS

4. அருட்சகோதரி. லீமா, FSJ

5. அருட்சகோதரி.‌ மெசியா லோகநாயகி, St. Ann's Madhavaram

வழித்தடம்: காஞ்சிபுரம் -வந்தவாசி வழித்தடத்தில், செவிலிமேடு -விப்பேடு

Location map: https://g.co/kgs/n32oWW

வரலாறு:

1932 ஆம் ஆண்டில் விப்பேடு கிராமத்தில் வசித்து வந்த சில கத்தோலிக்க கிறித்தவ மக்களுக்காக சிறு குடிசை ஆலயம் கட்டப்பட்டது. இந்த கத்தோலிக்க குடும்பங்களின் ஆன்மீகத் தேவைக்காக அருட்பணியாளர்களின் தேவை உணரப்பட்டது. ஆகவே பிரெஞ்சு வேத போதக சபையைச் சேர்ந்த (MEP fathers) அருட்பணியாளர்கள் ஒட்டன்தாங்கல் பங்கிலிருந்து அவ்வப்போது விப்பேடு வந்து, திருப்பலி நிறைவேற்றி சென்றனர். 

1943 ஆம் ஆண்டு மயிலை உயர் மறைமாவட்டமானது (MEP fathers) பிரெஞ்சு வேத போதக சபையிடமிருந்து பங்கின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. விப்பேடு ஆலயமானது ஒட்டன்தாங்கல் பங்கிலிருந்து, காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. பழைய குடிசை ஆலயம் மாற்றப்பட்டு 20.02.1966 ஆம் ஆண்டு பேராயர் Dr. L. மத்தியாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1968 ஆம் ஆண்டு முதல் OMI சபை அருட்பணியாளர்கள் பங்கின் பொறுப்பேற்று  வழிநடத்தினர். 2002 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் ஆளுகையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

14.05.2006 அன்று விப்பேடு தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி.‌ D. சார்லஸ் சுரேஷ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். ஆலயம் பெரிதாக கட்ட வேண்டும் என்ற நோக்கில் பழைய ஆலயம் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 300மீட்டர் தொலைவில், தற்போதைய புதிய ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி. D. சார்லஸ் சுரேஷ் அவர்களின் வழிகாட்டலில் கட்டப்பட்டு, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. A. நீதிநாதன், D.D., அவர்களால் 10.05.2011 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு முதல் HGN சபை அருட்பணியாளர்கள், விப்பேடு பங்கின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வழிநடத்தி வருகின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. பாலர் சபை

3. புனித அந்தோனியார் இளையோர் இயக்கம்

4. கோல்பிங் இயக்கம்

5. புனித வின்சென்ட் தே பவுல் சபை

6. பெண்கள் பணிக்குழு

7. பாடகற்குழு

8. மறைக்கல்வி

பங்கின் பள்ளிக்கூடங்கள்:

RCM தொடக்கப்பள்ளி

RCM உயர்நிலைப் பள்ளி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. D. சார்லஸ் சுரேஷ் (2006-2011)

2. அருட்பணி. F. சுதாகர் (2011-2016)

3. அருட்பணி. A. சகாயராஜ் (2016-2018)

4. அருட்பணி. அந்தோணி முத்து, HGN (2018-2020)

5. அருட்பணி.‌ பெஞ்சமின், HGN (2020-2021

6. அருட்பணி.‌ அருள் வசந்தராஜ், HGN (2021 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ அருள் வசந்தராஜ், HGN